2023 உலககோப்பையும் தவறவிட இருக்கும் நட்சத்திர வீரர் – அடுத்த ஐ.பி.எல் க்கு தான் விளையாட வருவாராம்

IND vs RSA Pant Chahal
- Advertisement -

இந்திய அணியானது கடந்த 2013-ஆம் ஆண்டு ஐ.சி.சி சாம்பியன்ஷிப் தொடரை கைப்பற்றிய பிறகு கடந்த 10 ஆண்டுகளாக எந்த ஒரு ஐசிசி கோப்பையும் வெல்லாதது ரசிகர்கள் மத்தியில் பெரிய ஏமாற்றத்தை அளித்து வருகிறது. அதோடு இந்த ஆண்டு நடைபெறவுள்ள 50 ஓவர் உலககோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெறவுள்ள வேளையில் இந்த தொடரையாவது இந்திய அணி கைப்பற்றும் என்று அனைவரும் எதிர்பார்த்து வரும் வேளையில் இந்திய அணியின் முன்னணி வீரர்கள் பலர் காயம் காரணமாக அணியில் இடம் பெற முடியாமல் தவித்து வருவது ரசிகர்கள் மத்தியில் பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

அந்த வகையில் இந்திய அணிக்காக கடந்த 2017-ஆம் ஆண்டு அறிமுகமாகி 66 டி20 போட்டிகள், 30 ஒருநாள் போட்டிகள் மற்றும் 33 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிவுள்ள இளம் அதிரடி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் கடந்த ஆண்டு இறுதியில் சாலை விபத்தில் சிக்கினார். இதன் காரணமாக அறுவை சிகிச்சை மேற்கொண்ட அவர் கடந்த ஆறு ஏழு மாதங்களாக ஓய்வில் இருந்து வருகிறார்.

அதனால் இந்தியாவில் நடைபெற்று முடிந்த 16-வது ஐபிஎல் தொடரிலும் அவர் விளையாடவில்லை. டெல்லி அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த அவர் இந்த ஆண்டு விளையாட முடியாமல் போனதால் அவருக்கு பதிலாக டேவிட் வார்னர் கேப்டனாக செயல்பட்டு வந்தார். இந்நிலையில் இந்த ஐபிஎல் தொடரில் அவர் விளையாடவில்லை என்றாலும் நிச்சயம் உலகக்கோப்பை தொடருக்குள் தயாராகி விடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

Rishabh Pant

ஆனால் தற்போது ரிஷப் பண்ட் குறித்த ஒரு தகவல் வெளியாகி மேலும் ரசிகர்களை வருத்தத்திற்கு உள்ளாகியுள்ளது. அந்த வகையில் ஏற்கனவே ரிஷப் பண்ட் ஆசிய கோப்பையை தவறவிடுவார் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்ட வேளையில் தற்போது அவர் 2023-ஆம் ஆண்டு உலகக் கோப்பையையும் தவறவிட இருக்கிறார் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

ஏனென்றால் அவருக்கு ஏற்பட்டுள்ள காயம் மிகவும் பொறுமையாக குணமடைந்து வருவதால் இன்னும் அவர் கிரிக்கெட் களத்திற்கு திரும்ப ஆறு மாதங்கள் வரை ஆகும் என்றும் அதற்குள் அவருக்கு மேலும் சில அறுவை சிகிச்சை செய்யப்பட வாய்ப்பும் உள்ளதாக பிசிசிஐ தரப்பில் இருந்து தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதையும் படிங்க : எப்போ பாரு உங்களுக்கு இதே வேலையா போச்சு, ஜானி பேர்ஸ்டோ சர்ச்சை அவுட்டில் – அஸ்வின் கருத்து என்ன

இதன் காரணமாக இந்த ஆண்டு முழுவதுமே அவரால் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க முடியாது. அதோடு அடுத்த ஆண்டு முதல் மூன்று மாதங்களையும் தவறவிடும் அவர் நேரடியாக 17-வது ஐபிஎல் தொடரில் தான் விளையாடுவார் என்றும், மேலும் அவரால் விக்கெட் கீப்பிங் செய்யமுடியுமா? என்பது சந்தேகம் தான் என்பதால் முழுநேர பேட்ஸ்மேனாகவே விளையாட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement