- Advertisement -
ஐ.பி.எல்

எழுதி வெச்சுக்கோங்க… இன்னும் 10 வருஷத்தில் தோனி, ரோஹித்துடன் பண்ட் இருப்பாரு.. லக்னோ ஓனர் பேட்டி

ஐபிஎல் 2025 டி20 கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலம் கடந்த மாதம் நடைபெற்றது. அதில் ரிஷப் பண்ட் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்காக 27 கோடிக்கு வாங்கப்பட்டார். அதன் வாயிலாக ஐபிஎல் வரலாற்றில் நேரடி ஏலத்தில் அதிக தொகைக்கு விலை போன வீரர் என்ற மிகப்பெரிய சாதனையையும் ரிஷப் பண்ட் படைத்துள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் தோனியை மிஞ்சும் அளவுக்கு மிகச் சிறப்பாக விளையாடி வரும் அவர் டி20 கிரிக்கெட்டிலும் கணிசமாக அசத்தியுள்ளார். எனவே 27 வயதாகும் அவரை வருங்காலத்தை கருத்தில் கொண்டு லக்னோ அணி வாங்கியது. அதே சமயம் ஏற்கனவே கேப்டனாக இருந்த கேஎல் ராகுலை அந்த அணி கழற்றி விட்டது.

- Advertisement -

ஓனர் அறிவிப்பு:

இந்நிலையில் ரிஷப் பண்ட் அடுத்த ஐபிஎல் தொடரில் தங்களுடைய அணியின் கேப்டனாக செயல்படுவார் என்று லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயன்கா தெரிவித்துள்ளார். மேலும் அடுத்த 10 – 12 வருடங்களில் ஐபிஎல் வரலாற்றின் வெற்றிகரமான கேப்டன்களான தோனி, ரோகித் சர்மா ஆகியோரது பெயர்களுடன் ரிஷப் பண்ட் பெயர் இருக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “எனது வார்த்தைகளை எழுதி வைத்துக்கொள்ளுங்கள். 10 – 12 வருடங்கள் கழித்து வெற்றிகரமான ஐபிஎல் கேப்டன்களின் பட்டியலில் தோனி, ரோஹித்துடன் பண்ட் இருப்பார். அவரின் பிறப்பிலேயே லீடர் இருப்பதை பார்க்கிறேன். அவர் ஐபிஎல் பார்த்த ஒரு சிறந்த கேப்டனாக இருப்பார்.” என்று கூறினார். இது பற்றி ரிஷப் பண்ட் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

200% பங்களிப்பு:

“லக்னோ குடும்பம் என் மீது நம்பிக்கையை காட்டியதற்கு நன்றி. நான் என்னுடைய 200 சதவீத பங்களிப்பை கொடுப்பேன். அதுவே நான் உங்களுக்கு கொடுக்கும் கமிட்மெண்ட். என்னுடைய பவரில் இருக்கும் விஷயங்களை முயற்சித்து நீங்கள் என் மீது காட்டிய நம்பிக்கைக்கு நான் பாத்திரமாக இருக்க முயற்சிப்பேன்”

இதையும் படிங்க: இது டெஸ்ட் கிடையாது.. அந்த பொறுப்புடன் இதை செஞ்சா ரிஷப் பண்ட் துருப்புச்சீட்டா வரலாம்.. ரெய்னா அட்வைஸ்

“இந்த புதிய பயணத்தில் விளையாடுவதற்காக காத்திருக்கிறேன். எப்போதும் வீழ்வதற்கு சம்மதம் தெரிவிக்கக் கூடாது என்பதே நான் விரும்பும் ஒரு விஷயமாகும். நீங்கள் கடைசிப் பந்து வரை வெற்றிக்காக போராட வேண்டும். செயல்பாடுகள் வரும் போகும். ஆனால் நீங்கள் போதுமான அளவுக்கு களத்தில் 100% பங்களிப்பை கொடுத்து வெற்றிக்காக போராடினீர்களா? என்பது முக்கியம். அதுவே தனிநபராக உங்களால் கட்டுப்படுத்த கூடிய ஒரு விஷயமாகும்” எனக் கூறினார்.

- Advertisement -