டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட்க்கு அபராதம் விதித்து அதிரடி காட்டிய ஐ.பி.எல் நிர்வாகம் – எதற்கு தெரியுமா?

Pant
- Advertisement -

கடந்த இரண்டு ஆண்டுகளாகவே இந்தியாவில் ஐ.பி.எல் தொடர் போட்டிகள் நடைபெறாமல் இருந்ததால் இந்திய ரசிகர்கள் வருத்தத்தில் இருந்தனர். இந்நிலையில் அந்த வருத்தத்தினை போக்கும் வகையில் பி.சி.சி.ஐ யின் சிறப்பான நடவடிக்கைகள் காரணமாக தற்போது குறிப்பிட்ட சில மைதானங்களில் மட்டும் 15 ஆவது ஐ.பி.எல் தொடரானது நடைபெற்று வருகிறது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்றுள்ள இந்தத்தொடரானது முதல் வாரத்திலேயே நல்ல பொழுதுபோக்கினை வழங்கி வருகிறது.

IPL 2022 (2)

- Advertisement -

அதன்படி மும்பை டி.ஒய் பாட்டில் மைதானத்தில் டெல்லி மற்றும் லக்னோ அணிகளுக்கு இடையே நடைபெற்ற 15-வது லீக் போட்டியில் சிறப்பாக விளையாடிய கே.எல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி டெல்லி கேபிட்டல்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் முதலில் விளையாடிய டெல்லி அணியானது 20 ஓவர்களின் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 149 ரன்களை குவித்தது. பின்னர் 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய லக்னோ அணியானது 19.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் பெற்ற வெற்றியின் மூலம் கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ அணி தற்போது புள்ளிப் பட்டியலில் நல்ல முன்னேற்றத்தை கண்டுள்ளது. இந்நிலையில் இந்த போட்டியில் விளையாடிய டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட்க்கு ஐபிஎல் நிர்வாகம் தற்போது 12 லட்ச ரூபாய் அபராதம் விதித்து அதிரடி காட்டியுள்ளது.

- Advertisement -

ஏனெனில் இந்த ஐபிஎல் தொடர்புக்கு முன்பாகவே பல்வேறு விதிமுறைகளை இந்த தொடரில் கொண்டுவந்த ஐபிஎல் நிர்வாகம் பந்துவீச அதிக நேரம் எடுத்துக் கொண்டால் அந்த அணியின் கேப்டனுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவித்திருந்தது.

இதையும் படிங்க : சன் ரைசர்ஸ் அணிக்கெதிரான போட்டியில் சி.எஸ்.கே அணிக்காக அறிமுகமாகவுள்ள இளம்வீரர் – யார் தெரியுமா?

அதன்படி லக்னோ அணி பேட்டிங் செய்யும்போது குறிப்பிட்ட நேரத்தை விட அதிக நேரத்தை பந்துவீச செலவு செய்ததால் கேப்டன் ரிஷப் பண்டிற்க்கு இந்திய மதிப்பில் ரூபாய் 12 லட்சம் அபராதம் விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement