IND vs RSA : இதெல்லாம் வேலைக்காகாது. 19 ஓவர்களாக குறைக்கப்பட்ட கடைசி டி20 போட்டி – காரணம் என்ன?

Keshav-Maharaj-and-Rishabh-Pant
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் கடைசி 5-வது போட்டி இன்று பெங்களூர் மைதானத்தில் இரவு 7 மணிக்கு துவங்கியது. ஏற்கனவே பெங்களூரு சின்னசாமி மைதானத்தின் வானிலை அறிக்கை வெளியிடப்பட்ட போது மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மைய நிர்வாகம் அறிக்கையை வெளியிட்டிருந்தது. அதன்படி இன்றைய போட்டி ஆரம்பித்ததும் மழை பெய்ததால் போட்டி நடைபெறுமா? என்ற அச்சம் எழுந்தது.

INDvsRSA

- Advertisement -

ஆனாலும் டாஸிற்கு பிறகு மழை காரணமாக இந்தப் போட்டியானது 19 ஓவர்களாக குறைக்கப்பட்டது. அதன்படி இந்த தொடரில் வழக்கம்போலவே டாசில் வெற்றிபெற்ற தென்னாப்பிரிக்க அணியானது முதலில் பந்து வீச்சை தீர்மானம் செய்தது. கடந்த போட்டியில் காயமடைந்த தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் பவுமா இந்த போட்டியில் இருந்து வெளியேறி உள்ளதால் அவருக்கு பதிலாக அணியின் கேப்டனாக மகாராஜ் செயல்பட்டு வருகிறார்.

அவருக்கு பதிலாக மீண்டும் மிடில் ஆர்டரில் ஸ்டப்ஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்திய அணியை பொறுத்தவரை இந்த போட்டியில் எந்த மாறுதலும் இல்லை. ஏற்கனவே இந்த தொடரானது இரண்டுக்கு இரண்டு என்ற கணக்கில் சமநிலையில் உள்ள வேளையில் இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரை கைப்பற்றும் என்று குறிப்பிடத்தக்கது.

IND vs RSA Pant Chahal

இந்நிலையில் இந்த போட்டியில் முதலில் விளையாடி வரும் இந்திய அணியானது தற்போது 3.3 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 28 ரன்கள் குவித்துள்ளது. துவக்க வீரர்களான இஷான் கிஷன் 15 ரன்களிலும், ருதுராஜ் கெய்க்வாட் 10 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறியுள்ளனர்.

- Advertisement -

தற்போது மழை காரணமாக மீண்டும் போட்டி தடைபட்டுள்ளது. இன்னமும் மழை நிற்காமல் தொடர்ந்து பெய்தால் ஓவர்கள் குறைய வாய்ப்பு உள்ளது. ஒருவேளை மழை நீடிக்கும் பட்சத்தில் இந்த போட்டி கைவிடப்படும் அதிக வாய்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : தந்தையர் தின ஸ்பெஷல் ! இந்தியாவுக்காக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடிய தந்தை – மகன் ஜோடிகளின் பட்டியல்

இன்றைய போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதோ :

1) ருதுராஜ் கெய்க்வாட், 2) இஷான் கிஷன், 3) ஷ்ரேயாஸ் ஐயர், 4) ரிஷப் பண்ட், 5) தினேஷ் கார்த்திக், 6) ஹார்திக் பாண்டியா, 7) அக்சர் பட்டேல், 8) ஹர்ஷல் படேல், 9) புவனேஷ்வர் குமார், 10) ஆவேஷ் கான், 11) யுஸ்வேந்திர சாஹல்

Advertisement