மூன்றாம் நாள் ஆட்டத்தில் சாய் சுதர்சன் ஏன் பீல்டிங் செய்ய வரவில்லை? – பி.சி.சி.ஐ கொடுத்த விளக்கம்

Sai Sudharsan
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியானது தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வேளையில் நேற்றைய இரண்டாம் நாள் ஆட்டத்தின் போது தமிழகத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரரும், இந்திய அணியின் இளம் டாப் ஆர்டர் பேட்ஸ்மேனுமான சாய் சுதர்சன் வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன் அடித்த பந்தை பிடிக்ககையில் காயமடைந்து மைதானத்தில் இருந்து வெளியேறியிருந்தார்.

சாய் சுதர்சனின் காயம் குறித்த அப்டேட்டை வழங்கிய பி.சி.சி.ஐ :

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சாய் சுதர்சன் 165 பந்துகளை சந்தித்து 12 பவுண்டரிகளுடன் 87 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். சதத்திற்கு மிக அருகில் வந்து அவர் ஆட்டமிழந்தது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை அளித்திருந்தது.

- Advertisement -

அதன் பின்னர் வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்க்ஸை விளையாடுகையில் அந்த அணியின் துவக்க வீரரான கேம்பல் அடித்த ஸ்வீப் ஷாட் அவரது கைகளில் பட்டு காயத்தை ஏற்படுத்தியது. ஆனாலும் அதை எப்படியோ சமாளித்து அந்த கேட்சை சாய் சுதர்சன் பிடித்திருந்தார்.

பின்னர் வலி தாங்க முடியாமல் தவித்த அவருக்கு மைதானத்திலேயே முதலுதவி வழங்கப்பட்டது. ஆனால் மேற்கொண்டும் அவருக்கு காயத்தின் வலி இருந்ததால் அப்போதே அவர் களத்தில் இருந்து வெளியேறினார். பின்னர் இரண்டாம் நாள் ஆட்டநேரம் முழுக்க அவர் பீல்டிங் செய்ய வரவே இல்லை.

- Advertisement -

அதேபோன்று போட்டியின் மூன்றாம் நாளான இன்றும் சாய் சுதர்சன் களத்திற்கு வரவில்லை. இந்நிலையில் சாய் சுதர்சனின் காயம் எவ்வாறு இருக்கிறது? என்பது குறித்த முக்கிய அப்டேட் ஒன்றை பி.சி.சி.ஐ வெளியிட்டுள்ளது. அந்த வகையில் பிசிசிஐ சார்பில் வெளியான தகவலின் படி : சாய் சுதர்சனுக்கு காயம் மிகப்பெரிய அளவில் இல்லை என்றும் தற்போது அவர் நலமுடன் தான் இருக்கிறார் என்று குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிங்க: 2027 ஒருநாள் உலககோப்பை தொடரில் விளையாடனும் அது என் ஆசை.. இதான் காரணம் – ரவீந்திர ஜடேஜா ஓபன்டாக்

தொடர்ந்து மருத்துவக்குழு அவரை கண்காணித்து வருகிறது. முன்னெச்சரிக்கை காரணமாகவே அவர் மூன்றாம் நாள் பீல்டிங் செய்ய வரவில்லை. நிச்சயம் அவர் கூடிய விரைவில் களத்திற்கு திரும்புவார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. இதனால் மூன்றாம் நாள் உணவு இடைவேளைக்கு பிறகு அவர் களத்திற்கு திரும்பலாம் என்றும் தெரிகிறது.

Advertisement