டி20 அணியில் உங்கள் இடத்துக்கு தினேஷ் கார்த்திக் போட்டியாக வந்துவிட்டாரா – கேள்விக்கு ரிஷப் பண்ட் அளித்த நேரடி பதில் இதோ

RIshabh Pant Dinesh Karthik
- Advertisement -

வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் ஐபிஎல் 2022 தொடருக்குப் பின் தென் ஆப்பிரிக்கா, அயர்லாந்து, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகளுக்கு எதிராக பங்கேற்று வந்த அடுத்தடுத்த டி20 தொடர்களில் தோல்வியே அடையாமல் வெற்றி நடை போட்டு வரும் இந்தியா அடுத்ததாக ஆகஸ்ட் 27ல் துவங்கும் ஆசிய கோப்பையில் பங்கேற்கிறது. இதுவரை நடைபெற்ற வந்த டி20 தொடர்களைக் காட்டிலும் இந்த ஆசிய கோப்பையிலிருந்து தான் உலக கோப்பையில் விளையாடும் இறுதிக்கட்ட அணி தேர்வு செய்யப்பட உள்ளது. அதன் காரணத்தாலேயே விராட் கோலி, கேஎல் ராகுல் உள்ளிட்ட முக்கிய வீரர்களும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

Dinesh-Karthik

- Advertisement -

அதனால் டி20 உலக கோப்பையில் இடம் பெற விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா போன்ற வீரர்கள் இந்த தொடரில் மிகச் சிறப்பாக செயல்படுவது அவசியமாகியுள்ளது. குறிப்பாக தமிழகத்தின் நட்சத்திரம் அனுபவ வீரர் தினேஷ் கார்த்திக் இந்த தொடரில் சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே தனது லட்சியமான உலக கோப்பையில் விளையாட முடியும் என்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. ரிஷப் பண்ட், கேஎல் ராகுல் ஆகிய விக்கெட் கீப்பிங் செய்யும் இளம் வீரர்கள் இருக்கும்போது 37 வயதான அவர் கடைசி 4 ஓவர்களில் பினிஷிங் செய்வதற்காக மட்டும் தேர்வு செய்யக்கூடாது என்று முன்னாள் வீரர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதே அதற்கு காரணமாகும்.

போட்டிக்கு டிகே:
அதுபோக சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, தீபக் ஹூடா போன்ற மிடில் ஆர்டரில் விளையாடக் கூடிய பேட்ஸ்மேன்களும் பினிஷிங் செய்யும் திறமை பெற்றுள்ளதால் தினேஷ் கார்த்திக்கை தேர்வு செய்து அணியில் ஒரு இடத்தை வீணடிக்க வேண்டாம் என்ற வகையில் முன்னாள் வீரர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இருப்பினும் ஒரு கட்டத்தில் வர்ணனையாளராக அவதரித்த தினேஷ் கார்த்திக்கின் இந்திய கேரியரின் முடிந்து விட்டதாக அனைவரும் நினைத்த வேளையில் டி20 உலகக் கோப்பையை வென்று கொடுக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்காக 183.33 என்ற அதிரடியான ஸ்டிரைக் ரேட்டில் மிரட்டலாக பேட்டிங் செய்த அவர் தன்னை மிகச்சிறந்த பினிசர் என்று நிரூபித்தார்.

Dinesh Karthik MoM

அதனால் 3 வருடங்கள் கழித்து கம்பேக் கொடுத்துள்ள அவர் தென் ஆப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடரில் முடிந்தளவுக்கு மிகச் சிறப்பாக செயல்பட்டு 37 வயதுக்குப்பின் 2 ஆட்டநாயகன் விருது மற்றும் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரராக சாதனையுடன் அசத்தி வருகிறார். அதன் காரணமாக பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் கேப்டன் ரோகித் சர்மாவின் நம்பிக்கையையும் ஆதரவையும் பெற்றுள்ள அவருக்கு உலகக்கோப்பையில் நிச்சயம் இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

அழுத்தத்தில் பண்ட்:
அதன் காரணமாக தோனிக்கு பின் முதன்மையான விக்கெட் கீப்பராக உருவெடுத்துள்ள ரிஷப் பண்ட் கடுமையான அழுத்தத்தை சந்தித்துள்ளார். ஏனெனில் என்னதான் டெஸ்ட் கிரிக்கெட்டில் தோனியை மிஞ்சும் அளவுக்கு அசத்தலாக செயல்பட்டு நிரந்தர இடத்தை பிடித்தாலும் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் இன்னும் அவர் தடுமாறுகிறார். ஒருநாள் கிரிக்கெட்டில் கூட சமீபத்திய இங்கிலாந்து ஒருநாள் தொடரின் கடைசி போட்டியில் சதமடித்து விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த அவர் டி20 கிரிக்கெட்டில் 3 வருடங்களாக ஏராளமான வாய்ப்புகளை பெற்று சொதப்பலாகவே செயல்பட்டு வருகிறார்.

RIshabh Pant Poor Batting

அதனால் சுமாராக செயல்படும் அவருக்கு சஞ்சு சாம்சன், இஷான் கிசான், தினேஷ் கார்த்திக் போன்ற பலமுனை போட்டி ஏற்பட்டுள்ளது. குறிப்பாக தினேஷ் கார்த்திக் மிகப்பெரிய போட்டியாக உருவாக்கியுள்ளார். இந்த நிலையில் இந்தியா டி20 அணியின் உங்களது இடத்திற்கு தினேஷ் கார்த்திக் போட்டியாக வந்துள்ளாதாக் நினைக்கிறீர்களா என்ற கேள்விக்கு அவர் நேரடியாக பதிலளித்துள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“முதலில் நாங்கள் அதுபோன்ற எண்ணத்தை எப்போதும் நினைக்க மாட்டோம் என்பதை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள். ஒரு தனிநபராக நாங்கள் எப்போதுமே அணிக்கு 100% பங்களிப்பை அளிக்க முயற்சிக்கிறோம். எஞ்சிய அனைத்தும் பயிற்சியாளர் மற்றும் கேப்டன் எவ்வாறு எங்களிடமிருந்து அணி பயனடையும் என்பதை வைத்து எடுக்கும் முடிவைப் பொறுத்து அமைகிறது” என்று கூறினார்.

Pant

இதையும் படிங்க: தோனி் கூறியதுபோல் வீசிய அடுத்த பந்திலேயே விக்கெட் – 2011 உலகக்கோப்பை அரையிறுதி ஸ்வாரஸ்யத்தை பகிரும் முன்னாள் வீரர்

அதாவது தாமும் தினேஷ் கார்த்திக்கும் தங்களது இடத்தை போட்டியாக நினைக்காமல் அணிக்கு 100% பங்களிப்பை கொடுக்க வேண்டும் என்று நினைப்பதாக தெரிவிக்கும் ரிஷப் பண்ட் அணிக்கு நன்மையை செய்வதில் எங்களில் சிறந்தவர் யார் என்பதை முடிவெடுத்து தேர்வு செய்வது கேப்டன் மற்றும் பயிற்சியாளர் கையில் இருப்பதாக கூறியுள்ளார். அந்த வகையில் அவர்கள் என்ன முடிவெடுத்தாலும் அதை ஏற்றுக் கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்.

Advertisement