ஆரம்பத்திலேயே கண்ணை கட்டுதே! என்னடா இது உலகப்புகழ் பெற்ற ஐபிஎல் தொடருக்கு வந்த சோதனை

IPL 2022
- Advertisement -

இந்தியாவின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் வெற்றிகரமான முதல் வாரத்தை கடந்து மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த மார்ச் 26-ஆம் தேதியன்று புகழ்பெற்ற மும்பை வான்கடே மைதானத்தில் கோலாகலமாக துவங்கிய இந்த தொடரில் இதுவரை நடைபெற்ற பெரும்பாலான போட்டிகள் அனைத்தும் கடைசி ஓவர் வரை சென்று ரசிகர்களை மகிழ்வித்தது. வரும் மே 22-ஆம் தேதிவரை முதலில் நடைபெறும் 70 போட்டிகள் கொண்ட முக்கியமான லீக் சுற்றில் அபாரமாக செயல்பட்டு புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பிடித்து பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற அனைத்து அணிகளும் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.

IPL 2022 (2)

- Advertisement -

உலகப்புகழ் பெற்ற ஐபிஎல்:
கடந்த 2008-ஆம் ஆண்டு ஒரு சாதாரண டி20 தொடராக தொடங்கப்பட்ட ஐபிஎல் இன்று தன்னைத்தானே மெருகேற்றி கொண்டு பல புதிய பரிணாமங்களை அடைந்து உலக அளவில் அதிக ரசிகர்களால் பார்த்துக் கொண்டாடப்படும் பிரசித்தி பெற்ற உலகின் நம்பர் ஒன் டி20 தொடராக உருவெடுத்துள்ளது. ஏனெனில் இந்த தொடரில் நடைபெறும் பெரும்பாலான போட்டிகள் கடைசி ஓவர் வரை சென்று ரசிகர்களுக்கு திரில்லர் விருந்து படைப்பதால் ஐசிசி நடத்தும் உலக கோப்பைகளை விட இந்த தொடரை நிறைய ரசிகர்கள் விரும்பி பார்க்கின்றனர்.

அதிரடி சரவெடி, இமாலய சிக்ஸர்கள், சூப்பர் ஓவர்கள் என இந்த தொடரில் ஒவ்வொரு போட்டிக்கும் அனல் தெறிப்பதால் ஐசிசி நடத்தும் உலக கோப்பைகளை விட ஐபிஎல் சிறந்த கிரிக்கெட் தொடர் என முன்னாள் ஜாம்பவான்கள் சுனில் கவாஸ்கர், டீ வில்லியர்ஸ் போன்றவர்கள் பலமுறை பாராட்டியுள்ளனர். இப்படி தரத்தில் உயர்ந்துள்ள ஐபிஎல் தொடர் வாயிலாக ஒவ்வொரு வருடமும் சுமார் 4000 கோடி ரூபாய்களை வருமானமாக ஈட்டும் பிசிசிஐ ஐசிசியை விட அதிக வருமானத்தைப் பெறும் பணக்கார கிரிக்கெட் வாரியமாக மாறியுள்ளது.

IPL

அதிலும் இந்த வருடம் ஆரஞ்சு, ஊதா ஆகிய தொப்பிகளுக்கும் ஸ்பான்ஸர்ஷிப் செய்த பிசிசிஐ வரலாற்றிலேயே முதல் முறையாக ஸ்பென்சர்ஷிப் வாயிலாக மட்டும் 1000 கோடி என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது. அதிலும் பிரம்மாண்ட வளர்ச்சி பெற்றுள்ள ஐபிஎல் தொடரில் இந்த வருடம் புதிதாக உருவாக்கப்பட்ட லக்னோ 7000+ கோடி, குஜராத் 5000+ கோடி என புதிய 2 அணிகளின் வாயிலாக மட்டுமே 12,000+ கோடி என்ற மிகப்பெரிய தொகையை பிசிசிஐ கல்லா கட்டியது.

- Advertisement -

ஆரம்பதிலேயே சரிந்த ஐபிஎல் 2022:
இப்படி பணத்திலும் தரத்திலும் உயர்ந்து உலக கிரிக்கெட்டின் தலையெழுத்தை தீர்மானிக்கும் ஒரு தொடராக விளங்கும் ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் ஆரம்பத்திலேயே ஒரு பின்னடைவை சந்தித்துள்ளது. அதாவது தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் 2022 தொடர் வெற்றிகரமான முதல் வாரத்தை கடந்துள்ள நிலையில் அதை தொலைக்காட்சி வாயிலாக பார்த்த ரசிகர்களின் எண்ணிக்கை கடந்த வருடத்தை விட வெகுவாக குறைந்துள்ளது. அதிலும் மார்ச் 26 முதல் ஏப்ரல் 1 வரை முதல் வாரத்தில் நடந்த 8 போட்டிகளின் டிவிஆர் ரேட்டிங் 2.52 என பதிவாகியுள்ளது.

csk fans

ஆனால் கடந்த வருடம் இதே முதல் வாரத்தில் நடந்த முதல் 8 போட்டிகளின் முடிவில் 3.75 என இருந்த டிவிஆர் தற்போது 33% அளவுக்கு குறைந்து போயுள்ளது பிசிசிஐ-க்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் ஐபிஎல் தொடரை ஒளிபரப்பும் அடுத்த உரிமத்திற்கான ஏலம் விரைவில் நடைபெற உள்ளது. அதில் குறைந்தது 30,000 – 35,000 கோடி என்ற மிகப்பெரிய தொகைக்கு அடுத்த ஐபிஎல் ஒளிபரப்பு உரிமை ஏலம் போகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த செய்தி பிசிசிஐயை கவலையடைய வைத்துள்ளது.

- Advertisement -

என்ன காரணம்:
இதற்கான காரணம் என்னவாக இருக்கும் என பார்த்தால் கடந்த வருடம் ஐபிஎல் தொடர் ஒரு ரசிகர்கள் கூட அனுமதிக்கப்படாமல் மூடப்பட்ட காலி மைதானத்தில் நடைபெற்றது. அதனால் 100% ரசிகர்களும் ஐபிஎல் போட்டிகளை தொலைக்காட்சியின் வாயிலாக மட்டுமே பார்க்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர்.

Csk-vsMi

அத்துடன் இந்த வருடம் ஐபிஎல் வரலாற்றில் வெற்றிகரமான அணிகளாக திகழும் மும்பை, சென்னை போன்ற அணிகள் அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்து ஹாட்ரிக் தோல்விகளுடன் புள்ளி பட்டியலில் அதலபாதாளத்தில் தள்ளாடிக் கொண்டிருக்கின்றன. மறுபுறம் புதிதாக உருவாக்கப்பட்ட லக்னோ, குஜராத் போன்ற மிகவும் பிரபலம் அடையாத அணிகள் அடுத்தடுத்த வெற்றிகளைப் பெற்று புள்ளிப் பட்டியலில் டாப் இடத்தில் இருக்கின்றன.

- Advertisement -

ஆனால் அது போன்ற ஐபிஎல் தொடரில் மற்ற அணிகளை காட்டிலும் இந்த மும்பை, சென்னை அணிகளுக்கு தான் ரசிகர்கள் கோடிக்கணக்கில் உள்ளனர். அப்படிப்பட்ட நிலையில் தங்களது அணி ஆரம்பத்திலேயே தோல்வியடைந்து வருவதால் பெரும்பாலான ரசிகர்கள் ஐபிஎல் தொடரை பார்ப்பதில்லை.

இதையும் படிங்க : தோனி, ரெய்னாவை தொடர்ந்து சி.எஸ்.கே அணிக்காக முக்கிய சாதனையை படைக்கவுள்ள – ரவீந்திர ஜடேஜா

இதுபோக இந்தியாவின் மிகப்பெரிய கிரிக்கெட் நட்சத்திரங்களான எம்எஸ் தோனி மற்றும் விராட் கோலி ஆகியோர் சமீபத்தில் சென்னை மற்றும் பெங்களூரு ஆகிய அணிகளின் கேப்டன் பதவியில் இருந்து விலகி சாதாரண வீரர்களாக விளையாடுகின்றனர். இதுவும் இந்த ஆரம்பகட்ட சரிவுக்கு ஒரு காரணமாக இருக்கலாம். மேலும் தற்போது ஐபிஎல் தொடரை விரும்பிப் பார்க்கும் பெரும்பாலான மாணவர்களுக்கு பள்ளி தேர்வுகள் நடைபெறுவதும் ஒரு காரணமாக இருக்கலாம்.

Advertisement