ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் ஒன்றாம் தேதி நடைபெற்ற 13வது போட்டியில் லக்னோவை 8 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் தோற்கடித்தது. லக்னோவில் நடைபெற்ற அந்தப் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய லக்னோ தடுமாற்றமாக விளையாடி 20 ஓவரில் 171-7 ரன்கள் மட்டுமே எடுத்தது.
அதிகபட்சமாக நிக்கோலஸ் பூரான் 44, ஆயுஸ் பதோனி 41 ரன்கள் எடுத்து அசத்தினார்கள். பஞ்சாப்புக்கு அதிகபட்சமாக அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டுகளை சாய்த்தார். அடுத்ததாக விளையாடிய பஞ்சாப் அணிக்கு துவக்க வீரர் பிரப்சிம்ரன் சிங் அதிரடியாக விளையாடி 69 (34) ரன்கள் குவித்து அசத்தினார். அவருடன் சேர்ந்து விளையாடிய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் அரை சதத்தை விளாசி 52* (30) ரன்கள் குவித்தார்.
அசத்தல் வெற்றி:
கூடவே நேஹல் வதேரா 43* (25) ரன்கள் அடித்ததால் 16.2 ஓவரிலேயே 177-2 ரன்களை எடுத்த பஞ்சாப் எளிதாக வென்று தங்களது இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்தது. அதன் காரணமாக இரண்டாவது வெற்றியைப் பெற்ற பஞ்சாப் புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியது. மறுபுறம் லக்னோவுக்கு திக்வேஷ் சிங் 2 விக்கெட்டுகள் எடுத்தும் தோல்வியை தவிர்க்க முடியவில்லை.
இந்நிலையில் இந்தப் போட்டிக்காக உருவாக்கப்பட்ட திட்டத்தை அனைத்து வீரர்களும் தோழமையுடன் கூட்டாக சேர்ந்து சரியாக செயல்படுத்தியதே பஞ்சாப் வெற்றிக்கு காரணம் என்று கேப்டன் ஸ்ரேயாஸ் தெரிவித்துள்ளார். மேலும் தம்முடைய இன்னிங்ஸ்கள் வரலாறாக மாறும் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “இந்த துவக்கம் தான் எங்களுக்குத் தேவைப்பட்டது”
இதெல்லாம் வரலாறுங்க:
“உண்மையில் எங்களுடைய பயன்கள் தங்களது வேலையில் சிறப்பாக விளையாடி தங்கள் திறனை வைத்து வெற்றியில் பங்காற்றியுள்ளனர். நாங்கள் என்னவெல்லாம் திட்டம் தீட்டினோமோ அதை எங்களுடைய வீரர்கள் முழுமையாக செயல்படுத்தினர். உண்மையில் எங்களுடைய அணியில் சரியான கலவை கிடையாது. எங்களுடைய தோழமை மற்றும் கூட்டு இயக்கம் ஆகியவை சரியான நேரத்தில் கிளிக் ஆக வேண்டும்”
இதையும் படிங்க: 16.2 ஓவரில் 177 ரன்ஸ்.. வம்படியாக வழியனுப்பிய வீரர்.. லக்னோவை சொந்த ஊரில் நொறுக்கி பஞ்சாப் மாஸ் வெற்றி
“இந்தத் தொடரில் விளையாடும் அனைத்து அணிகளும் போட்டியை வெல்வதற்கான திறனைக் கொண்டுள்ளன. அவர்களை வீழ்த்த வேண்டுமெனில் உங்களுக்கும் அதற்குத் தகுந்த மனநிலை வேண்டும். அதைத்தான் நாங்கள் எப்போதும் பேசுகிறோம். நான் எப்போதும் நிகழ்காலத்தில் இருக்க முயற்சி செய்கிறேன். இந்த இன்னிங்ஸ் எனக்கு வரலாறு. நிகழ்காலத்திலும் அடுத்தப் போட்டியிலும் கவனம் செலுத்த விரும்புகிறேன்” என்று கூறினார்.



