IND vs ENG : தோனி உட்பட எந்த இந்திய விக்கெட் கீப்பரும் செய்யாத சாதனையை செய்து அசத்திய – ரிஷப் பண்ட்

Pant-2
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற வரும் ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தற்போது மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக இந்த போட்டியில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மனாக விளையாடும் ரிஷப் பண்ட் இந்திய அணிக்காக இரண்டு இன்னிங்ஸ்களிலுமே தனது அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு பெரிய பங்களிப்பை கொடுத்துள்ளார் என்றே கூற வேண்டும்.

Rishabh-Pant

- Advertisement -

ஏனெனில் இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 416 ரன்களை குவித்த போது ரிஷப் பண்ட் 111 பந்துகளை சந்தித்து 20 பவுண்டரி மற்றும் நான்கு சிக்ஸர்கள் என 146 ரன்களை குவித்தார். அதனை தொடர்ந்து தற்போது நடைபெற்று முடிந்த இரண்டாவது இன்னிங்ஸ்சிலும் இந்திய அணி 245 ரன்கள் குவித்த வேளையில் அவர் மட்டும் 57 ரன்களை அதிரடியாக குவித்து அசத்தினார்.

இப்படி இரண்டு இன்னிங்சிலுமே ஒரு சதம் மற்றும் ஒரு அரை சதம் அடித்ததன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இந்திய விக்கெட் கீப்பர்கள் யாரும் படைக்காத 69 ஆண்டு கால சாதனையை அவர் நிகழ்த்தி அசத்தியுள்ளார். அதன்படி வெளிநாட்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரே போட்டியில் அதிக ரன்கள் குவித்த இந்திய விக்கெட் கீப்பராக இதுவரை விஜய் மஞ்சு ரேக்கர் இருந்தார்.

pant 1

அதன்படி கடந்த 1953 ஆம் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் அவர் வெளிநாட்டு மண்ணில் ஒரே டெஸ்டில் 161 ரன்கள் அடித்ததே சாதனையாக இருந்தது. ஆனால் அதனை அதற்கடுத்து வந்த எந்த ஒரு இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாலும் தகர்க்க முடியவில்லை. தோனி உட்பட எத்தனையோ விக்கெட் கீப்பர்கள் இந்திய அணிக்காக விளையாடினாலும் அந்த சாதனை தகர்க்கப்படாமல் இருந்தது.

- Advertisement -

இந்நிலையில் அந்த சாதனையை தற்போது 69 ஆண்டுகள் கழித்து ரிஷப் பண்ட் முறியடித்துள்ளார். எட்ஜ்பேஸ்டன் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் சதம் அடித்த அவர் இரண்டாவது இன்னிங்சிலும் அரை சதம் அடித்து இந்த போட்டியில் மட்டும் 203 ரன்களை குவித்துள்ளதால் ஒரே போட்டியில் வெளிநாட்டு மண்ணில் அதிக ரன்கள் அடித்த இந்திய விக்கெட் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.

இதையும் படிங்க : IND vs ENG : மீண்டும் ஏமாற்றிய விராட் கோலி, ஆனாலும் படைத்த 2 தனித்துவமான சாதனைகள் இதோ

அதேபோன்று வெளிநாட்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்ஸில் சதமும், அடுத்த இன்னிங்ஸ்சில் அரை சதமும் அடித்த இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனையும் அவர் படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement