- Advertisement -
இந்திய கிரிக்கெட்

ரஞ்சி டிராபி டெல்லி அணியிலும் இடம்பெறாத ரிஷப் பண்ட்.. எப்போது இந்திய அணிக்கு திரும்புவார்? – விவரம் இதோ

இந்திய அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் கடைசியாக இங்கிலாந்து மண்ணில் நடைபெற்ற ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் மான்செஸ்டர் டெஸ்ட் போட்டியின் போது இங்கிலாந்து வீரர் கிரிஸ் வோக்ஸ் வீசிய பந்தில் கால் பகுதியில் காயமடைந்து அந்த தொடரின் கடைசி போட்டியில் இருந்து விலகினார். அதன் பின்னர் காயத்திற்கான அறுவை சிகிச்சை சிகிச்சியையும் மேற்கொண்டார்.

டெல்லி அணியில் இடம்பெறாத ரிஷப் பண்ட் :

அதன்பின்னர் அவர் மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வரும் நிலையில் பயிற்சிகளையும் மேற்கொண்டு வருகிறார். இதன் காரணமாக அவர் 2025 ரஞ்சி கோப்பை தொடரின் முதல் ஆட்டத்தில் டெல்லி அணிக்காக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதற்கான அறிவிப்பும் முறைப்படி வெளியாகும் என்று கூறப்பட்டு வந்தது.

- Advertisement -

ஏற்கனவே வெளியான ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியிலும் இடம்பெறாத அவர் ரஞ்சி தொடரில் தான் அவர் மீண்டும் கிரிக்கெட் களத்திற்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது வெளியான அறிக்கையின் படி 24 பேர் கொண்ட டெல்லி அணியில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை.

மேலும் 24 பேர் கொண்ட அணி தற்போதைக்கு அறிவிக்கப்பட்டாலும் பயிற்சிக்கு பின்னர் முதல் போட்டிக்கு முன்னதாக 15 வீரர்கள் கொண்ட டெல்லி அணி உறுதி செய்யப்படும் என்று கூறப்படுகிறது. இவ்வேளையில் அந்த தொடரின் முதல் போட்டியில் ரிஷப் பண்ட் இடம்பெற மாட்டார் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

மேலும் அவரது இடம் குறித்து வெளியான தகவலில் : ரிஷப் பண்ட் முதல் போட்டியில் இடம்பெற மாட்டார். ஆனால் இரண்டாவது போட்டியின் போது அணிக்கு திரும்புவார் என்று நம்புகிறோம். ஆனால் அது அவரது தனிப்பட்ட முடிவு என டெல்லி கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது. இதன் காரணமாக பண்ட் களத்திற்கு திரும்புவது தாமதமாகியுள்ளது.

இதையும் படிங்க : மூன்றாம் நாள் ஆட்டத்தில் சாய் சுதர்சன் ஏன் பீல்டிங் செய்ய வரவில்லை? – பி.சி.சி.ஐ கொடுத்த விளக்கம்

இருப்பினும் இந்த ஆண்டு இறுதியிலோ அல்லது அடுத்த ஆண்டு ஆரம்பத்திலோ அவர் இந்திய அணிக்கு திரும்புவார் என்றும் தெரிகிறது. அவர் இல்லாத இவ்வேளையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் துருவ் ஜுரேல் இடம்பிடித்து அசத்தலான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகிறார்.

- Advertisement -