IPL 2023 : பாவம் அர்ஷிதீப் மேல எந்த தப்பும் இல்ல, பஞ்சாப் தோல்விக்கு காரணம் அந்த பணக்காரர் தான் – சைமன் டௌல் விளாசல்

- Advertisement -

ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் மே 8ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற 53வது லீக் போட்டியில் பஞ்சாப்பை 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த கொல்கத்தா தங்களுடைய 5வது வெற்றியை பதிவு செய்தது. அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் 20 ஓவர்களில் 179/7 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் ஷிகர் தவான் 57 (47) ரன்கள் எடுக்க கொல்கத்தா சார்பில் அதிகபட்சமாக வருண் சக்கரவர்த்தி 3 விக்கெட்டுகள் சாய்த்தார். அதை துரத்திய கொல்கத்தாவுக்கு ரஹ்மத்துல்லா குர்பாஸ் 15, ஜேசன் ராய் 38 என தொடக்க வீரர்கள் குறைவான ரன்களில் ஆட்டமிழந்தனர்.

போதாகுறைக்கு 3வது விக்கெட்டுக்கு 51 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தாலும் தடுமாற்றமாகவே செயல்பட்ட வெங்கடேஷ் ஐயர் 11 (13) ரன்களில் அவுட்டாகி அழுத்தத்தை கொடுத்த நிலையில் மறுபுறம் போராடிய கேப்டன் நிதிஷ் ராணாவும் 51 (38) ரன்களில் ஆட்டமிழந்தார். அதனால் பஞ்சாப் வெற்றி பாதைக்கு திரும்பிய போதிலும் அடுத்து வந்த ரசல் தனது பாணியில் அதிரடியாக விளையாடி போராடினார். அந்த சமயத்தில் ஒரு பெரிய ஓவர் தேவைப்பட்ட நிலையில் யாரை அடிக்கலாம் என்று காத்துக் கொண்டிருந்த அவருக்கு சாம் கரண் சிக்கினார்.

- Advertisement -

பாவம் அர்ஷிதீப்:
அவரை அடித்து நொறுக்கிய ரசல் 19வது ஓவரில் 3 சிக்ஸர்களை பறக்க விட்டதால் கடைசி ஓவரில் வெறும் 6 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. இருப்பினும் 20 – 30 ரன்களை கூட கட்டுப்படுத்த முடியாத கடைசி ஓவரில் முழுமூச்சுடன் போராடிய அர்ஷிதீப் 0, 1, 1, 2 என முதல் 4 பந்துகளில் 4 ரன்களை மட்டும் கொடுத்து 5வது பந்தில் ரசலை 42 (23) ரன்களில் ரன் அவுட்டாக்கினார். ஆனால் கடைசி பந்தில் சிறந்த பந்தாக கருதப்படும் யார்க்கர் வீச முயற்சித்த அவர் தவறுதலாக ஃபுல் டாஸ் வீசியதை பயன்படுத்திய ரிங்கு சிங் அல்வா போல பவுண்டரியை அடித்து 21* (10) ரன்கள் குவித்து பஞ்சாப்பின் வெற்றியை பறித்து மீண்டும் ஹீரோவானார்.

அதனால் வெற்றியின் விளிம்பு வரை அழைத்து வந்த அர்ஷிதீப் களத்திலேயே மனமுடைந்து கண்ணீர் விடாத குறையாக அமர்ந்தார். குறிப்பாக கடந்த போட்டியில் 63 ரன்களை கொடுத்து சொதப்பிய அவர் இப்போட்டியில் 4 ஓவரில் 39 ரன்களை மட்டும் கொடுத்து இந்தளவுக்கு போராடியது ரசிகர்களின் பாராட்டுகளை பெற்றது. ஆனால் அவரது போராட்டத்தை வெறும் 3 ஓவரிலேயே 44 ரன்களை வழங்கிய ஷாம் கரண் வீணடிக்கும் வகையில் செயல்பட்டார்.

- Advertisement -

கடந்த 2021 டி20 உலக கோப்பையில் ஃபைனலில் ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருது வென்றதால் 18.5 கோடி என்ற உச்சகட்ட தொகைக்கு வாங்கப்பட்ட அவர் வரலாற்றில் இதற்கு முன் பெரிய தொகைக்கு வாங்கப்பட்டாலும் சுமாராக செயல்பட்ட வீரர்களைப் போலவே இந்த சீசனில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இந்நிலையில் இப்போட்டியில் 19வது ஓவரில் 20.5 கோடிக்கு நிகரான ரன்களை ஷாம் கரண் வாரி வழங்கியதே அர்ஷிதீப் போராட்டத்தை வீணடித்ததாக முன்னாள் வீரர் சைமன் டௌல் விமர்சித்துள்ளார்.

இது பற்றி கிரிக்பஸ் இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “அது அர்ஷிதீப் தவறு கிடையாது. சாம் கரண் ஓவர் தான் காரணமாகும். அர்ஷிதீப் கட்டுப்படுத்துவதற்கு ரன்கள் இல்லாத போதிலும் கடுமையாக போராடி கடைசி பந்தில் மட்டும் தவற விட்டார். இருப்பினும் அந்த ஓவரில் லெக் ஸ்டம்ப் திசையில் தொடர்ந்து அவர் யார்க்கர் பந்துகளை வீசியதால் பேட்ஸ்மேன் அதை கடைசி பந்தில் எளிதாக கணித்து விட்டார்”

இதையும் படிங்க:2003 மாதிரி 450 ரன்கள் அடிச்சு இந்தியாவை 65 ரன்களுக்கு சுருட்டி 2023 உ.கோ வெல்வோம் – பிரபல ஆஸி வீரர் அதிரடி பேட்டி

“குறிப்பாக லெக் ஸ்டம்ப் கோணத்தில் அவர் ஏற்கனவே செட்டப் செய்ததால் அங்கு தான் வீசுவார் என்பதை பேட்ஸ்மேன் அறிந்து அடித்து விட்டார். இருப்பினும் ரசலை அவுட்டாக்கிய அவர் தம்மால் முடிந்ததை செய்து விட்டதாக கேப்டனிடம் செயலால் காட்டினார். ஆனால் நியாயப்படி 18.50 கோடிக்கு வாங்கப்பட்ட நபர் 19வது ஓவரில் 20.50 கோடிக்கு நிகரான செயல்பாடுகளை வெளிப்படுத்திய போதே பஞ்சாப் தோல்வியை சந்தித்தது” என்று கூறினார்.

Advertisement