KKR vs PBKS : நான் அதைப்பத்தி யோசிக்குறதே கிடையாது. கடைசி பந்தில் வெற்றி பெற்றது குறித்து – ரிங்கு சிங் பேட்டி

Rinku Singh 1
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 16-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் எதிர்பார்த்த பல வெளிநாட்டு வீரர்கள் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் வேளையில் குறைந்த தொகைக்கு வாங்கப்பட்ட பல இளம் இந்திய வீரர்கள் தங்களது அசத்தலான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் நடப்பு 16-வது ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக கிடைத்த நம்பிக்கை நட்சத்திரமான ரிங்கு சிங் இந்த தொடர் முழுவதுமே மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி கொல்கத்தா அணியின் சிறந்த பினிஷராக மாறி வருகிறார்.

Rinku Singh

- Advertisement -

ஏற்கனவே குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் தொடர்ச்சியாக 5 சிக்ஸர்களை விளாசி அந்த அணியை வெற்றி அழைத்துச் சென்ற அவர் நேற்று நடைபெற்ற 53-வது லீகாட்டத்தில் பஞ்சாப் அணிக்கு எதிராக கடைசி ஓவரின் கடைசி பந்தில் பவுண்டரி அடித்து கொல்கத்தா அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றது அனைவரது மத்தியிலும் பாராட்டினை பெற்றுள்ளது. அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த 53-வது லீக் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணியானது 179 ரன்களை குவித்தது.

பின்னர் 180 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய கொல்கத்தா அணிக்கு கடைசி இரண்டு ஓவர்களில் 26 ரன்கள் தேவைப்பட்டது. அந்த நிலையில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரசல் மற்றும் ரிங்கு சிங் ஆகியோர் அந்த அணியை அற்புதமாக வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். அதிலும் குறிப்பாக கடைசி ஓவரின் ஐந்தாவது பந்தில் ரசல் ஆட்டம் அடைந்து வெளியேறினார்.

Rinku Singh 2

எனவே வெற்றிக்கு ஒரு பந்தில் இரண்டு ரன்கள் தேவை என்ற நிலை இருந்தது. அப்போது ரிங்கு சிங் கடைசி பந்தில் அட்டகாசமான பவுண்டரி ஒன்றினை விளாசி வெற்றிக்கு அழைத்துச் சென்றார். இந்நிலையில் பஞ்சாப் அணிக்கு எதிராக கடைசி பந்தில் அடித்த இந்த பவுண்டரி குறித்து பேசிய ரிங்கு சிங் கூறுகையில் : நான் கடைசி பந்து குறித்து எல்லாம் யோசித்ததே கிடையாது.

- Advertisement -

இந்த போட்டியில் மட்டுமல்ல 5 சிக்ஸர்களை தொடர்ச்சியாக விளாசிய போதும் நான் கடைசி பந்து குறித்து யோசித்ததே கிடையாது. பந்து எப்படி வருகிறதோ அந்த பங்திற்கு மரியாதை கொடுத்தே விளையாட நினைக்கிறேன். நிச்சயம் என்னால் போட்டிகளை முடித்துக் கொடுக்கும் திறமை என்னிடம் உள்ளது என்று நம்பி என்னுடைய ஆட்டத்தை விளையாடி வருகிறேன். நான் ஐந்தாவது இடத்தில் களமிறங்கினாலும் சரி, 6,7 இடத்தில் களமிறங்கினாலும் சரி என்னுடைய பங்களிப்பை சரியாக வழங்க வேண்டும் என்பதில் மட்டுமே உன்னிப்பாக உள்ளேன்.

இதையும் படிங்க : IPL 2023 : 20 ஓவரின் விலை 16 கோடியா? விமர்சித்த ரசிகர்களை ப்ளாக் செய்து – ஊருக்கு கிளம்பிய நட்சத்திர வீரர், நடந்தது என்ன

அதோடு போட்டியை வெற்றிகரமாக முடித்துக்கொடுக்க வேண்டும் என்றே நினைக்குறேன். இலக்கு எவ்வளவு என்றாலும் அதனை தொடவே நான் அதே போன்ற வழியிலேயே பயிற்சியையும் செய்து வருவதால் என்னால் போட்டியை முடித்து கொடுக்க முடிகிறது என ரிங்கு சிங் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement