இதெல்லாம் சகஜம்.. எங்க டீம்ல இன்னும் அதையே கண்டுபிடிக்கல.. பஞ்சாப்பிடம் தோற்க இதான் காரணம்.. ரிஷப் பண்ட்

RIshabh Pant
- Advertisement -

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் ஒன்றாம் தேதி நடைபெற்ற 13வது போட்டியில் லக்னோ அணி தங்களது சொந்த மண்ணில் பஞ்சாப்பிடம் 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய லக்னோ 20 ஓவரில் தடுமாற்றமாக பேட்டிங் செய்து 171-7 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக நிக்கோலஸ் பூரான் 44, ஆயுஸ் படோனி 41 ரன்கள் எடுத்தார்கள்.

பஞ்சாப் அணிக்கு அதிகபட்சமாக அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டுகளை எடுத்தார். அடுத்ததாக விளையாடிய பஞ்சாப் அணி 16.2 ஓவரிலேயே 177-2 ரன்களை எடுத்து எளிதாக வெற்றி பெற்றது. அதிகபட்சமாக பிரப்சிம்ரன் சிங் 69, கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 52*, நேஹல் வதேரா 43* ரன்கள் எடுத்து பஞ்சாப்புக்கு இரண்டாவது வெற்றியை பெற்றுக் கொடுத்தனர்.

- Advertisement -

லக்னோ தோல்வி:

மறுப்பும் திக்வேஷ் சிங் 2 விக்கெட்டுகள் எடுத்தும் லக்னோ இரண்டாவது தோல்வியை தவிர்க்க முடியவில்லை. இந்நிலையில் இந்தப் போட்டியில் எக்ஸ்ட்ரா 20 – 25 ரன்கள் எடுக்காததும், ஆரம்பத்திலேயே விக்கெட்டுகள் இழந்ததும் தோல்வியைக் கொடுத்ததாக லக்னோ கேப்டன் ரிஷப் பண்ட் தெரிவித்துள்ளார். மேலும் சொந்த ஊரில் இருக்கும் மைதானத்தின் சூழ்நிலையை இன்னும் முழுதாக கணக்கிடவில்லை என்று அவர் கூறியுள்ளார்.

அத்துடன் தங்களுடைய அணியில் எது பலம் பலவீனம் போன்ற விஷயங்களையும் முழுமையாகக் கண்டறியவில்லை என்று அவர் கூலாக பேசியுள்ளார். எனவே இந்த தோல்வி சகஜம் என்று தெரிவிக்கும் பண்ட் இது பற்றி பேசியது பின்வருமாறு. “நாங்கள் 20 – 25 ரன்கள் குறைவாக எடுத்தோம். விளையாட்டில் இதெல்லாம் சகஜம். இதுவும் ஒரு அங்கம். எங்களுடைய சொந்த மைதானத்தில் இந்த வருடம் முதல் முறையாக விளையாடுவதால் சூழ்நிலையை இன்னும் மதிப்பிட்டு வருகிறோம்”

- Advertisement -

பிட்ச் பற்றி தெரியல:

“ஆரம்பத்திலேயே விக்கெட்டுகளை இழந்தது பின்னடைவைக் கொடுத்தது. ஆரம்பத்தில் விக்கெட்டுகளை இழந்தால் உங்களால் பெரிய ரன்கள் அடிப்பது கடினம். அதே சமயம் உங்களால் ஒவ்வொரு விஷயத்தையும் கட்டுப்படுத்த முடியாது. ஆனால் எங்களுடைய வீரர்கள் அனைவரும் முன்னோக்கி செல்லும் முயற்சிக்க வேண்டும். இது எங்களுடைய சொந்த மண்ணில் நடைபெற்றப் போட்டி என்பதால் பிட்ச் கொஞ்சம் ஸ்லோவாக இருக்கும் என்பதே ஐடியாவாகும்”

இதையும் படிங்க: அந்த 2 விஷயம் க்ளிக் ஆனதே லக்னோவை பஞ்சாப் வீழ்த்த காரணம்.. என்னோட ஆட்டம் வரலாறு.. ஸ்ரேயாஸ் பேட்டி

“அதில் நாங்கள் ஸ்லோவாக பௌலிங் செய்த போது பந்து கொஞ்சம் ஒட்டிக்கொண்டது. இன்றைய நாளில் நாங்கள் வெற்றிக்கு போதுமானவர்களாக செயல்படவில்லை. இதிலிருந்து நாங்கள் பாடங்களைக் கற்று முன்னோக்கி செல்ல விரும்புகிறோம். நிறைய நேர்மறையான விஷயங்களும் கிடைத்தன. தற்போது தொடர் துவங்கி மட்டுமே உள்ளது. அதனால் இன்னும் எங்களுடைய அணியில் நிறைய விஷயங்களை கண்டறிந்து வருகிறோம். விரைவில் அனைத்தும் எங்களுக்கு நன்றாக வரும்” என்று கூறினார்.

Advertisement