ஐ.பி.எல் தொடரின் போது எனது பேட்டிங்கை பார்த்த தோனி கொடுத்த அட்வைஸ் இதுதான் – ரிங்கு சிங் வெளிப்படை

Rinku-Singh
- Advertisement -

இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஏசியன் கேம்ஸ் தொடரில் பங்கேற்கப்போகும் இந்திய அணியை அறிவித்தது. இந்த ஆண்டு செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் இந்த தொடரானது நடைபெற உள்ளது. அதேவேளையில் எதிர்வரும் உலகக் கோப்பை தொடருக்காக ரோஹித் சர்மா தலைமையிலான முதன்மை இந்திய அணி பங்கேற்ப இருப்பதினால் இந்த ஏசியன் கேம்ஸ் தொடரில் இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணியை ருதுராஜ் கெய்க்வாட் வழி நடத்துவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான இந்த இரண்டாம் தர இந்திய அணியில் ரிங்கு சிங்கிற்கு முதன்முறையாக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

Rinku Singh 1

- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் 14 போட்டிகளில் விளையாடிய அவர் கிட்டத்தட்ட 150 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 474 ரன்கள் குவித்து அசத்தினார். அதிலும் குறிப்பாக குஜராத் அணிக்கு எதிரான ஒரு போட்டியில் 28 ரன்கள் தேவை என்ற நிலையில் தொடர்ச்சியாக 5 சிக்ஸர்களை விளாசி அனைவரையும் அசர வைத்திருந்தார். அவரது இந்த சிறப்பான ஆட்டம் காரணமாக இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கும் என்று அனைவரும் எதிர்பார்த்த வேளையில் தற்போது இந்த ஏசியன் கேம்ஸ் தொடருக்கான இந்திய அணியில் அவருக்கு இடம் கிடைத்துள்ளது.

இந்நிலையில் இந்திய அணியில் இடம் கிடைத்தது குறித்தும், ஐபிஎல் தொடரின் போது தோனி கொடுத்த அறிவுரைகள் குறித்தும் சில நெகிழ்ச்சியான கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். இது குறித்து அவர் கூறுகையில் : எல்லோருக்குமே இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்பது கனவாக இருக்கும். அந்த வகையில் நானும் இந்திய அணியின் ஜெர்சியை அணியப் போகிறேன். இதில் என்னை விட என்னுடைய குடும்பத்தினர் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.

Dhoni and Rinku

பல ஆண்டுகளாக நான் இதற்காக காத்திருந்தேன். என்னுடைய கஷ்டமான காலத்தில் எனக்கு என்னுடைய குடும்பம் உதவி இருக்கிறது. தற்போது நான் இந்திய அணியின் ஜெர்சியை அணிய காத்திருக்கிறேன். அப்படி ஒரு நாள் வரும்போது அதனை எனது குடும்பத்திற்காக அர்ப்பணிக்கிறேன் என ரிங்கு சிங் கூறினார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் : ஐபிஎல் தொடரில் விளையாடும்போது மூத்த வீரர்களுடன் பழகும் வாய்ப்பு கிடைக்கிறது.

- Advertisement -

அந்த வகையில் ஒவ்வொரு சென்னை அணிக்கு எதிரான போட்டி முடிந்த பிறகும் நான் தோனியுடன் நிறைய ஆலோசனைகளை மேற்கொள்வேன். ஏனெனில் என்னைப் போன்றே அவரும் ஐந்தாவது, ஆறாவது இடத்தில் நிறைய பேட்டிங் செய்துள்ளார். அவரது கரியர் முழுவதுமே அந்த இடத்தில் இறங்கி விளையாடியுள்ளார். எனவே அவர் கொடுக்கும் அறிவுரைகள் எனக்கு சரியாக இருக்கும் என்று உணர்கிறேன்.

இதையும் படிங்க : வாயில் பேசாம செயலில் காட்டுனாரு பாருங்க, அவர் தான் சாம்பியன் பிளேயர் – நட்சத்திர இந்திய வீரரை பாராட்டிய ஓஜா

தோனி இந்த ஐபிஎல் தொடரின் போது எனக்கு ஒரு முக்கியமான அட்வைஸை கொடுத்திருந்தார். அவர் கொடுத்த அந்த அட்வைஸ் ரொம்பவும் சிம்பிளானது தான் இருந்தாலும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அந்த வகையில் தோனி என்னிடம் கூறுகையில் : “நீங்க ரொம்ப நல்லா பேட்டிங் பண்றீங்க”, “இதற்கு முன்னதாக என்னென்னவெல்லாம் பண்ணிங்களோ அதையே பண்ணுங்க”, வேற எதுவும் வேணாம் என்று தோனி அட்வைஸ் கொடுத்தார் என ரிங்கு சிங் பகிர்ந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement