சன் ரைசர்ஸ் அணிக்கெதிரான போட்டியில் சி.எஸ்.கே அணிக்காக அறிமுகமாகவுள்ள இளம்வீரர் – யார் தெரியுமா?

CSK
- Advertisement -

இந்தியாவில் கடந்த மார்ச் 26-ஆம் தேதி துவங்கி நடைபெற்று வரும் 15-வது ஐபிஎல் தொடரானது தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஆனால் இந்த தொடரில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் செயல்பாடு மிகவும் மோசமாக இருந்து வருவதால் ரசிகர்கள் மத்தியில் பெரிய வருத்தம் ஏற்பட்டு உள்ளது. ஏனெனில் கடந்த ஆண்டு சாம்பியன் பட்டத்தை வென்ற சிஎஸ்கே அணி இம்முறையும் தங்களது ஆதிக்கத்தை வெளிப்படுத்தி சிறப்பாக செயல்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் முதல் மூன்று போட்டிகளிலுமே தொடர்ந்து தோல்வியை சந்தித்துள்ளது.

CSK-1

- Advertisement -

இதன் காரணமாக ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக முதல் மூன்று போட்டிகளிலும் தோல்வியை சந்தித்து முதல் முறையாக சென்னை அணியானது ஹாட்ரிக் தோல்வியை சந்தித்துள்ளது. மேலும் சென்னை அணியின் பந்து வீச்சாளர்கள் தற்போது மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்துவதால் பந்துவீச்சு துறையில் மாற்றம் நிகழ்ந்தே ஆக வேண்டும் என்ற கோரிக்கைகளும் வலுத்து வருகின்றன.

இந்நிலையில் ஏற்கனவே மூன்று போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ள சென்னை அணியானது நாளை ஏப்ரல் 9 ஆம் தேதி நடைபெறவுள்ள நான்காவது மிக முக்கியமான லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்த்து விளையாட உள்ளது.

Hangargekar 1

இந்த போட்டிக்கான சென்னை அணியில் பேட்டிங்கில் மாற்றம் இல்லை என்றாலும் பவுலிங்கை பொறுத்தவரை சில மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் சென்னை அணியில் பிராவோ மற்றும் பிரிட்டோரியஸ் ஆகியோரைத் தவிர வேறு யாரும் சரிவர பந்து வீசுவது இல்லை. இதன் காரணமாக நிச்சயம் பந்துவீச்சு யூனிட்டில் ஒரு மாற்றமாவது இருக்கும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

அந்த வகையில் கடந்த சில போட்டிகளாகவே சென்னை அணியில் இடம் பெற்று ரன்களை வாரி வழங்கி வரும் முகேஷ் சவுத்ரி அணியில் இருந்து வெளியேற்றப்பட்டு அவருக்கு பதிலாக 19 வயதுக்குட்பட்டோர் உலககோப்பை தொடரில் சிறப்பாக விளையாடிய வேகப்பந்துவீச்சாளர் ராஜ்வர்தன் ஹங்கரேகருக்கு அறிமுக வாய்ப்பு கொடுக்கப் படலாம் என்று தெரிகிறது.

இதையும் படிங்க : ஆரம்பத்திலேயே கண்ணை கட்டுதே! என்னடா இது உலகப்புகழ் பெற்ற ஐபிஎல் தொடருக்கு வந்த சோதனை

எப்போதுமே எதிர்கால ஸ்டார்களை உருவாக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிச்சயம் இந்த இளம் வீரருக்கும் வாய்ப்பளித்து அவரது செயல்பாட்டையும் ஆதரிக்கும் என்று நம்பலாம்.

Advertisement