IPL 2023 : என்னா மனுஷன்யா, வாங்கிய சம்பளத்தை தன்னை போன்ற ஏழை வீரர்களுக்கு அப்படியே தனமாக கொடுத்த ரிங்கு சிங்

Rinku SIngh
- Advertisement -

ஐபிஎல் 2023 தொடரில் இதுவரை 25 லீக் போட்டிகள் நடைபெற்றாலும் நடப்பு சாம்பியன் குஜராத்தை 3 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா தோற்கடித்த போட்டி தான் ரசிகர்களுக்கு உச்சகட்ட த்ரில்லர் விருந்து படைத்தது. அகமதாபாத் நகரில் நடைபெற்ற அப்போட்டியில் தமிழக வீரர்கள் சாய் சுதர்சன், மற்றும் விஜய் சங்கர் ஆகியோரது அதிரடியால் குஜராத் நிர்ணயித்த 205 ரன்களை துரத்திய கொல்கத்தாவுக்கு வெங்கடேஷ் ஐயர் மற்றும் நித்திஷ் ராணா ஆகியோர் அதிரடியாக விளையாடி வெற்றியை உறுதி செய்து ஆட்டமிழந்தனர்.

ஆனால் அப்போது ஆண்ட்ரே ரசல் உள்ளிட்ட 3 வீரர்களை அடுத்தடுத்து அவுட்டாக்கி ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்திய ரசித் கான் கொல்கத்தாவின் வெற்றியை கிட்டத்தட்ட குஜராத் பக்கம் கொண்டு வந்தார். இருப்பினும் மனம் தளராமல் போராடிய இளம் வீரர் ரிங்கு சிங் 19வது ஓவரின் கடைசி 2 பந்துகளில்அடுத்தடுத்த சிக்சர்களை பறக்க விட்டு யாஷ் தயாள் வீசிய கடைசி ஓவரின் கடைசி 5 பந்துகளில் 29 ரன்கள் தேவைப்பட்ட போது யாருமே எதிர்பாராத வகையில் அடுத்தடுத்த 5 சிக்சர்களை தெறிக்க விட்டு 48* (21) ரன்கள் விளாசி கொல்கத்தாவுக்கு நம்ப முடியாத வெற்றியை பெற்றுக் கொடுத்தார்.

- Advertisement -

என்னா மனுஷன்யா:
குறிப்பாக உலக டி20 கிரிக்கெட்டில் இதற்கு முன் யாருமே கடைசி ஓவரில் அடுத்தடுத்து 5 சிக்ஸர்களை பறக்க விட்டு 30 ரன்களை விளாசி வெற்றியை பெற்று கொடுத்ததே கிடையாது. அப்படிப்பட்ட மகத்தான வெற்றியை பெற்றுக் கொடுத்த அவர் கடந்த 2018 முதல் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக விளையாடி வருகிறார். உத்திர பிரதேசத்தில் இருக்கும் சிலிண்டர் விநியோகம் செய்யும் சாதாரண நபரின் மகனாக ஏழைக் குடும்பத்தில் பிறந்து கிரிக்கெட்டின் மீதான காதலால் பெரிய அளவிலான படிப்புகளை விட்டு உள்ளூர் அளவில் விளையாட துவங்கிய அவர் கடந்த 2018ஆம் ஆண்டு கொல்கத்தா அணிக்கு தேர்வு செய்யப்பட்டார்.

முதல் முறையாக 80 லட்சத்திற்கு வாங்கப்பட்ட அவர் 2020 வரை வெறும் 10 போட்டிகளில் மட்டுமே விளையாடும் வாய்ப்பை பெற்றார். அந்த நிலையில் கடந்த வருடம் 55 லட்சத்திற்கு மீண்டும் கொல்கத்தா அணியில் வாங்கப்பட்ட அவர் லக்னோவுக்கு எதிரான போட்டியில் போராடி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை நழுவ விட்டார். ஆனாலும் இம்முறை சிறப்பாக செயல்பட்டு வரும் அவர் இந்த சீசனில் சம்பளமாக கிடைத்த 55 லட்சத்தில் 50 லட்சத்தை அப்படியே தம்மைப் போலவே ஏழ்மையால் தவிக்கும் இளம் வீரர்கள் தங்குவதற்கான விடுதி கட்டுவதற்காக தானமாக கொடுத்துள்ளார்.

- Advertisement -

இதற்கு முன் கிடைத்த சம்பளங்களால் தன்னுடைய குடும்பத்தை ஓரளவுக்குறை சேற்றதாக சமீபத்தில் நெகிழ்ச்சியுடன் பேட்டி கொடுத்திருந்த ரிங்கு சிங் தற்போது தாம் கிரிக்கெட் விளையாட பழகிய அலிகார் நகரில் உள்ள ஏழ்மையான இளம் வீரர்கள் தங்கி விளையாடுவதற்காக 50 லட்சம் செலவில் புதிய விடுதி ஒன்றை கட்டியமைத்து கொடுக்க உள்ளார். அவரது செலவில் தற்போது நடைபெற்று வரும் கட்டுமான பணிகள் அடுத்த மாதம் நிறைவு பெறுவதாக தெரிவிக்கும் அவருடைய பயிற்சியாளர் மசூட்ஸ்-ஜாபர் அமினி இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு.

“அவர் எப்போதுமே தம்மை போன்ற பொருளாதார அளவில் தடுமாறும் ஏழை இளம் வீரர்கள் தங்கி விளையாடுவதற்கான ஒரு விடுதியை கட்டமைக்க வேண்டுமென விரும்பினார். அந்த நிலையில் தற்போது பொருளாதார அளவில் சற்று முன்னேறியுள்ள அவர் தம்முடைய அந்த கனவை நிஜமாக்க முடிவெடுத்துள்ளார். இதற்கான பணிகள் 3 மாதங்கள் முன்பாகவே ஆரம்பித்து விட்டன. ஐபிஎல் தொடரில் இணைவதற்கு முன்பாக ரிங்கு சிங் அந்த பணிகளை அருகிலிருந்தே பார்த்தார்”

இதையும் படிங்க:SRH vs MI : ஓப்பனிங் முக்கியமல்ல, முக்கிய நேரங்களில் சொதப்பிய ஹைதெராபாத்தை – பழைய ஃபார்மில் மும்பை ஹாட்ரிக் வெற்றி

“அந்த விடுதியில் நவீன வசதிகளுடன் 14 அறைகள் மற்றும் 4 பயிற்சியாளர்கள் இருக்கும் வகையில் கட்டமைக்கப்பட்டு வருகிறது. அதே போல் கேண்டீன் முறையில் உணவுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இதற்கு சுமார் 50 லட்சம் செலவாகும். அதை அனைத்தையும் ரிங்கு ஏற்றுக் கொண்டுள்ளார்” என்று கூறினார். இதை அறியும் ரசிகர்கள் முழுமையாக 1 கோடி கூட சம்பளம் வாங்குவதற்கு முன்பாகவே இப்படி தானமாக வாரி கொடுத்துள்ள ரிங்கு சிங்கை “என்ன மனுஷன்யா” என்று பாராட்டி வருகிறார்கள்.

Advertisement