IPL 2023 : ரோஹித் சர்மா தடுமாற்றத்துக்கு காரணம் அது தான், நம்ம சொன்னா கேட்கவா போறாரு – சேவாக் ஆதங்கம்

Rohit Sharma Virender Sehwag
- Advertisement -

மிகுந்த போட்டியுடன் நடைபெற்று வரும் 2023 ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் 6வது கோப்பையை வெல்லும் முனைப்புடன் விளையாடி வரும் வெற்றிகரமான மும்பை இந்தியன்ஸ் இதுவரை பங்கேற்ற 10 போட்டிகளில் 5 வெற்றிகளையும் 5 தோல்விகளையும் பதிவு செய்து தடுமாறி வருகிறது. குறிப்பாக பும்ரா இல்லாத நிலைமையில் பொறுப்புடன் செயல்பட வேண்டிய அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் அனைவரும் ரன்களை வாரி வழங்கி வெற்றியை தாரை பார்க்கின்றனர். அந்த நிலையில் இதுவரை பதிவு செய்த 5 வெற்றிகளுமே பேட்ஸ்மேன்களின் போராட்டத்தால் கிடைத்து என்றால் மிகையாகாது.

Rohit Sharma

- Advertisement -

ஆனால் அதைத் தெரிந்தும் கேப்டனாக முன்னின்று அதிரடி காட்ட வேண்டிய ரோஹித் சர்மா 10இல் ஒரு அரை சதம் மட்டுமே அடித்து எஞ்சிய 9 போட்டிகளில் சொதப்பலாக செயல்பட்டார். ஆரம்ப காலங்களில் ஹிட்மேன் என்று ரசிகர்கள் கொண்டாடும் அளவுக்கு அதிரடியாக விளையாடி 5000+ ரன்களை குவித்த மகத்தான வீரராக போற்றப்படும் அவர் சமீப காலங்களாகவே தடுமாற்றமாக செயல்பட்டு வருகிறார். குறிப்பாக கடந்த சீசனில் கேரியரில் முதல் முறையாக ஒரு அரை சதம் கூட அடிக்காமல் மோசமாக செயல்பட்ட அவர் வரலாற்றில் முதல் முறையாக புள்ளி பட்டியலில் மும்பை கடைசி இடத்தை பிடிப்பதற்கு முக்கிய காரணமாக அமைந்தார்.

சேவாக் அட்வைஸ்:
இந்தியாவுக்காகவும் சமீப காலங்களாகவே தொடர்ந்து பெரிய ரன்களை குவிக்க தடுமாறி வரும் அவர் பஞ்சாப்புக்கு எதிரான போட்டியில் டக் அவுட்டானதால் சென்னைக்கு எதிராக மிடில் ஆர்டரில் விளையாடும் திட்டத்தை கையிலெடுத்தார். ஆனால் அதில் மீண்டும் டக் அவுட்டான அவர் ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை டக் அவுட்டான வீரர் (16) மற்றும் கேப்டன் (10) ஆகிய இரட்டை மோசமான சாதனைகளை படைத்துள்ளார். அதனால் ரோஹித் சர்மா தன்னுடைய பெயரை நோஹிட் சர்மா என மாற்றிக் கொள்ள வேண்டுமென ஸ்ரீகாந்த் போன்ற நிறைய முன்னாள் வீரர்களும் ரசிகர்களும் சரமாரியாக விமர்சித்து வருகிறார்கள்.

Rohit Sharma Dhoni

இந்நிலையில் டெக்னிக்கல் அளவில் எந்த தடுமாற்றமும் இல்லாத நிலைமையில் மனதளவில் பிரச்சனை இருப்பதே ரோகித் சர்மா இப்படி தருமாறுவதற்கு காரணம் என்று முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் கூறியுள்ளார். குறிப்பாக 3 வகையான இந்திய அணிக்கும் கேப்டனாக செயல்பட்டு ஐபிஎல் தொடரிலும் மும்பையின் கேப்டனாக செயல்படுவதால் ஏற்பட்டுள்ள பணிச்சுமை மற்றும் அழுத்தத்தால் மனதளவில் ரோஹித் சர்மா குழப்பமடைந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

- Advertisement -

எனவே அதற்கு ஒரே தீர்வாக ஒரு சில போட்டிகளில் ஓய்வெடுத்துக் கொண்டு புத்துணர்ச்சியுடன் களமிறங்கினால் பெரிய ரன்களை எடுத்து முந்தைய போட்டிகளில் செய்த சொதப்பலை அவரால் ஈடு செய்ய முடியும் என்று கூறும் சேவாக் இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசியது பின்வருமாறு. “ரோகித் சர்மா களத்தில் பந்து வீச்சாளர்களுடன் பலப்பரீட்சை நடத்தவில்லை. மாறாக தமக்கு தாமே போட்டியிட்டு வருகிறார். அவரிடம் மனதளவில் ஏதோ ஒரு தேக்கம் இருக்கிறது. ஏனெனில் தற்போது அவருடைய பேட்டிங்கில் டெக்னிக்கல் அளவில் எந்த பிரச்சனையும் இருப்பதாக தெரியவில்லை”

Sehwag-1

“ஆனால் அவருடைய மனதுக்குள் ஏதோ ஒரு குழப்பம் இருந்து கொண்டே இருக்கிறது. எனவே அதை சரி செய்து கொண்டு ஒரு நாளில் அவர் அதிரடியாக செயல்பட்டால் முந்தைய போட்டிகளில் செய்த காலி ரன்களை ஈடு செய்ய முடியும்” என்று கூறினார். அவர் கூறுவது போல விராட் கோலியும் 2019க்குப்பின் அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் தடுமாறிய போது ஆசிய கோப்பைக்கு முன்பாக ஒரு மாதம் ஓய்வெடுத்து புத்துணர்ச்சியுடன் களமிறங்கி தற்போது முழுமையான ஃபார்முக்கு திரும்பியுள்ளார். அதே போல ரோஹித் சர்மாவும் தற்காலிகமாக ஓய்வெடுத்து வந்தால் மீண்டும் அசத்துவார் என்று சொல்லலாம்.

இதையும் படிங்க:IPL 2023 : பாவம் அர்ஷிதீப் மேல எந்த தப்பும் இல்ல, பஞ்சாப் தோல்விக்கு காரணம் அந்த பணக்காரர் தான் – சைமன் டௌல் விளாசல்

சொல்லப்போனால் மும்பை பிளே ஆஃப் சுற்றுக்கு செல்வது கடினம் என்பதால் இந்தியாவுக்காக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் புத்துணர்ச்சியுடன் களமிறங்க தற்காலிகமாக ஓய்வெடுங்கள் என்று ரோகித்தை ஜாம்பவான் கவாஸ்கர் கேட்டுக்கொண்டார். இருப்பினும் அதைக் கேட்காமல் தொடர்ந்து விளையாடி வரும் ரோகித் சர்மா இவர் கூறுவதையும் கேட்கப்போவதில்லை என்றே சொல்லலாம்.

Advertisement