தரமான சதத்தை விளாசி தோனியை முந்தி சாதனை மேல் சாதனை படைத்த ரிஷப் பண்ட் – விவரம் இதோ

Pant
- Advertisement -

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக கேப்டவுன் நகரில் இந்தியா விளையாடி வரும் 3வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து 223 ரன்கள் எடுத்தது, அதிகபட்சமாக கேப்டன் விராட் கோலி 79 ரன்கள் குவித்தார். இதை அடுத்து பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்காவை மிகச் சிறப்பாக பந்துவீசி கதிகலங்க வைத்த இந்திய பவுலர்கள் வெறும் 210 ரன்களுக்கு சுருட்டி அசத்தினர், அதிகபட்சமாக இந்தியா சார்பில் பட்டைய கிளப்பும் வகையில் பந்து வீசிய ஜஸ்பிரித் பும்ரா 5 விக்கெட்டுகள் சாய்த்து அசத்தினார்.

pant 2

- Advertisement -

காப்பாற்றிய பண்ட்:
13 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்தியாவிற்கு தொடக்க வீரர்கள், அஜிங்கிய ரகானே, புஜாரா என அனைத்து முக்கிய பேட்டர்களும் சொற்ப ரன்களில் அவுட் ஆனதால் 58/4 எனத் திண்டாடிய இந்தியாவை கேப்டன் விராட் கோலி மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் இணைந்து சரிவில் இருந்து மீட்டெடுக்க போராடினார்கள்.

94 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த இந்த ஜோடியில் மிகவும் நிதானத்துடன் விளையாடிய விராட் கோலி 29 ரன்கள் எடுத்திருந்த நிலையில் முக்கியமான நேரத்தில் அவுட்டானர். ஆனாலும் மறுபுறம் தொடர்ந்து நங்கூரமிட்ட ரிஷப் பண்ட் காற்றில் பறக்க இருந்த இந்தியாவின் மானத்தை ஓரளவு காப்பாற்றினார் என்றே கூறலாம்.

pant 1

அதிரடி சதம்:
கடைசி நேரத்தில் டெயில் எண்டர்களை வைத்துக்கொண்டு ரன்கள் குவிக்க போராடிய அவர் நிதானத்துடனும் அதேசமயம் அதிரடியாகவும் பேட்டிங் செய்து 6 பவுண்டரிகள் மற்றும் 4 இமாலய சிக்சர்கள் உட்பட 139 பந்துகளில் சதம் விளாசி கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தார். இருப்பினும் மறுபுறம் வந்த வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் அவுட் ஆனதால் இந்தியா 198 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

- Advertisement -

இதை அடுத்து 212 ரன்கள் எடுத்தால் இந்தப் போட்டியில் வெற்றி என்பது மட்டுமல்லாமல் இந்த தொடரிலும் வெற்றி என்ற இலக்குடன் தென்னாப்பிரிக்கா தனது 2வது இன்னிங்சை தொடங்கி விளையாடி வருகிறது.

Pant

சாதனை மேல் சாதனை:
இந்த போட்டியில் சதமடித்த ரிஷப் பண்ட் சில வரலாற்று சிறப்புமிக்க சாதனைகளை படைத்துள்ளார் அதைப் பற்றி பார்ப்போம் வாங்க: 1. முதலாவதாக இந்த சதத்தின் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் “தென்னாப்பிரிக்க மண்ணில் சதம் அடித்த முதல் ஆசிய விக்கெட் கீப்பர் மற்றும் முதல் இந்திய விக்கெட் கீப்பர் என்ற 2 புதிய வரலாற்றை ரிஷப் பண்ட் இன்று எழுதியுள்ளார். இதற்கு முன் எம்எஸ் தோனி, குமார் சங்கக்காரா உள்ளிட்ட எந்த ஒரு இந்திய அல்லது ஆசியாவை சேர்ந்த விக்கெட் கீப்பரும் தென்னாப்பிரிக்க மண்ணில் சதம் அடித்ததே கிடையாது.

- Advertisement -

2. இத்துடன் தென்னாப்பிரிக்க மண்ணில் அதிகபட்ச டெஸ்ட் ஸ்கோர் பதிவு செய்த இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார். இதற்கு முன் கடந்த 2010 ஆம் ஆண்டு செஞ்சூரியன் மைதானத்தில் எம்எஸ் தோனி 90 ரன்கள் அடித்திருந்ததே இதற்கு முந்தைய சாதனையாக இருந்தது.

3. இத்துடன் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா ஆகிய 3 நாடுகளில் சதம் அடித்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் மற்றும் அதிகபட்ச டெஸ்ட் ஸ்கோர் பதிவு செய்த இந்திய விக்கெட் கீப்பர் என்ற பெருமையையும் ரிஷப் பண்ட் பெற்றுள்ளார். இதற்கு முன் இந்த 3 நாடுகளில் எம்எஸ் தோனி உட்பட எந்த ஒரு இந்திய விக்கெட் கீப்பரும் சதம் அடித்ததே கிடையாது. அந்த விவரம் இதோ: 114 – ஓவல் மைதானம், இங்கிலாந்து, 2018. 159* – சிட்னி, ஆஸ்திரேலியா, 2019. 100* – கேப் டவுன், தென்ஆப்பிரிக்கா, 2022*.

- Advertisement -

4. இத்துடன் ஆஸ்திரேலியா மற்றும் தென்ஆப்பிரிக்க மண்ணில் அதிகபட்ச டெஸ்ட் ஸ்கோர் பதிவு செய்த ஆசிய விக்கெட் கீப்பர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார். அந்த விவரம் இதோ: 159* – சிட்னி, ஆஸ்திரேலியா, 2019. 100* – கேப் டவுன், தென்ஆப்பிரிக்கா, 2022*.

இதையும் படிங்க : இவர் இப்படி பேட்டிங் பண்ணா ஜாலியா உக்காந்து பாக்கலாம். என்னா அடி – வியந்து போன சேவாக்

கடந்த ஜனவரி 2021ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் காபா மைதானத்தில் 89* ரன்கள் விளாசி இந்தியாவின் சரித்திர வெற்றிக்கு வித்திட்டார். தற்போது அதேபோலவே இந்த போட்டியிலும் 100* ரன்கள் விளாசி இந்தியாவை காப்பாற்றியுள்ளார். இத்தனைக்கும் வெறும் 24 வயது மட்டுமே நிரம்பியுள்ள ரிஷப் பண்ட் இந்த வயதிலேயே இந்த அளவுக்கு சிறப்பாக விளையாடி சரித்திர சாதனைகளை படைக்கிறார் என்றால் இன்னும் வருடங்கள் செல்ல செல்ல இவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகச்சிறந்த “டாப் டக்கர்” விக்கெட் கீப்பராக உருவெடுப்பார் என்பதில் சந்தேகமே இல்லை.

Advertisement