பெங்களூருவில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த இந்திய வீரர்களை சந்தித்த ரிஷப் பண்ட் – அவரு அங்க என்ன பண்றாரு தெரியுமா?

Rishabh-Pant
- Advertisement -

இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது ஏற்கனவே இந்த தொடரினை இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.

அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியானது பெங்களூரு நகரில் ஜனவரி 17-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக தற்போது பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இந்திய வீரர்கள் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.

- Advertisement -

இந்நிலையில் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த இந்திய வீரர்களை நேரில் சந்தித்த இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் அவர்களுடன் கலந்துரையாடி பேசிக்கொண்டிருந்த சில வீடியோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி உள்ளன.

இப்படி இந்திய அணியில் இல்லை என்றாலும் ரிஷப் பண்ட் இந்திய அணி வீரர்களை நேரில் சந்திக்க என்ன காரணம் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில் கடந்த 2022-ஆம் ஆண்டு இறுதியில் சாலை விபத்தில் சிக்கிய ரிஷப் பண்ட் கடந்த ஒரு ஆண்டாக எவ்வித போட்டிகளிலும் பங்கேற்காமல் இருந்து வருகிறார்.

- Advertisement -

இவ்வேளையில் எதிர்வரும் 2024 ஐபிஎல் தொடரின் போதே அவர் மீண்டும் கிரிக்கெட் களத்திற்கு திரும்ப இருக்கிறார் என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக தற்போது பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி மற்றும் சிகிச்சை மேற்கொண்டு வரும் அவர் தற்போது இந்திய வீரர்களை சந்தித்து பேசியுள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க : 2 வருடம் தடை, 6 மாதம் சஸ்பென்ட்.. வசமாக சிக்கிய வங்கதேச வீரருக்கு அதிரடி தண்டனை வழங்கிய ஐசிசி

இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான கடைசி மற்றும் மூன்றாவது டி20 போட்டியானது ஜனவரி 17-ஆம் தேதி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement