கடந்த வருடம் இங்கிலாந்து மண்ணில் நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 4 போட்டிகளின் முடிவில் 2 – 1* என்ற கணக்கில் இந்தியா முன்னிலை பெற்ற போது ரத்து செய்யப்பட்ட கடைசி போட்டி கடந்த ஜூலை 1-ஆம் தேதியன்று பர்மிங்காம் நகரில் துவங்கியது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 98/5 என ஆரம்பத்திலேயே சரிந்தாலும் அதன்பின் 6-வது விக்கெட்டுக்கு 222 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்து மீண்டெழுந்தது. புஜாரா, விராட் கோலி, விஹாரி போன்ற முக்கிய வீரர்கள் இங்கிலாந்தின் தரமான பந்துவீச்சில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த நிலையில் அதிகபட்சமாக 89 பந்துகளில் சதமடித்து டி20 இன்னிங்ஸ் விளையாடிய ரிஷப் பண்ட் 146 (111) ரன்கள் கொடுத்து மிரட்டினார்.

அவருடன் நிதானமாக பேட்டிங் செய்த ரவீந்திர ஜடேஜா 13 பவுண்டரியுடன் சதமடித்து 104 ரன்கள் குவித்து அவுட்டானார். இங்கிலாந்து சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக ஜேம்ஸ் ஆண்டர்சன் 5 விக்கெட்டுகளை எடுத்தார். அதைத் தொடர்ந்து தனது 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்தை ஆரம்பம் முதலே மிரட்டலாக பந்துவீசி மடக்கி பிடித்த இந்திய பவுலர்கள் 284 ரன்களுக்கு சுருட்டினர். அலெஸ் லீஸ் 6, ஜாக் கிராவ்லி 9, ஓலி போப் 10, ஜோ ரூட் 31, கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 25 என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றிய அந்த அணிக்கு அதிக பட்சமாக மிரட்டலாக பேட்டிங் செய்த ஜானி பேர்ஸ்டோ சதமடித்து 106 ரன்கள் குவித்தார். இந்தியா சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக முகமது சிராஜ் 4 விக்கெட்டுகளை எடுத்தார்.
சாதிக்குமா இந்தியா:
அதனால் 132 ரன்கள் முன்னிலை பெற்ற இந்தியா தனது 2-வது இன்னிங்சை துவங்கிய போது கில் 4, விராட் கோலி 20, விஹாரி 11 என முக்கிய பேட்ஸ்மேன்கள் மீண்டும் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றமளித்தனர். அதனால் 75/3 என தடுமாறிய இந்தியாவுக்கு மறுபுறம் நங்கூரமாக நிற்கும் புஜாரா 50* ரன்களும் ரிஷப் பண்ட் 30* ரன்களும் எடுத்து பேட்டிங் செய்து வருவதால் 3-வது நாளில் 125/3 என்ற நல்ல நிலைமையுடன் போராடி வருகிறது. தற்போது 257 ரன்கள் முன்னிலை பெற்ற இந்தியா மேற்கொண்டு சிறப்பாக பேட்டிங் செய்து 400க்கும் மேற்பட்ட ரன்களை இலக்காக நிர்ணயித்தால் வெற்றி ஏறத்தாழ உறுதியாகி விடும் என்றே கூறலாம்.

முன்னதாக கடந்த வருடம் ஜோ ரூட் தலைமையில் தடுமாறிய இங்கிலாந்து இம்முறை புதிய கேப்டனாக பொறுப்பேற்ற பென் ஸ்டோக்ஸ் தலைமையில் அதிரடியான வெற்றிகளை குவிக்கும் வலுவான அணியாக மாறியது. குறிப்பாக கடந்த வாரம் டெஸ்ட் சாம்பியன் நியூசிலாந்தை 3 – 0 (3) என்ற கணக்கில் மண்ணைக் கவ்வ வைத்த அந்த அணி அதேபோல் விளையாடி இப்போட்டியிலும் வென்று 2 – 2 என்ற கணக்கில் தொடரை சமன் செய்வோம் என இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுத்தது. ஆனால் அதை சமாளிப்பதற்காக புதிய கேப்டனாக பொறுப்பேற்ற ரோஹித் சர்மா கடைசி நேரத்தில் விலகியதால் வேறு வழியின்றி ஜஸ்பிரித் பும்ரா கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
சாதிப்பாரா பும்ரா:
உள்ளூர் போட்டிகளில் கூட கேப்டன்ஷிப் செய்த அனுபவம் இல்லாத அவரது தலைமையில் இந்த முக்கியமான போட்டியில் இந்தியா வெல்லுமா என்று ஆரம்பத்தில் சந்தேகிக்கப்பட்டது. ஆனால் கேப்டனாக பொறுப்பேற்றதும் தனித்தெம்பை பெற்றது போல் முதல் இன்னிங்சில் தடுமாறிய இந்தியாவை ரிஷப் பண்ட் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் காப்பாற்றிய பின் கடைசி நேரத்தில் களமிறங்கிய அவர் தம்மை துச்சமென நினைத்து அச்சுறுத்த நினத்தார். இருப்பினும் அவரின் தனது 84-வது ஓவரில் 4, 5, 7, 4, 4, 4, 6, 1 என 2 நோ-பால்களிலும் அடுத்தடுத்த பவுண்டரிகளை பறக்கவிட்ட பும்ரா பதிலடி தாக்குதல் கொடுத்தார்.

அதனால் ஒரே ஓவரில் 35 ரன்கள் குவித்த அவர் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு ஓவரில் அதிக ரன்கள் எடுத்த பேட்ஸ்மேன் என்ற உலக சாதனையை படைத்தார். அதோடு நிற்காமல் 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்துக்கு அலெஸ் லீஸ் 6, ஜாக் கிராவ்லி 9, ஓலி போப் 10 என 3 டாப் ஆர்டர் வீரர்களை அடுத்தடுத்து அவுட் செய்த அவர் ஆரம்பத்திலேயே இந்தியாவின் கையை ஓங்க வைத்தார்.
பந்துவீச்சிலும் சாதனை:
மொத்தமாக முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுகளை எடுத்து போட்டிகள் கொண்ட இத்தொடரில் இதுவரை 21* விக்கெட்டுகளை எடுத்துள்ள அவர் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இங்கிலாந்து மண்ணில் அந்த அணிக்கு எதிராக நடந்த ஒரு டெஸ்ட் தொடரில் அதிக விக்கெட்டுகள் எடுத்த இந்திய பவுலர் என்ற புவனேஷ்வர் குமாரின் வரலாற்று சாதனையை உடைத்து புதிய சாதனை படைத்துள்ளார். அந்த பட்டியல் இதோ:

1. ஜஸ்பிரித் பும்ரா : 21* விக்கெட்கள், 5 போட்டி தொடர், 2022*
2. புவனேஸ்வர் குமார் : 19 விக்கெட்கள், 5 போட்டி தொடர், 2014
3. ஜஹீர் கான் : 18 விக்கெட்கள், 3 போட்டி தொடர், 2007
4. இஷான் சர்மா : 18 விக்கெட்கள், 5 போட்டி தொடர், 2018
5. சுபாஷ் குப்தே : 17 விக்கெட்கள், 5 போட்டி தொடர்,1959



