டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் சொந்த மண்ணில் அதிக விக்கெட்களை எடுத்த டாப் 6 பவுலர்கள் – லிஸ்ட் இதோ

Kumble
- Advertisement -

பொதுவாக ஒரு கிரிக்கெட் வீரர் முதலில் பள்ளி அளவிலான கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்டு மாவட்ட அளவில் கவனம் எடுத்து மாநில அளவில் நீண்ட நாட்களாக உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடி தொடர்ச்சியாக சிறப்பாக செயல்பட்டு திறமையை வெளி காட்டிய பின்பு தான் தேசத்திற்காக சர்வதேச அரங்கில் விளையாடும் வாய்ப்பை பெறுவார். அந்த வாய்ப்பில் ஒருசில தடுமாற்றங்கள் இருந்தாலும் தொடர்ச்சியாக காலங்கள் கடந்தும் தசாப்தங்கள் கடந்தும் யார் சிறப்பாக செயல்படுகிறார்களோ அவர்களே நாட்டுக்கு பல வெற்றிகளைத் தேடி கொடுத்து ரசிகர்களால் ஜாம்பவான்களாக கொண்டாடுகிறார்கள். அப்படி ஸ்டார் வீரர்களாக உருவெடுக்கும் பேட்ஸ்மேன்களும் பவுலர்களும் எப்போதுமே சொந்த மண்ணில் எதிரணிகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்வார்கள்.

kapildev

- Advertisement -

ஏனெனில் உலக அரங்கில் மிகச்சிறப்பாக செயல்படும் அவர்கள் முதலில் பிறந்து வளர்ந்த மண்ணில் மண்ணில் தான் அத்தனை திறமைகளையும் கற்றுத் தேர்ச்சி பெற்றிருப்பார்கள். அத்துடன் எப்போதாவது பயணித்து வெளிநாட்டில் களமிறங்கி அங்குள்ள காலச் சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு உட்படுத்திக் கொண்டு செயல்படுவதை விட பிறந்தது முதல் கற்றது வரை தனது நாட்டில் கால சூழ்நிலைகளை பற்றி தெரிந்து வைத்திருப்பார்கள். அதனால் சொந்த நாட்டில் நிலவும் கால சூழ்நிலைக்கு ஏற்றவாறு கிரிக்கெட் வீரர்களின் உடலும் மனமும் இயற்கையாகவே ஒன்றியிருக்கும் என்பதால் அவர்களுக்கு சொந்த மண்ணில் சிறப்பாக செயல்படுவது சர்வ சாதாரணமாகிறது.

சொந்தமண் புலிகள்:
அப்படி ஏற்கெனவே கற்ற வித்தைகளை தாய்மண்ணின் அன்புடன் சொந்த ரசிகர்களின் ஆதரவுடனும் எதிரணிகளை எதிர்கொள்ளும் வீரர்களை வெளிநாட்டினர் சிறப்பாக எதிர்கொள்வது அவ்வளவு சுலபமான காரியமல்ல. அதிலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் என்னதான் திறமையான பேட்ஸ்மேனாக இருந்தாலும் சொந்த மண்ணில் புலி போல பாயக்கூடிய பவுலர்களை எளிதாக சமாளிப்பது கடினமாக காரியமாகும். அந்த வகையில் நூற்றாண்டு சிறப்புமிக்க டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் சொந்த மண்ணில் அதிக விக்கெட்டுகள் எடுத்த டாப் 6 பவுலர்களை பற்றி பார்ப்போம்:

ashwin 1

6. ரவிச்சந்திரன் அஷ்வின் 312: ஜாம்பவான்கள் அனில் கும்ப்ளே மற்றும் ஹர்பஜன் சிங் ஆகியோருக்கு பின் இந்திய சுழல் பந்துவீச்சை தோளில் சுமந்து வரும் தமிழகத்தைச் சேர்ந்த இவர் இதுவரை எடுத்துள்ள 442 விக்கெட்டுகளில் 312 விக்கெட்டுகள் இந்திய மைதானங்களில் எடுத்ததாகும்.

- Advertisement -

ஆரம்ப காலங்களில் வெளிநாடுகளில் ரொம்பவே தடுமாறிய அவர் சமீப காலங்களில் நல்ல முன்னேற்றத்தை கண்டாலும் ஆரம்பம் முதலே சொந்த மண்ணில் எதிரணிகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்து இப்பட்டியலில் 5-வது இடம் பிடிக்கிறார்.

5. ஷேன் வார்னே 319: சமீபத்தில் மறைந்த ஆஸ்திரேலிய ஜாம்பவான் ஷேன் வார்னே முத்தையா முரளிதரனை விட சுழலில் மாயாஜாலம் நிகழ்த்திய மகத்தான பவுலராக போற்றப்படுகிறார். அதற்கு காரணம் அவர் எடுத்த டெஸ்ட் 708 விக்கெட்களில் 319 மட்டுமே சொந்த மண்ணில் எடுத்ததாகும்.

- Advertisement -

அதாவது அவர் எடுத்த பாதிக்கும் மேற்பட்ட விக்கெட்டுகள் வெளிநாடுகளில் எடுத்தது என்பதிலிருந்தே அவரின் தரத்தைப் புரிந்து கொள்ள முடியும். மொத்தத்தில் சொந்த மண்ணிலும் வெளிநாட்டிலும் புலியாக எதிரணிகளை தெறிக்கவிட்ட அவர் இப்பட்டியலில் 5-வது இடத்தைப் பிடிக்கிறார்.

kumble 1

4. அனில் கும்ப்ளே 350: டெஸ்ட் மட்டுமல்லாது சர்வதேச கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை எடுத்து இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ள ஜாம்பவான் அனில் கும்ப்ளே மொத்தமாக எடுத்த 619 டெஸ்ட் விக்கெட்டுகளில் 350 விக்கெட்டுகளை சொந்த மண்ணில் எடுத்து எதிரணிகளுக்கு கேரியர் முழுவதும் சவாலாகவே இருந்துள்ளார்.

- Advertisement -

குறிப்பாக கடந்த 1999இல் தலைநகர் டெல்லியில் உள்ள பெரோசா கோட்லா மைதானத்தில் பரம எதிரியான பாகிஸ்தானுக்கு எதிராக ஒரே இன்னிங்சில் 10 விக்கெட்டுகளை எடுத்து உலக சாதனை படைத்தது மறக்கவே முடியாது.

broad

3. ஸ்டுவர்ட் ப்ராட் 352: இங்கிலாந்தின் நம்பிக்கை நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான இவர் 36 வயதை கடந்து டெஸ்ட் போட்டிகளில் 549 விக்கெட்டுகளை எடுத்து தனது பார்ட்னர் ஆண்டர்சன் வழியில் வயது ஆகஆக எதிரணிகளை மிரட்டி வருகிறார். இதுவரை 352 விக்கெட்டுகளை எடுத்து இங்கிலாந்து மண்ணில் எதிரணிகளை திணறடித்து வரும் இவர் இந்தப் பட்டியலில் 3-வது இடத்தை பிடிக்கிறார்.

2. ஜேம்ஸ் ஆண்டர்சன் 413: வயதான சரக்குக்கு ருசி அதிகம் என்பதை ஒவ்வொரு போட்டியிலும் நிரூபித்துக் கொண்டே வரும் இவர் உலகிலேயே அதிக வயதாகியும் சிறப்பாக செயல்படும் ஒருசில வீரர்களில் முதன்மையானவராக திகழ்கிறார். சொல்லப்போனால் இளமை காலங்களில் செயல்பட்டதை விட 35 வயதுக்கு பின் இருமடங்கு அபாரமாக செயல்பட்டு வரும் இவர் 40 வயது தொட்டு தாம் பிறந்து வளர்ந்த இங்கிலாந்து மண்ணில் நிலவும் ஈரப்பதமான சூழ்நிலையை பயன்படுத்தி ஸ்விங் எனும் ஆயுதத்தை பிரயோகித்து பேட்ஸ்மேன்களை திணறடித்து வருகிறார்.

Anderson

இதுவரை 651 விக்கெட்டுகளை எடுத்து அதிக விக்கெட்டுகள் எடுத்த வேகப்பந்து வீச்சாளராக உலக சாதனை படைத்துள்ள இவர் அதில் பாதிக்கும் மேற்பட்ட அதாவது 413 விக்கெட்டுகளை சொந்த மண்ணில் எடுத்து புலியாக காணப்படுகிறார்.

1. முத்தையா முரளிதரன் 493: 800 விக்கெட்டுகளை எடுத்து யாராலும் தொட முடியாத மாபெரும் உலக சாதனை படைத்துள்ள இலங்கையைச் சேர்ந்த ஜாம்பவான் முத்தையா முரளிதரன் சுழல் பந்து வீச்சுக்கு சாதகமான இலங்கையில் பிறந்து வளர்ந்து உலகையே ஒரு கலக்கு கலக்கினார்.

Muralitharan

இருப்பினும் சொந்த மண்ணில் எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு எப்போதுமே கருணை காட்டாத அவர் 493 விக்கெட்டுகளை எடுத்து சொந்த மண்ணில் அதிக விக்கெட்டுகள் எடுத்த பவுலராகவும் உலக சாதனை படைத்துள்ளார்.

Advertisement