இது உங்க ஊர்ல ஒய்டா ! ரிவியூ கேட்ட சாம்சன், மோசமான அம்பயரால் கொதிக்கும் ரசிகர்கள் – எதற்கு தெரியுமா

Wide Umpire RR vs KKR
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடரில் மே 2-ஆம் தேதி நடைபெற்ற 47-ஆவது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதின. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற அப்போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை அடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் 20 ஓவர்களில் கடும் போராட்டத்திற்குப் பின் 152/5 ரன்கள் சேர்த்தது. ஏனெனில் அந்த அணிக்கு நல்ல பார்மில் இருக்கும் நட்சத்திர தொடக்க வீரர் ஜோஸ் பட்லர் 22 (25) ரன்களில் அவுட்டாக தேவ்தூத் 2 (5) கருண் நாயர் 13 (13) ரியன் பராக் 19 (12) போன்ற முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஏமாற்றினார்.

- Advertisement -

அந்த சரிவை சரிசெய்வதற்கு கேப்டன் சஞ்சு சாம்சன் பொறுப்புடன் பேட்டிங் செய்து 54 (49) ரன்கள் எடுத்து முக்கிய நேரத்தில் ஆட்டமிழந்தார். இறுதியில் சிம்ரோன் ஹெட்மையர் அதிரடியாக 1 பவுண்டரி 2 சிக்சருடன் 27* (13) ரன்கள் எடுத்து 150 ரன்களை தாண்ட வைத்தார். கொல்கத்தா சார்பில் அதிகபட்சமாக பந்துவீச்சில் டிம் சவுத்தி 2 விக்கெட்டுகள் எடுத்தார்.

கொல்கத்தா நிம்மதி:
அதை தொடர்ந்து 153 என்ற இலக்கை துரத்திய கொல்கத்தாவுக்கு ஆரோன் பின்ச் 4 (7) பாபா இந்திரஜித் 15 (16) ஆகிய தொடக்க வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டானதால் 32/2 என ஆரம்பத்திலேயே தடுமாறி அந்த அணியை அடுத்து களமிறங்கிய கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் நிதிஷ் ராணாவுடன் இணைந்து மீட்டெடுக்க போராடினார். 3-வது விக்கெட்டுக்கு பொறுப்பான 60 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த இந்த ஜோடியில் ஸ்ரேயாஸ் அய்யர் 34 (32) ரன்களில் அவுட்டானதால் அந்த அணி பின்னடைவை சந்தித்தது.

RR vs KKR

இறுதியில் கடைசி 5 ஓவரில் வெற்றிக்கு 46 ரன்கள் தேவைப்பட்ட போது அடுத்து களமிறங்கிய இளம் வீரர் ரிங்கு சிங் அதிரடியாக 6 பவுண்டரி 1 சிக்சருடன் 42* (23) ரன்கள் எடுக்க மறுபுறம் பொறுப்புடன் பேட்டிங் செய்த நித்திஷ் ராணா 3 பவுண்டரி 2 சிக்சருடன் 48* (37) ரன்கள் எடுத்து நல்ல பினிஷிங் கொடுத்ததால் 19.1 ஓவரில் 158/3 ரன்கள் எடுத்த கொல்கத்தா 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இதனால் தொடர்ச்சியாக 5 போட்டிகளில் தோல்வியடைந்து வந்த அந்த அணி 10 போட்டிகளில் 4-வது வெற்றியை பதிவு செய்து புள்ளி பட்டியலில் 7-வது இடத்திற்கு முன்னேறி நிம்மதியடைந்தது.

- Advertisement -

ஒய்ட் சர்ச்சை:
முன்னதாக இப்போட்டியில் கொல்கத்தாவுக்கு சாதகமாக நடந்து கொள்ளும் வகையில் அம்பயர்கள் செயல்பட்டது ரசிகர்களை கோபமடைய வைத்துள்ளது. அதாவது கொல்கத்தாவின் வெற்றிக்கு கடைசி 2 ஓவரில் 18 ரன்கள் தேவைப்பட்ட போது அதை வீசிய பிரசித் கிருஷ்னா முதல் 2 பந்துகளில் தலா 1 ரன்கள் மட்டுமே கொடுத்த நிலையில் 3-வது பந்தை ஒய்ட் போல் வீச முயற்சித்து பேட்ஸ்மேனுக்கு சவாலை கொடுக்க நினைத்தார். அதற்கேற்றார்போல் ஒய்ட் பந்துகளை அடையாளம் காட்டும் வெள்ளை கோட்டிற்கு மேல் மிகச் சரியாக குறிபார்த்து வீசினார். அதே சமயம் அதை அடிப்பதற்காக அதை எதிர்கொண்ட ரின்கு சிங் சற்று இடப்புறமாக நகர்ந்து பவுண்டரி அடிக்க முயன்ற போதிலும் அவரால் ரன் எதுவும் எடுக்க முடியவில்லை.

ஆனால் அதை அம்பயர் ஒயிட் வழங்கியது ராஜஸ்தான் வீரர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதன்பின் 4-வது பந்திலும் அதேபோல் ப்ரசித் கிருஷ்ணா வீச மீண்டும் அதை ஒய்ட் என அம்பயர் அறிவித்தார். மேலும் கடைசிப் பந்திலும் அதே போன்ற பந்தை வீச முயற்சித்த அவருக்கு மீண்டும் கருணை காட்டாத அம்பயர் ஒயிட் வழங்கினார். அப்படி ஒரே ஓவரில் 3 அதிர்ச்சிகரமான முடிவுகளை அம்பயர் வழங்கியதால் கடுப்பான ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் அம்பயரின் தீர்ப்பை எதிர்த்து டிஆர்எஸ் ரிவியூ கேட்டு அம்பயரின் அருகே சென்று நியாயம் கேட்டார். ஆனால் ஒய்ட் பந்துகளுக்கெல்லாம் டிஆர்எஸ் எடுக்க முடியாது என்பது போன்ற வார்த்தைகளைக் கூறி சஞ்சு சம்சன் அம்பயர் அனுப்பி வைத்தார்.

ரசிகர்கள் கோபம்:
ஆனால் அடிப்படை விதிமுறைப்படி ஒய்ட் என்பது அந்த சமயத்தில் அந்த பந்தை எதிர்கொள்ளும் பேட்ஸ்மேன் நகர்கிறாரா என்பதைப் பொறுத்து தீர்மானிக்க வேண்டும் என்று சமீபத்தில் லண்டனின் எம்சிசி அமைப்பு ஒயிட் விதிமுறைகளில் மாற்றம் செய்து அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

அப்படிப்பட்ட நிலையில் முதலில் பந்து வெள்ளை கோட்டிற்கு மேலே சென்ற நிலையில் அதை பேட்ஸ்மேன் நகர்ந்து அடிக்க முயன்றதால் அது ஒய்ட் கிடையாது என்பது அம்பயருக்கு தெரியாதா என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்களது கோபத்தை வெளிப்படுத்துகின்றனர். மேலும் இது போல இந்த வருட ஐபிஎல் தொடரில் நிறைய அம்பயரிங் குளறுபடிகள் தொடர்ந்து அரங்கேறுவதையும் அவர்கள் சுட்டிக் காட்டி வருகின்றனர்.

Advertisement