வருங்காலத்தில் அவங்க இருவரும் டெஸ்ட் கிரிக்கெட்டை ஆளப்போறாங்க – சேவாக் பாராட்டிய இளம் வீரர்கள்

Sehwag
- Advertisement -

இன்று டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளே அதிக அளவில் உலகம் முழுவதிலும் உள்ள ரசிகர்கள் விரும்பி பார்க்கும் கிரிக்கெட்டாக இருந்து வருகிறது. பவுண்டரிகளையும் சிக்சர்களையும் பறக்கவிட்டு ரன் மழை பொழிந்து எதிர்பாராத பரபரப்பான தருணங்களை விருந்தாக படைத்து வெறும் 3 – 4 மணி நேரத்திற்குள் முடிவைக் கொடுக்கும் டி20 போட்டிகளே இன்றைய கிரிக்கெட்டின் முடிசூடா மன்னனாக திகழ்கிறது. அதனால் 4 – 5 நாட்கள் கழித்தும் கூட முடிவை கொடுக்காமல் டிராவில் முடிவடையும் டெஸ்ட் போட்டிகளை ரசிகர்கள் விரும்புவது கிடையாது.

test

- Advertisement -

இருப்பினும் ஒரு வீரரின் பொறுமையும் திறமையும் சோதிக்கும் டெஸ்ட் போட்டிகள் தான் கிரிக்கெட்டின் உண்மையான அடிப்படையாகும். அதன் காரணமாகவே ஒருநாள், டி20 போட்டிகளால் டெஸ்ட் அழிந்து விடக்கூடாது என்ற அக்கறையில் அதற்கென்று டெஸ்ட் சாம்பியன்ஷிப் என்ற உலககோப்பையை கடந்த 2019இல் ஐசிசி அறிமுகப்படுத்தியது. அதனால் டெஸ்ட் கிரிக்கெட் ஓரளவு உயிர்த்தெழுந்தாலும் கூட அதில் ஒருசில வீரர்கள் அதிரடியாக விளையாடும் போது மட்டும்தான் ரசிகர்கள் ஆர்வத்துடன் பார்க்கிறார்கள்.

அதிரடி பண்ட்:
அந்த வகையில் தற்போதைய நிலைமையில் இந்தியாவின் ரிஷப் பண்ட் விளையாடும் போதெல்லாம் நிறைய ரசிகர்கள் சமீப காலங்களில் டெஸ்ட் போட்டிகளை விரும்பி பார்க்கின்றனர். டெஸ்ட் போட்டியாக இருந்தாலும் கூட அதிலும் டி20 போல அதிரடியை காட்டும் அவரின் பேட்டிங் தான் அதற்கு காரணமாகும். அதிலும் இளம் கன்று பயமறியாது என்பதை போல இந்தியா எந்த நிலைமையில் இருந்தாலும் எதிரணி எவ்வளவு பலமானதாக இருந்தாலும் எதிரணி பவுலர் எந்த அளவுக்கு தரமானவராக இருந்தாலும் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் களமிறங்கியது முதலே அதிரடி சரவெடி பேட்டிங்கை வெளிப்படுத்தும் அவர் பல முறை இந்தியாவிற்கு வெற்றியை தேடி கொடுத்துள்ளார்.

Pant

எடுத்துக்காட்டாக ஜேம்ஸ் ஆண்டர்சன், ஆர்ச்சர் போன்ற பவுலர்கள் பந்து வீசினாலும் அசால்டாக ரிவர்ஸ் ஸ்வீப் அடிக்கும் அவர் 2020/21 சீசனில் நடைபெற்ற பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடரில் சதம் அடிக்கவில்லை என்றாலும் சிட்னி, காபா ஆகிய டெஸ்ட் போட்டிகளில் மிரட்டலாக பேட்டிங் செய்து ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் மண்ணை கவ்வ வைத்து இந்தியா கோப்பையை வெல்ல துருப்புச் சீட்டாக செயல்பட்டதை யாரும் மறுக்க முடியாது. அதே அதிரடியை பயன்படுத்தி தான் தோனியால் கூட முடியாத இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளில் சதமடித்த முதல் ஆசிய விக்கெட் கீப்பர் என்ற சாதனை படைத்துள்ளார்.

- Advertisement -

பிரிதிவி ஷா:
இந்நிலையில் டெல்லியை சேர்ந்த ரிஷப் பண்ட் மற்றும் பிரிதிவி ஷா ஆகியோர் இணைந்து வருங்காலங்களில் தங்களது அதிரடியால் டெஸ்ட் கிரிக்கெட்டை இந்தியாவிற்காக ஆளப் போகிறார்கள் என்று முன்னாள் இந்திய வீரர் விரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் வரலாற்றிலேயே முதல் முறையாக சேவாக் தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிரடி என்றால் என்னவென்று காட்டியவர். டெஸ்ட் போட்டிகளில் 2 முத்சதங்கள் அடித்த ஒரே இந்திய பேட்ஸ்மேனாக சாதனை படைத்துள்ள அவர் தான் முதல் முறையாக டெஸ்ட்டிலும் டி20 கிரிக்கெட்டை விளையாடி நிறைய ரசிகர்களை திரும்பிப் பார்க்க வைத்தவர் என்றே கூறலாம்.

Prithivi Shaw Sehwag

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “அவர் (பிரிதிவி) டெஸ்ட் கிரிக்கெட் மீதான ஆர்வத்தை திரும்ப கொண்டு வரக்கூடிய ஒரு வீரர். நமது அணியில் ரிஷப் பண்ட் மற்றும் பிரிதிவி ஷா ஆகியோர் இருந்தால் எதிரணியினர் 400 ரன்கள் அடித்தாலும் போதாது என்று யோசிப்பார்கள். அவர்கள் இருவரும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு ஆட்சி நடத்தி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை வெல்ல உதவுவார்கள்” என்று கூறினார்.

- Advertisement -

2018 அண்டர்-19 உலக கோப்பையில் அசத்திய பண்ட் – ஷா இருவருமே அதே வருடத்தில் இந்திய டெஸ்ட் அணியில் அறிமுகமாகி அசத்தலான தொடக்கம் பெற்றனர். அதில் தோனிக்கு பின் அற்புதமான விக்கெட் கீப்பராக நிலையான இடம் பிடித்து பண்ட் எதிரணிகளை மிரட்டி வருகிறார். பிரிதிவி ஷா’வும் அறிமுக போட்டியிலேயே சதமடித்து அசத்திய போதிலும் நிலையான இடத்தை தக்க வைக்க விடாமல் கோட்டைவிட்டார். இருப்பினும் ஐபிஎல் தொடரில் அதிரடி காட்டி வரும் அவர் வரும் காலங்களில் குறிப்பாக ரோகித் சர்மா போன்ற மூத்த வீரர்கள் ஓய்வுக்குப் பின் நிலையாக விளையாட வாய்ப்புகள் உள்ளது.

Pant

பண்ட் ஓபனர்:
அந்த வகையில் வரும் காலங்களில் அந்த இருவரும் சிறப்பாக செயல்பட்டு 2021இல் விராட் கோலி தலைமையில் இந்தியா கோட்டை விட்ட டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை வென்று கொடுப்பார்கள் என சேவாக் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும் ரிசப் பண்ட் ஓபனிங் பேட்ஸ்மேனாக களமிறங்கினால் சிறப்பாக செயல்படுவார் என்றும் சேவாக் கணித்துள்ளார்.

இதையும் படிங்க : எளிய இலக்கானாலும் கடைசி வரை போராடிய சென்னை – அசால்ட்டாக சாய்த்த தமிழக வீரர், நடந்தது என்ன?

இதுபற்றி அவர் மேலும் பேசியது பின்வருமாறு. “4 அல்லது 5-வது இடத்தில் பொறுப்புடன் விளையாட வேண்டிய சூழ்நிலைகளில் அவர் களமிறங்குகிறார். ஆனால் தொடக்க வீரராக அவர் களமிறங்கினால் மேலும் வெற்றி பெற கூடியவராக இருப்பார்” என்று கூறினார்.

Advertisement