முக்கிய ஆபத்தில் இருந்து தப்பிய ரிஷப் பண்ட். இவருக்கு மச்சம் இருக்கு – பயிற்சி போட்டியில் அசத்தல்

Pant
- Advertisement -

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி கடந்த ஆண்டு இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடியது. அந்த தொடரில் முதல் 4 ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில் 2 க்கு 1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகித்தது. அதன்பிறகு ஐந்தாவது மற்றும் கடைசி போட்டி துவங்குவதற்கு முன்னர் இந்திய அணிக்குள் ஏற்பட்ட கொரோனா அச்சம் காரணமாக அந்த கடைசி போட்டி ரத்து செய்யப்பட்டு மாற்று தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி கடந்த ஆண்டு ஒத்திவைக்கப்பட்ட அந்த 5-வது டெஸ்ட் போட்டி ஜூலை 1-ஆம் தேதி நடைபெற உள்ளது.

INDvsENG

- Advertisement -

அதன்படி இந்த எஞ்சியுள்ள ஒரு டெஸ்ட் போட்டிக்கான ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி ஏற்கனவே இங்கிலாந்து பயணித்து விட்டது. இந்நிலையில் இந்த டெஸ்ட் போட்டிக்கு தயாராகும் விதமாக தற்போது இந்திய அணியில் உள்ள வீரர்கள் இங்கிலாந்து கவுண்டி லெஸ்டர் அணியுடன் இணைந்து பயிற்சி போட்டியில் விளையாடி வருகிறது. ஏற்கனவே இந்திய வீரர்கள் பலரும் தொடர்ச்சியாக ஐபிஎல் போட்டிகளில் விளையாடியதால் நேரடியாக இந்த டெஸ்ட் போட்டியில் விளையாடும் முன் சரியான பயிற்சியுடன் டெஸ்ட் போட்டியை அணுக வேண்டும் என்பதற்காக இங்கிலாந்து கவுண்டி அணியுடன் இணைந்து தற்போது இந்திய வீரர்கள் பயிற்சி போட்டியில் விளையாடி வருகின்றனர்.

இந்த பயிற்சி போட்டியில் நட்சத்திர வீரர்கள் பலரும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளது ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக நடைபெற்று வரும் பயிற்சி போட்டியில் ரோகித் சர்மா, சுப்மன் கில், ஹனுமா விஹாரி, ஸ்ரேயாஸ் ஐயர் போன்றோரின் பேட்டிங் மோசமாக அமைந்தது. அதே வேளையில் மட்டும் விராட் கோலி ஓரளவு சுமாராக தாக்கு பிடித்து விளையாடினார்.

Pant

ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் இந்திய அணியின் பேக்கப் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான கே எஸ் பரத் தான் பங்கேற்ற அணிக்காக அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி 70 ரன்களை குவித்தார். மறுபுறம் லெஸ்டர் அணிக்காக விளையாடிய ரிஷப் பண்ட் சமீபமாக இந்திய அணியிலும் சரி, ஐபிஎல்-லிலும் சரி, சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்ததால் தனது இடத்தை இழக்கும் அபாயத்தில் இருந்தார்.

- Advertisement -

ஏற்கனவே ஒருபுறம் ரிஷப் பண்டிற்கு ஓய்வு தேவை என்று பலரும் பேசிவரும் வேளையில் மற்றொருபுறம் கே.எஸ் பரத் இந்த போட்டியில் 70 ரன்கள் அடிக்க மறுபுறம் தான் டெஸ்ட் இடத்தை மட்டும் இழக்கவே கூடாது என்ற எண்ணத்தில் 87 பந்துகளை சந்தித்த அவர் 14 பவுண்டரி மற்றும் ஒரு சிக்சருடன் 76 ரன்கள் அடித்து அசத்தினார்.

இதையும் படிங்க : டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் சொந்த மண்ணில் அதிக விக்கெட்களை எடுத்த டாப் 6 பவுலர்கள் – லிஸ்ட் இதோ

தொடர்ச்சியாக சொதப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பண்டிற்கு சிறிது ஓய்வு கொடுத்து மீண்டும் அணியில் சேர்த்தால் தான் பழையபடி பார்மிற்கு வருவார். எனவே டெஸ்ட் கிரிக்கெட்டில் கே எஸ் பரத்திற்கு வாய்ப்பு கொடுங்கள் என்று பலரும் வாய் திறந்த வேளையில் மீண்டும் ஒரு அரை சதத்தை பயிற்சி போட்டியில் அடித்து தனது இடத்தை ரிஷப் பண்ட் தற்போது உறுதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement