50 ரன்கள் அடிப்பேன் ! எழுதி வைத்து சொல்லி அடித்து ஆச்சர்யப்படுத்திய இளம் வீரர் – ருசிகர பின்னணி

Rinku Singh
- Advertisement -

அசத்தலாக நடைபெற்று வரும் ஐபிஎல் 2022 தொடரின் லீக் சுற்றுப் போட்டிகள் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில் மே 2-ஆம் தேதி நேற்று நடைபெற்ற 47-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் மற்றும் கொல்கத்தா ஆகிய அணிகள் பங்கேற்றன. மும்பை வான்கடே மைதானத்தில் விறுவிறுப்புடன் நடைபெற்ற அப்போட்டியில் ராஜஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த கொல்கத்தா 5 தொடர்ச்சியான தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்து 4-வது வெற்றியுடன் புள்ளிப் பட்டியலில் 7-வது இடத்திற்கு முன்னேறியது. அந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை அடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் 20 ஓவர்களில் கடும் போராட்டத்திற்குப் பின் 152/5 ரன்கள் மட்டுமே எடுத்தது.

Nitish Rana 2

- Advertisement -

ஏனெனில் அந்த அணியின் நட்சத்திர தொடக்க வீரர் ஜோஸ் பட்லர் 22 (25) தேவ்தூத் 2 (5) கருண் நாயர் 13 (13) ரியன் பராக் 19 (12) போன்ற வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றிய நிலையில் அந்த சரிவையெல்லாம் தாங்கிப் பிடிக்கும் வகையில் பொறுப்புடன் பேட்டிங் செய்த சஞ்சு சாம்சன் 54 (49) ரன்கள் எடுக்க இறுதியில் சிம்ரோன் ஹெட்மையர் அதிரடியாக 27* (13) ரன்கள் விளாசி காப்பாற்றினார். கொல்கத்தா சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக டிம் சவுத்தி 2 விக்கெட்டுகள் எடுத்தார்.

அசத்திய ரிங்கு சிங்:
அதை தொடர்ந்து 153 என்ற சுலபமான இலக்கை துரத்திய கொல்கத்தாவிற்கு பாபா இந்திரஜித் 15 (16) ஆரோன் பின்ச் 4 (7) ஆகிய தொடக்க வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றியதால் 32/2 என ஆரம்பத்திலேயே தடுமாறிய அந்த அணிக்கு அடுத்து களமிறங்கிய கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் மற்றும் நிதிஷ் ராணா ஆகியோர் 60 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து மீட்டெடுக்க முயற்சித்தனர். அப்போது ஸ்ரேயாஸ் ஐயர் 34 (32) ரன்களில் அவுட்டானதால் பின்னடைவை சந்தித்த கொல்கத்தாவிற்கு கடைசி 5 ஓவர்களில் வெற்றிக்கு 48 ரன்கள் தேவைப்பட்டது.

RR vs KKR

அப்போது களமிறங்கிய இளம் வீரர் ரிங்கு சிங் ராஜஸ்தான் பவுலர்களை தைரியமாகவும் அதிரடியாகவும் எதிர்கொண்டு 23 பந்துகளில் 6 பவுண்டரி 1 சிக்சர் உட்பட 42* ரன்கள் விளாசி பினிஷிங் செய்யும் வகையில் பேட்டிங் செய்தார். அவரின் உறுதுணையை பயன்படுத்திய நித்திஷ் ராணா 3 பவுண்டரி 2 சிக்சருடன் 48* (37) ரன்கள் எடுத்ததால் 19.1 ஓவர்களிலேயே 158/3 ரன்களை கொல்கத்தா சிறப்பான வெற்றியைப் பெற்றது. மறுபுறம் பேட்டிங்கில் பெரிய ரன்களை எடுக்க தவறிய ராஜஸ்தான் பங்கேற்ற 10 போட்டிகளில் 4-வது தோல்வியை பதிவு செய்தாலும் புள்ளி பட்டியலில் 3-வது இடத்தில் நீடிக்கிறது.

- Advertisement -

ஆட்டநாயகன் ரிங்கு:
இந்த வெற்றிக்கு நிதிஷ் ராணா 48* (37) ரன்கள் விளாசினாலும் கூட 182.61 என்ற மிரட்டலான ஸ்ட்ரைக் ரேட் விதத்தில் 6 பவுண்டரி 1 சிக்சருடன் 42* (23) ரன்கள் எடுத்த ரிங்கு சிங் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். உத்திரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த அலிகார் நகரில் பிறந்த அவர் 24 வயது மட்டுமே நிரம்பியுள்ள நிலையில் கடந்த 2018 முதல் கொல்கத்தா அணியில் தொடர்ந்து இருந்து வந்தாலும் பெரிய அளவில் வாய்ப்பு கிடைக்காமல் பெஞ்சில் அமர்ந்து வந்தார். அந்த நிலைமையில் நேற்று கிடைத்த பொன்னான வாய்ப்பில் சிறப்பாக செயல்பட்ட அவர் 5 வருடங்கள் கழித்து ஆட்டநாயகன் விருது வென்றது மிகப்பெரிய மகிழ்ச்சி என்று மெய் சிலிர்த்தார்.

இது பற்றி அவர் பேசியது. “ஒரு சொல்லத் தெரியாத உணர்வு எனது மனதில் இருந்துகொண்டே வந்தது. நான் ஆட்ட நாயகன் விருது வெல்வதற்காக மிக நீண்ட வருடங்கள் காத்திருந்தேன். அது 5 வருடங்கள் கழித்து வந்தாலும் இறுதியாக என்னை வந்தடைந்தது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது” என கூறினார்.

- Advertisement -

அதை விட நேற்றைய போட்டியில் தாம் கண்டிப்பாக 50 ரன்கள் அடிக்க போகிறேன் என்ற தன்னம்பிக்கையால் முன்கூட்டியே அதை தனது கையில் எழுதி வைத்துக் கொண்டதாக அதை அவர் போட்டி முடிந்த பின் தன்னுடன் விளையாடிய நிதிஷ் ராணாவிடம் தெரிவித்தார்.

சொல்லி அடித்த ரிங்கு:
இது பற்றி கொல்கத்தா அணி வெளியிட்டுள்ள வீடியோவில் உனது கையில் என்ன எழுதியிருக்கிறது என்று நிதிஸ் ராணா கேட்க அதற்கு ரிங்கு சிங் பதில் அளித்தது பின்வருமாறு. “இன்றைய போட்டியில் நான் மிகச் சிறப்பாக பெரிய ரன்களை அடித்து ஆட்டநாயகன் விருதை வெல்வேன் என்ற உள்ளுணர்வு எனக்கு தோன்றியது. அதை 50 ரன்கள் என எனது கையில் எழுதி வைத்து மனதில் ஆழமாக பதித்துக் கொண்டேன்” என்று கூறினார்.

இதையும் படிங்க : இது உங்க ஊர்ல ஒய்டா ! ரிவியூ கேட்ட சாம்சன், மோசமான அம்பயரால் கொதிக்கும் ரசிகர்கள் – எதற்கு தெரியுமா

அதை தனது கையில் எழுதியதையும் வீடியோவில் காட்டிய அவர் எழுதியது போலவே சொல்லி அடித்து ஆட்டநாயகன் விருதையும் வென்றது பல ரசிகர்களையும் வியக்க வைத்து பாராட்ட செய்துள்ளது.

Advertisement