IND vs RSA : தொடர்ந்து மழை பெய்தால் என்னவாகும்? ஐ.சி.சி கூறும் விதிமுறை என்ன? – விவரம் இதோ

Rain-1
Advertisement

தெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்கா அணி தற்போது இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. கடந்த ஜூன் 9-ஆம் தேதி துவங்கி இந்த தொடரானது இன்று கடைசி நாளாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இவ்விரு அணிகளுக்கும் இடையே நடைபெற்று முடிந்த நான்கு போட்டிகளின் முடிவில் 2 க்கு 2 என்ற கணக்கில் இரு அணிகளும் இத்தொடரில் சமநிலையில் உள்ள வேளையில் ஐந்தாவது முக்கியமான போட்டி இன்று பெங்களூர் மைதானத்தில் இரவு 7 மணிக்கு நடக்கவிருந்தது.

INDvsRSA

ஆனால் நேற்று முதலே பெங்களூருவில் பெய்து வரும் கனமழை காரணமாக இன்றைய போட்டி ஆரம்பத்திலேயே சிக்கல் இருந்தது. ஏற்கனவே வானிலை மையம் வெளியிட்டிருந்த அறிக்கையில் இன்றைய போட்டிக்கு முன்னர் மழை பெய்யும் என்று கூறப்பட்ட நிலையில் இன்றைய போட்டியானது மழை பெய்ததால் கிட்டத்தட்ட 50 நிமிடங்களுக்கு பிறகு தான் துவங்கியது.

- Advertisement -

இருந்தாலும் மைதானத்தில் இருந்த ஊழியர்கள் சிறப்பான முறையில் நீரை வெளியேற்றியதன் காரணமாக மீண்டும் போட்டியானது துவங்கப்பட்டது. அப்படி போட்டி துவங்கும் போது இரு அணிகளுக்கும் தலா 19 ஓவர்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டது. ஆனால் இந்திய அணி தற்போது முதலில் பேட்டிங் செய்து வரும் வேளையில் 3.3 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 28 ரன்கள் குவித்த வேளையில் மீண்டும் மழை பெய்ததால் தற்போது போட்டி நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

rain

இப்படி மீண்டும் போட்டி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் மழை தொடர்ந்து பெய்தால் என்னவாகும் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. அதற்கு விளக்கம் அளிக்கும் பதிலாக இந்த பதிவை நாங்கள் உங்களுக்காக தொகுத்து வழங்கியுள்ளோம்.

- Advertisement -

அதன்படி ஐசிசி வரைமுறைப்படுத்திய விதிகளின் அடிப்படையில் போட்டி ஆரம்பித்து மீண்டும் மழை காரணமாக தடைபட்டால் ஒவ்வொரு நான்கு நிமிடங்களுக்கு ஒரு ஓவர் குறைக்கப்படும். மேலும் இந்த போட்டியை பொறுத்தவரை இந்திய நேரப்படி சுமார் 9.45 மணிக்குள் போட்டி துவங்காவிட்டால் அதன்பின்னர் 5 ஓவர்கள் கொண்ட போட்டியாகவே நடைபெறும்.

இதையும் படிங்க : IND vs RSA : இதெல்லாம் வேலைக்காகாது. 19 ஓவர்களாக குறைக்கப்பட்ட கடைசி டி20 போட்டி – காரணம் என்ன?

ஒருவேளை அந்த நேரத்தையும் தாண்டி மழை நிற்கவில்லை என்றால் போட்டி கைவிடப்பட்டதாக அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே இரண்டு அணிகளும் தலா இரண்டு வெற்றிகளை பெற்ற நிலையில் மழை காரணமாக இந்த போட்டி கைவிடப்பட்டால் இந்த தொடரின் கோப்பையானது இரு அணிகளுக்கும் பகிர்ந்து அளிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement