CSK vs SRH : முதல் வெற்றி யாருக்கு? ஜெயிக்கப்போவது யாரு? – முன்னோட்டம், புள்ளிவிவரம், பிட்ச் ரிப்போர்ட் இதோ

CSKvsSRH
- Advertisement -

ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் 2022 தொடரில் மார்ச் 9-ஆம் தேதியன்று 2 போட்டிகள் ரசிகர்களை மகிழ்விக்க உள்ள நிலையில் மதியம் 3.30 மணிக்கு துவங்கும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. மும்பையில் உள்ள டிஒய் பாட்டில் மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டி ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

csk vs srh

- Advertisement -

ஏனெனில் இந்த 2 அணிகளுமே இதுவரை பங்கேற்ற போட்டிகளில் அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்து புள்ளி பட்டியலில் அதலபாதாளத்தில் தள்ளாடிக் கொண்டிருக்கின்றன. எனவே இந்த போட்டியில் நிச்சயம் வென்றே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் இரு அணிகளும் மோதும் என்பதால் இப்போட்டியில் அனல் பறக்கும் என நம்பலாம்.

முன்னோட்டம்:
சென்னை: இந்த தொடரில் இதற்கு முன் ஒரு முறை கூட கேப்டன்ஷிப் செய்த அனுபவம் இல்லாத ரவீந்திர ஜடேஜா தலைமையில் களமிறங்கிய சென்னை யாரும் எதிர்பாராத வண்ணம் இதுவரை பங்கேற்ற 3 போட்டிகளிலும் அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்து வரலாற்றிலேயே முதல் முறையாக ஹாட்ரிக் தோல்விகளைப் பதிவு செய்து பரிதாப சாதனை படைத்தது. கடந்த 2008 முதல் எம்எஸ் தோனி தலைமையில் வெற்றிகரமாக விளையாடி வந்த அந்த அணி இது போன்றதொரு தோல்வியை சந்திக்காத நிலையில் இந்த ஹாட்ரிக் தோல்வியில் இருந்து மீண்டெழுந்து கோப்பையை வெல்லுமா என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

CSK-1

அந்த அணிக்கு தீபக் சஹர் காயத்தால் விலகியது மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்திய நிலையில் அணியில் இருக்கும் இதர வீரர்களும் அதை ஈடு செய்யும் வகையில் சிறப்பாக செயல்படாமல் சென்னையை கைவிட்டார்கள். அதைவிட பேட்டிங்கில் அந்த அணி பெரிதும் நம்பியிருக்கும் இளம் தொடக்க வீரர் ருதுராஜ் இதுவரை 0, 1, 1 என ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி வரும் நிலையில் மொய்ன் அலி, கேப்டன் ரவீந்திர ஜடேஜா போன்றவர்கள் பெரிய ரன்களை அடிக்க தவறுயது அந்த அணியின் தோல்விக்கு முக்கிய பங்காற்றுகிறது.

- Advertisement -

தற்போதைய நிலைமையில் அந்த அணிக்கு பேட்டிங்கில் எம்எஸ் தோனி, உத்தப்பா, ஷிவம் துபே ஆகியோர் மட்டுமே ஆறுதலாக இருந்து வருகின்றனர். எனவே இவர்களுடன் ருதுராஜ் போன்ற வீரர்களும் பொறுப்பை உணர்ந்து ரன்கள் அடித்தால் மட்டுமே சென்னையால் வெற்றிக்கு திரும்ப முடியும். மேலும் பந்துவீச்சில் டுவைன் பிராவோ, பிரிடோரிஸ் ஆகியோர் சிறப்பாக பந்துவீசி வரும் நிலையில் அவருக்கு உறுதுணையாக இதர பவுலர்களும் கைகோர்த்து முதல் வெற்றிக்காக போராட வேண்டிய அவசியம் உள்ளது.

RR vs SRH

ஹைதெராபாத்: கடந்த வருடம் டேவிட் வார்னரை கழற்றி விட்ட ஹைதராபாத் அணி நிர்வாகம் அதற்கான பலனை இதுவரை கேன் வில்லியம்சன் தலைமையில் அனுபவித்து வருகிறது என்றே கூறலாம். இந்த வருடம் அந்த அணி இதுவரை பங்கேற்ற 2 போட்டிகளிலும் மிகப்பெரிய தோல்வியை சந்தித்ததால் மோசமான ரன்ரேட் காரணமாக புள்ளிப் பட்டியலில் 10-வது இடத்தில் உள்ளது.

- Advertisement -

அந்த அணியில் நடராஜன், புவனேஸ்வர் குமார், வாஷிங்டன் சுந்தர் என வேகப்பந்து வீச்சு ஓரளவு சிறப்பாக இருந்தாலும் பேட்டிங் படுமோசமாக உள்ளது. கேப்டன் கேன் வில்லியம்சன், நிக்கோலஸ் பூரன், மார்க்ரம் என தரமான வீரர்கள் இருந்த போதிலும் இதுவரை அவர்களின் பேட்டிலிருந்து பெரிய ரன்கள் வராதது அந்த அணியின் தோல்விக்கு பங்காற்றியது. எனவே பேட்டிங்கில் தேவையான மாற்றங்களுடன் அனைவரும் ஒன்று சேர்ந்து பெரிய ரன்களை குவித்து முதல் வெற்றியை பதிவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் அந்த அணியும் உள்ளது.

cskvssrh

முதல் வெற்றி, கடைசி இடம் யாருக்கு:
தற்போதைய நிலவரப்படி புள்ளி பட்டியலில் சென்னை 8-வது இடத்திலும் ஹைதராபாத் 10-வது இடத்திலும் உள்ளது. இந்த போட்டியில் எப்படியும் ஏதேனும் ஒரு அணி வெற்றி பெறும் என்பதால் வெற்றி பெறும் அணி கண்டிப்பாக மேல் நோக்கி செல்ல உள்ளது. மறுபுறம் தோல்வி அடையும் அணி கண்டிப்பாக 10வது இடத்துக்கு சொந்தமாகிவிடும். ஏனெனில் இந்த 2 அணிகளுக்குமே தற்போது நெட் ரன்ரேட் என்பது படுமோசமாக உள்ளது.

- Advertisement -

புள்ளிவிவரம்:
1. ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் இவ்விரு அணிகளும் இதுவரை மொத்தம் 17 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் 13 போட்டிகளில் வென்ற சென்னை வலுவான அணியாக காட்சி அளிக்கிறது. ஹைதராபாத் வெறும் 4 போட்டிகளில் மட்டுமே வென்றது.

srh

2. கடைசியாக இவ்விரு அணிகள் மோதிய 5 போட்டிகளில் சென்னை 4 வெற்றிகளையும் ஹைதராபாத் ஒரே ஒரு வெற்றியை மட்டுமே பதிவு செய்துள்ளன. மேலும் கடந்த 2021இல் இந்த 2 அணிகளும் மோதிய 2 போட்டிகளில் சென்னை வென்று மீண்டும் வலுவான அணியாக தன்னை நிரூபித்துள்ளது.

உத்தேச அணிகள்:
சென்னை: ருதுராஜ் கைக்வாட், ராபின் உத்தப்பா, மொய்ன் அலி*, அம்பத்தி ராயுடு, ரவீந்திர ஜடேஜா (கேப்டன்), சிவம் துபே, எம்எஸ் தோனி (கீப்பர்), ராஜ்வர்தன் ஹங்ரேக்கார்/துஷார் தேஷ்பாண்டே, ட்வயன் பிரிடோரிஸ்*, கிறிஸ் ஜோர்டான்*, ட்வயன் ப்ராவோ*. (* = வெளிநாட்டு வீரர்கள்)

CSK-1

ஹைதெராபாத்: அபிஷேக் சர்மா, கேன் வில்லியம்சன்* (கேப்டன்), ராகுல் திரிபாதி, நிக்கோலஸ் பூரான்* (கீப்பர்), ஐடன் மார்க்ரம்*, அப்துல் சமட், ரொமோரியா செபார்ட்*, வாஷிங்டன் சுந்தர், புவனேஸ்வர் குமார், நடராஜன், உம்ரான் மாலிக்/கார்த்திக் தியாகி. (* = வெளிநாட்டு வீரர்கள்)

பிட்ச் ரிப்போர்ட்:
இப்போட்டி நடைபெறும் டிஒய் பாட்டில் மைதானத்தில் இதுவரை நடந்த போட்டிகளில் பேட்டிங் மற்றும் பவுலிங் ஆகிய இரண்டுமே சம அளவில் இருந்ததை பார்க்க முடிந்தது. இதற்குமுன் இங்கு 200 ரன்கள் மேல் அடிக்கப்பட்ட போட்டிகளையும் பார்த்தோம். 150 ரன்களை தொடமுடியாத அணிகளையும் பார்த்தோம். எனவே இங்கு திறமையை வெளிப்படுத்தும் யாராக இருந்தாலும் அவர்களுக்கு கண்டிப்பாக வெற்றி கிடைக்கும்.

இதையும் படிங்க : டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட்க்கு அபராதம் விதித்து அதிரடி காட்டிய ஐ.பி.எல் நிர்வாகம் – எதற்கு தெரியுமா?

அத்துடன் இது இரவு நேர போட்டியாக அல்லாமல் பகல்நேர போட்டியாக இருக்கும் என்பதால் பனியின் தொல்லை இருக்காது. அந்த வகையில் டாஸ் இந்த போட்டியில் ஒரு முக்கிய பங்காற்றாது என எதிர்பார்க்கலாம்.

Advertisement