- Advertisement -
இந்திய கிரிக்கெட்

தோனி வாழ்நாளில் செஞ்சதை ரிஷப் பண்ட் இப்போவே செஞ்சுட்டாரு.. ஆஸியை எச்சரித்த ரிக்கி பாண்டிங்

இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அதற்காக அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணியில் ரிஷப் பண்ட் மீண்டும் தேர்வாகியுள்ளார். கடந்த 2017 முதல் இந்திய அணிக்காக விளையாடி வரும் அவர் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் தடுமாறினாலும் டெஸ்ட் போட்டிகளில் சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தி மேட்ச் வின்னராக செயல்பட்டு வருகிறார்.

குறிப்பாக 2021 காபா டெஸ்ட் போட்டியில் 89 ரன்கள் குவித்த அவர் ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா சரித்திர வெற்றியை பெற உதவினார். அத்துடன் ஜாம்பவான் எம்எஸ் தோனியை மிஞ்சிய அவர் இங்கிலாந்து, தென்னாப்பிரிக்காவில் சதமடித்த முதல் ஆசிய விக்கெட் கீப்பராக சாதனை படைத்தார். இந்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் தோனி 90 போட்டிகளில் அடித்த சதங்களை ரிஷப் பண்ட் இப்போதே அடித்துள்ளதாக ரிக்கி பாண்டிங் பாராட்டியுள்ளார்.

- Advertisement -

ரிக்கி பாண்டிங் பாராட்டு:

எனவே நவம்பர் மாதம் நடைபெறும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடரில் அவரிடம் ஆஸ்திரேலியா கவனமாக இருக்க வேண்டுமென பாண்டிங் எச்சரித்துள்ளார். இது பற்றி ஸ்கை ஸ்போர்ட்ஸ் இணையத்தில் பாண்டிங் பேசியது பின்வருமாறு. “அவர் விளையாடுவதை பார்த்துள்ள நாம் ஸ்டம்ப் மைக்கில் பேசுவதையும் கேட்டுள்ளோம். அவர் மிகவும் ஜாலியான கேரக்டர்”

“தனது கிரிக்கெட்டை நேசிக்கும் அவர் மேட்ச் வின்னர். அவர் சில ரன்களை எடுப்பதற்காகவும் வேடிக்கைக்காகவும் விளையாடுவதில்லை. அவர் இப்போதே 4 அல்லது 5 டெஸ்ட் சதங்கள் அடித்திருக்க வேண்டும். அவர் நிறைய 90ஸ் ரன்களையும் எடுத்துள்ளார். தோனி 120 (உண்மையில் 90) டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 3 – 4 (உண்மையில் 6) சதங்கள் அடித்துள்ளார். அதை இப்போதே தாண்டியுள்ள ரிசப் பண்ட் (5 சதங்கள்) சீரியஸான கிரிக்கெட்டர்”

- Advertisement -

ரிஷப் பண்ட் கம்பேக்:

“காயத்திலிருந்து குணமடைந்த பின் அவர் கடந்த ஐபிஎல் தொடரில் விளையாட மாட்டார் என்று நான் நினைத்தேன். ஆனால் 12 மாதங்கள் முன்பாக கவலைப்படாதீர்கள் நான் ஐபிஎல் தொடருக்கு விளையாட வருவேன் என்று அவர் என்னிடம் சொன்னார். அப்போது அவரை இம்பேக்ட் வீரராக விளையாட வைக்கலாம் என்று நாங்கள் எதிர்பார்த்தோம். ஆனால் அவர் அனைத்து போட்டிகளிலும் விளையாடினார்”

இதையும் படிங்க: கடவுளின் வித்யாச படைப்பான அவர்கிட்ட கத்துக்க முடியாது.. அவரோட இடத்தில் ஜெய்க்க வைப்பேன்.. ஆகாஷ் தீப்

“கடந்த ஐபிஎல் தொடரில் எங்கள் அணியில் அவர் அதிக ரன்கள் அடித்த வீரராக வந்தார். டி20 உலகக் கோப்பையில் 3வது இடத்தில் பேட்டிங் செய்து வெற்றியில் பங்காற்றிய அவர் தற்போது டெஸ்ட் அணியில் மீண்டும் வந்துள்ளார்” என்று கூறினார். இந்த நிலையில் 2024 துலீப் கோப்பையில் அதிரடியான அரை சதமடித்த ரிஷப் பண்ட் டெஸ்ட் கிரிக்கெட்டில் கம்பேக் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -