டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியின் புதிய துணைக்கேப்டன் அறிவிப்பு – யாருன்னு பாருங்க?

ind
- Advertisement -

கடந்த ஆண்டு விராட் கோலியின் தலைமையில் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி அங்கு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடியது. அந்த தொடரில் முதல் நான்கு போட்டிகள் முடிவடைந்த நிலையில் இந்திய அணி 2 க்கு 1 என்ற கணக்கில் முன்னிலை வகித்த வேளையில் ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியானது கொரோனா அச்சம் காரணமாக ரத்து செய்யப்பட்டது.

INDvsENG

- Advertisement -

அதனை அடுத்து கடந்த ஆண்டு ரத்து செய்யப்பட்ட இந்த 5-வது டெஸ்ட் போட்டி ஜூலை 1ஆம் தேதி நடைபெறும் என இரு நாட்டு கிரிக்கெட் நிர்வாகங்களும் அறிவித்திருந்தன. அதன்படி இந்த எஞ்சியுள்ள ஒரு டெஸ்ட் போட்டி மற்றும் 3 ஒருநாள் போட்டிகள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர் இங்கிலாந்தில் நடைபெற உள்ளதால் இந்த தொடருக்கான சீனியர் இந்திய அணி தற்போது இங்கிலாந்து பயணித்துள்ளது.

மேலும் தற்போது இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்துள்ள தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக விளையாடி வரும் ஸ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பண்ட் மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோர் இந்த தொடர் முடிந்து நேரடியாக இங்கிலாந்து சென்று அணியுடன் இணைவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த டெஸ்ட் தொடருக்கான அணியின் துணை கேப்டனாக நியமிக்கப்பட்ட கே.எல் ராகுல் காயம் காரணமாக அந்த தொடரில் இருந்து வெளியேறி உள்ளார்.

Pant

அதன் காரணமாக இந்திய அணிக்கு புதிய டெஸ்ட் கேப்டன் நியமிக்கப்படுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது பிசிசிஐயின் அதிகாரி ஒருவர் வெளியிட்டுள்ள தகவலின்படி தற்போது தென்னாப்பிரிக்கா அணிக்கெதிரான தொடரில் இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் ரிஷப் பண்ட் டெஸ்ட் அணியின் புதிய துணை கேப்டனாக நியமிக்கப்படுவார் என்று அறிவித்துள்ளார்.

- Advertisement -

அதோடு காயம் காரணமாக கே.எல். ராகுல் காயம் காரணமாக அணியில் இருந்து வெளியேறியதால் அவருக்கு பதிலாக மாற்று வீரராக மாயங்க் அகர்வால் தெரிவு செய்யப்படுவார் என்றும் அந்த அதிகாரி கூறியிருந்தார். இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்றாலும் நிச்சயம் இவர் கூறியபடியே மாயங்க் அகர்வால் இந்திய அணியால் மாற்று வீரராக தேர்வு செய்யப்படுவார் என்று தெரிகிறது.

இதையும் படிங்க : IND vs RSA : தொடர்ந்து மழை பெய்தால் என்னவாகும்? ஐ.சி.சி கூறும் விதிமுறை என்ன? – விவரம் இதோ

மேலும் இந்திய அணியின் புதிய டெஸ்ட் துணை கேப்டனாக ரிஷப் பண்ட் செயல்படுவார் என்பதும் உறுதியாகி உள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement