IND vs ENG : மீண்டும் ஏமாற்றிய விராட் கோலி, ஆனாலும் படைத்த 2 தனித்துவமான சாதனைகள் இதோ

kohli
- Advertisement -

பர்மிங்காம் நகரில் நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான 5-வது டெஸ்ட் போட்டி பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. 2 – 1* என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகிக்கும் இந்த தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா கடினமாக போராடி தனது முதல் இன்னிங்ஸில் 416 ரன்கள் சேர்த்தது. புஜாரா, விராட் கோலி, விஹாரி உட்பட முக்கிய பேட்ஸ்மேன்கள் இங்கிலாந்தின் தரமான பந்துவீச்சில் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால் 98/5 என மோசமான தொடக்கத்தை பெற்ற இந்தியாவை 6-வது விக்கெட்டுக்கு 222 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து தூக்கி நிறுத்திய ரிஷப் பண்ட் சதமடித்து டி20 இன்னிங்ஸ் போல 146 (111) ரன்களை குவித்து அவுட்டானார்.

Rishabh Pant Ind vs ENg Ravindra Jadeja

- Advertisement -

அவருடன் நிதானமாக பேட்டிங் செய்த ரவீந்திர ஜடேஜா தனது பங்கிற்கு சதமடித்து 104 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். அதைவிட கடைசி நேரத்தில் ஸ்டுவார்ட் பிராட் வீசிய ஓவரில் 35 ரன்களை பறக்கவிட்ட கேப்டன் ஜஸ்பிரித் பும்ரா டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு ஓவரில் அதிக ரன்கள் அடித்த பேட்ஸ்மேனாக உலக சாதனை படைத்தார். இங்கிலாந்து சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக ஜேம்ஸ் ஆண்டர்சன் 3 விக்கெட்டுகளை எடுத்தார்.

தடுமாறும் இங்கிலாந்து:
அதை தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்தை ஆரம்பம் முதலே அற்புதமாக பந்துவீசி மடக்கிப் பிடித்த இந்தியா 284 ரன்களுக்கு சுருட்டியது. அலெஸ் லீஸ் 6, ஜாக் கிராவ்லி 9, ஓலி போப் 10, ஜோ ரூட் 31, கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 25 என முக்கிய பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டான அந்த அணிக்கு அதிகபட்சமாக அதிரடியாக பேட்டிங் செய்த ஜானி பேர்ஸ்டோ சதமடித்து 106 ரன்கள் குவித்தார். இந்தியா சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக முகமது சிராஜ் 4 விக்கெட்டுகளும் கேப்டன் பும்ரா 3 விக்கெட்டும் எடுத்தனர்.

Jasprit Bumrah Team India

அதனால் 132 ரன்கள் முன்னிலை பெற்று இந்தியா தனது 2-வது இன்னிங்சில் 3-வது நாள் ஆட்டநேர முடிவில் 125/3 என்ற நல்ல நிலைமையுடன் வெற்றிக்காக பேட்டிங் செய்து வருகிறது. களத்தில் அனுபவ வீரர் புஜாரா 50* ரன்களுடனும், பண்ட் 3* ரன்களுடனும் சிறப்பாக பேட்டிங் செய்து வருகின்றனர். இப்போட்டியில் இன்னும் 2 நாட்கள் எஞ்சியுள்ள நிலையில் மேலும் சிறப்பாக பேட்டிங் செய்து 400க்கும் மேற்பட்ட ரன்களை இலக்காக நிர்ணயித்து 15 வருடங்கள் கழித்து இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்ல இந்தியா மேலும் போராட உள்ளது.

- Advertisement -

ஏமாற்றிய விராட்:
முன்னதாக இப்போட்டியில் இந்தியாவின் நட்சத்திரம் விராட் கோலி சதமடிப்பாரா என்று ஆவலுடன் எதிர்பார்த்த ரசிகர்களுக்கு மீண்டும் மிகப்பெரிய ஏமாற்றமே மிஞ்சியது. கடந்த 2019க்கு பின்பு கடந்த 3 வருடங்களாக டெஸ்ட், ஒருநாள், டி20 மற்றும் ஐபிஎல் என அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் சதமடிக்க முடியாமல் தவித்து வரும் அவர் சுமாரான பார்மில் திண்டாடி வருகிறார். இத்தனைக்கும் கேப்டன்ஷிப் அழுத்தம் தமது பேட்டிங்கை பாதித்ததாக உணர்ந்த அவர் அதிலிருந்து படிப்படியாக விலகி சுதந்திரப் பறவையாக விளையாடும் போதிலும் சதமடிக்க முடியாமல் தவிப்பது அவரின் ரசிகர்களுக்கு வேதனையாக அமைந்து வருகிறது.

Virat Kohli Jonny Bairstow

வெற்றியாளரை தீர்மானிக்கும் இப்போட்டியின் முதல் இன்னிங்சில் வழக்கம் போல அவுட் சைடு ஆப் ஸ்டம்ப் பந்தை இழுத்து அடிக்க முயன்று அவர் இன்சைட் எட்ஜ் வாங்கி போல்ட்டானார். சரி 2-வது இன்னிங்சிலாவது அடிப்பார் என்று பார்த்தால் மீண்டும் பவுன்ஸ் ஆகி வந்த பந்தை அடிக்க சென்ற அவர் கேட்ச் கொடுத்து மீண்டும் ஆண்டர்சனிடம் அவுட்டாகி ஏமாற்றத்துடன் சென்றனர். இப்போட்டியில் பேட்டிங்கில் பெரிய ரன்களை எடுக்கவில்லை என்றாலும் வழக்கம்போல தனது ஆக்ரோஷத்தால் இங்கிலாந்து வீரர்களை மிரட்டிய அவர் முடிந்த அளவுக்கு இந்தியாவின் வெற்றியில் பங்காற்றி வருகிறார்.

- Advertisement -

2 சாதனைகள்:
குறிப்பாக ஸ்லெட்ஜிங் செய்ததால் மிரட்டலாக பேட்டிங் செய்த ஜானி பேர்ஸ்டோ கடைசியில் அவர் கையிலேயே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தபோது முத்தத்தை கொடுத்து விராட் கோலி பெவிலியன் திருப்பி வைத்தது ரசிகர்களை எகிற வைத்தது. அந்த கேட்ச்சையும் சேர்த்து இங்கிலாந்துக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் 50* கேட்ச்களை பிடித்துள்ள விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 2 நாடுகளுக்கு எதிராக 50க்கும் மேற்பட்ட கேட்ச்களை பிடித்த முதல் இந்திய பீல்டர் என்ற வரலாற்றுச் சாதனை படைத்தார்.

kohli

அவர் ஏற்கனவே ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இதுவரை 55 கேட்ச்களை பிடித்துள்ளார். அவரை தவிர ராகுல் டிராவிட், சச்சின் உட்பட வேறு எந்த இந்திய ஜாம்பவான்களும் 2 அணிகளுக்கு எதிராக 50க்கும் மேற்பட்ட கேட்ச்களை பிடித்ததே இல்லை.

- Advertisement -

அதேபோல் இப்போட்டியில் 2 இன்னிங்ஸில் பேட்டிங் செய்த அவர் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என 3 வகையான கிரிக்கெட்டிலும் சேர்த்து சர்வதேச கிரிக்கெட்டில் இங்கிலாந்துக்கு எதிராக 100 இன்னிங்ஸ்சில் பேட்டிங் செய்த முதல் இந்திய பேட்ஸ்மேன் என்ற சாதனையும் படைத்தார்.

இதையும் படிங்க : IND vs ENG : பேட்டிங்கை தொடர்ந்து பந்துவீச்சில் மிரட்டிய பும்ரா – படைத்த ஆல்-டைம் வரலாற்று சாதனை இதோ

அந்த பட்டியல் இதோ:
1. விராட் கோலி : 100* இன்னிங்ஸ் (3875 ரன்கள்)
2. எம்எஸ் தோனி : 93 இன்னிங்ஸ் (2999 ரன்கள்)
3. சச்சின் டெண்டுல்கர் : 90 இன்னிங்ஸ் (3990 ரன்கள்)

Advertisement