தோனி, ரெய்னாவை தொடர்ந்து சி.எஸ்.கே அணிக்காக முக்கிய சாதனையை படைக்கவுள்ள – ரவீந்திர ஜடேஜா

Jadeja-1
- Advertisement -

இந்தியாவில் நடப்பு 15-வது ஐபிஎல் தொடரானது கடந்த மார்ச் 26-ஆம் தேதி முதல் மும்பை மற்றும் புனே ஆகிய நகரங்களில் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இருந்த எட்டு அணிகளுடன் தற்போது புதிதாக இரண்டு அணிகள் இணைந்துள்ளதால் மொத்தம் பத்து அணிகளுடன் தற்போது லீக் சுற்றுப் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் அனைத்து அணிகளும் சமமான பலமுடைய அணிகளாக திகழ்ந்து வருவதால் ஒவ்வொரு போட்டியும் ரசிகர்களுக்கு மிகச் சிறந்த பொழுதுபோக்கினை வழங்கி வருகிறது.

Jadeja

- Advertisement -

அந்த வகையில் நடப்பு சாம்பியனாக திகழும் சென்னை அணி மட்டும் தற்போது ரசிகர்களை மிகவும் வருத்தத்தில் ஆழ்த்தும் விதமாக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. ஏனெனில் இந்த தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னர் தோனி தனது கேப்டன் பதவியில் இருந்து வெளியேறியதன் காரணமாக புதிய கேப்டனாக ஜடேஜா நியமிக்கப்பட்டார்.

அவரது தலைமையில் சென்னை அணி சிறப்பாக விளையாடும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் முதல் மூன்று போட்டிகளிலும் தோல்வி பெற்று புள்ளி பட்டியலில் பின்தங்கியுள்ளது. இந்நிலையில் சென்னை மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான முக்கியமான லீக் போட்டி ஏப்ரல் 9ஆம் தேதி நாளை மதியம் மூன்று முப்பது மணிக்கு நடைபெற உள்ளது.

Jadeja

இந்த போட்டி சென்னை அணிக்கு மிகவும் முக்கியமான போட்டி என்பதால் இந்த போட்டியில் வெற்றியுடன் சென்னை அணி மீண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் நாளை நடைபெறவுள்ள இந்த போட்டியில் விளையாடுவதன் மூலம் ஜடேஜா சிஎஸ்கே அணிக்காக தனிப்பட்ட முறையில் ஒரு மிகச்சிறந்த சாதனையை நிகழ்த்தவுள்ளார். அந்த சாதனை யாதெனில் கடந்த 2012-ஆம் ஆண்டு முதல் சென்னை அணிக்காக விளையாடி வரும் ஜடேஜாவுக்கு நாளைய போட்டி 150-வது போட்டியாக அமைய உள்ளது.

- Advertisement -

இதற்கு முன்னர் ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக அதிக போட்டிகளில் விளையாடிய வீரர்களில் தோனி 117 போட்டிகளுடனும், ரெய்னா 200 போட்டிகளுடனும் முதல் இரண்டு இடங்களில் உள்ளனர். அவர்களுக்கு அடுத்து மூன்றாவது வீரராக ஜடேஜா தற்போது 150-வது போட்டியில் விளையாட உள்ளார்.

இதையும் படிங்க : பழைய பவர் இல்ல! எப்படி வெற்றி கிடைக்கும் – மும்பை தடுமாறுவதன் காரணத்தை கூறும் நட்சத்திர முன்னாள் வீரர்

அதேபோன்று தோனி மற்றும் ரெய்னா ஆகிய இருவருக்கு பின்னர் சென்னை அணியின் மூன்றாவது கேப்டனாக ஜடேஜா இருப்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை சென்னை அணிக்காக 149 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 110 விக்கெட்டுகளையும் 1523 ரன்களையும் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement