IPL 2023 : 20 ஓவரின் விலை 16 கோடியா? விமர்சித்த ரசிகர்களை ப்ளாக் செய்து – ஊருக்கு கிளம்பிய நட்சத்திர வீரர், நடந்தது என்ன

PBKS vs MI Jofra Archer Jitesh Sharma
- Advertisement -

இந்தியாவின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் 6வது கோப்பையை வெல்லும் முனைப்புடன் விளையாடி வரும் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் தங்களுடைய முதல் 10 போட்டிகளில் 5 வெற்றிகளையும் 5 தோல்விகளையும் பதிவு செய்து தடுமாறி வருகிறது. கடந்த வருடம் வரலாற்றில் முதல் முறையாக புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பிடித்து பெரிய பின்னடைவை சந்தித்த அந்த அணிக்கு இந்த வருடம் ஜஸ்பிரித் பும்ரா இல்லாதது ஆரம்பத்திலேயே சறுக்கலை ஏற்படுத்தியது. இருப்பினும் உலக அளவில் தற்சமயத்தில் அசுர வேகத்தில் வீசக்கூடிய இங்கிலாந்தின் நம்பிக்கை நட்சத்திரம் ஜோப்ரா ஆர்ச்சர் காயத்திலிருந்து குணமடைந்து இந்த சீசனில் விளையாடியதால் நிச்சயம் தங்களது அணி வெற்றிப் பாதையில் நடக்கும் என்று மும்பை ரசிகர்கள் நம்பினார்.

சொல்லப்போனால் 2019இல் இங்கிலாந்து உலகக் கோப்பை வெல்ல பந்து வீச்சு துறையில் முக்கிய பங்காற்றிய அவரைப் போன்ற தரமான வீரரை வெளியில் விட்டால் மீண்டும் வாங்க முடியாது என்று கருதிய மும்பை அணி நிர்வாகம் ட்ரெண்ட் போல்ட்டை கழற்றி விட்டு காயத்தால் ஒரு போட்டியில் கூட விளையாட மாட்டார் என்பதை தெரிந்தும் 2022 மெகா ஏலத்தில் காயத்தால் 8 கோடி என்ற பெரிய தொகைக்கு வாங்கியது. ஆனால் அந்த சீசனில் எதிர்பார்த்தது போலவே ஒரு போட்டியில் கூட விளையாடாத காரணத்தால் 8 கோடி இலவச சம்பளமாக பெற்ற அவர் இந்த சீசனில் பெங்களூருவுக்கு எதிரான முதல் போட்டியிலேயே விராட் கோலியிடம் சரமாரியான அடி வாங்கி சொதப்பினார்.

- Advertisement -

ரசிகர்களுக்கு ப்ளாக்:
அதை தொடர்ந்து அடுத்த சில போட்டிகளிலேயே காயமடைந்து வெளியேறிய அவர் வெளிநாட்டுக்கு சென்று சிகிச்சைகளை மேற்கொண்டு மீண்டும் குணமடைந்து ஓரிரு போட்டிகளில் விளையாடியும் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாமல் ரன்களை வாரி வழங்கினார். அந்த நிலையில் ஐபிஎல் 2023 தொடரின் எஞ்சிய போட்டிகளிலிருந்து காயத்தால் ஜோப்ரா ஆர்ச்சர் விலகுவதாக அறிவித்துள்ள மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் அவருக்கு பதிலாக மற்றொரு இங்கிலாந்து வீரர் கிறிஸ் ஜோர்டானை வாங்கியுள்ளது.

கடந்த வருடம் சென்னை அணிக்காக வாங்கப்பட்டு ரன்களை வாரி வழங்கியதால் கழற்றி விடப்பட்ட அவரை தற்போது மும்பை வாங்கியுள்ளது அந்த அணி ரசிகர்களை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. அதை விட 10 போட்டிகளின் முடிவில் புள்ளி பட்டியலில் 8வது இடத்தில் மும்பை தவிப்பதால் சென்னைக்கு அடுத்தபடியாக தங்களுடைய மற்றொரு பரம எதிரியான பெங்களூருவுக்கு எதிராக மே 9ஆம் தேதி நடைபெறும் போட்டியில் எப்படியாவது வெற்றியை பெற்றுக் கொடுக்குமாறு ஜோப்ரா ஆர்ச்சரை இணைத்து அந்த அணியின் சில ரசிகர்கள் நேற்று ட்விட்டரில் கோரிக்கை வைத்திருந்தனர்.

- Advertisement -

அது மட்டுமல்லாமல் எதிர்பார்த்ததை விட மோசமாக செயல்பட்ட நீங்கள் ஒன்று சிறப்பாக செயல்படுங்கள் இல்லையேல் நாட்டுக்கு கிளம்புங்கள் என்று வேறு சில மும்பை ரசிகர்கள் கடந்த சில நாட்களாகவே அவரை விமர்சித்து வந்தனர். ஆனால் காயத்தால் வெளியேறிய கடுப்பில் இருந்த அவரோ அந்த ரசிகர்களை பிளாக் செய்து விட்டு இன்று இங்கிலாந்து திரும்பியுள்ளார். அதனால் கடுப்பான ரசிகர்கள் இனிமேல் எப்போதும் இவரை மும்பை அணிக்காக வாங்க கூடாது என்று சமூக வலைதளங்களில் வெறுப்பு கலந்த வேதனையுடன் விமர்சிக்கின்றனர்.

அவை அனைத்தையும் விட கடந்த வருடம் மற்றும் இந்த வருடத்தையும் சேர்த்து மொத்தமாக 16 கோடிகளை சம்பளமாக வாங்கிய ஜோப்ரா ஆர்ச்சர் முழுமையாக தொடர்ந்து 3 போட்டிகளில் விளையாடவில்லை. ஆனால் மும்பைக்காக இதுவரை வெறும் 5 போட்டிகளில் விளையாடி 20 ஓவர்களை வீசிய அவர் 190 ரன்களை 9.50 என்ற வள்ளலான எக்கனாமியில் வழங்கி வெறும் 2 விக்கெட்டுகளை மட்டுமே எடுத்து விட்டு நாடு திரும்பியுள்ளார்.

இதையும் படிங்க: IPL 2023 : ரோஹித் சர்மா தடுமாற்றத்துக்கு காரணம் அது தான், நம்ம சொன்னா கேட்கவா போறாரு – சேவாக் ஆதங்கம்

அதாவது வெறும் 20 ஓவர்களை வீசிய அவர் 16 கோடிகளை சம்பாதித்து இடையே மும்பை நிர்வாகம் சார்பில் இலவச மருத்துவ சிகிச்சைகளை எடுத்துக்கொண்டு நாடு திரும்பியுள்ளார். அதனால் உச்சகட்ட வெறுப்பில் உள்ள மும்பை ரசிகர்கள் 20 ஓவருக்கு 16 கோடியா என்றும் அவர் தங்களை ஏமாற்றி விட்டதாகவும் சமூக வலைதளங்களில் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Advertisement