
நியூசிலாந்து அணிக்கு எதிராக நேற்று நாக்பூர் மைதானத்தில் நடைபெற்ற முதலாவது டி20 போட்டியில் பங்கேற்று விளையாடியிருந்த இந்திய அணியானது நியூசிலாந்து அணியை 48 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்த 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் தற்போதைய நிலையில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 238 ரன்கள் என்கிற பிரம்மாண்ட ரன் குவிப்பை வழங்கியது. இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக அபிஷேக் சர்மா 84 ரன்களையும், ரிங்கு சிங் 44 ரன்களையும் குவித்து அசத்தியிருந்தனர்.
பின்னர் 239 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய நியூசிலாந்து அணி இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட் இழந்து 190 ரன்களை மட்டுமே குவித்ததால் இந்திய அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பதிவு செய்திருந்தது.
இந்த போட்டியின் போது இந்திய அணி சார்பாக ஒரு பெரிய இடைவெளிக்கு பிறகு களமிறங்கிய ரிங்கு சிங் 20 பந்துகளில் 4 பவுண்டரி மற்றும் 3 சிக்சர் என ஆட்டம் இழக்காமல் 44 ரன்கள் குவித்து அசித்திருந்தார். கடைசி நேரத்தில் இவரது அதிரடி காரணமாக இந்திய அணி 330 ரன்கள் கடந்தது. அவரது அதிரடி மட்டும் இறுதி நேரத்தில் இல்லை என்றால் நிச்சயம் இந்திய அணி 200 ரன்கள் வரையே எட்டி இருக்கும்.
இந்நிலையில் போட்டியின் கடைசி நேரத்தில் தனது அதிரடியான ஆட்டத்திற்கான காரணம் குறித்து பேசியிருந்த ரிங்கு சிங் கூறுகையில் : உண்மையிலேயே இந்த போட்டியில் என் மீது அழுத்தம் இருந்தது. ஏனெனில் இந்திய அணியில் உள்ளேயும், வெளியேயும் நான் இருந்து வருவதால் என் மீது அழுத்தம் இருந்தது. ஆனால் அதனை சமாளிக்கும் வகையில் நான் ஒரு திட்டத்தை வைத்திருந்தேன்.
இதையும் படிங்க : 2 வருஷமா இந்தியா இப்படித்தான் ஆடுறாங்க.. அவங்களுக்கு எதிரா இப்படி ஆடுனது ஹேப்பி தான் – மிட்சல் சான்ட்னர்
அதாவது போட்டியின் கடைசி கட்டத்தில் சிங்கிள், டபுள் என பவுண்டரிகளுக்கு இடைவெளியில் அடித்து விட்டு ரன் ஓட நினைத்தேன். அதேபோன்று கடைசி இரண்டு ஓவர்களில் அதிரடியை வெளிப்படுத்தலாம் என்று காத்திருந்தேன். அந்த வகையிலேயே ஆரம்பத்தில் ஸ்ட்ரைக் ரொட்டேட் செய்தாலும் இறுதி கட்டத்தில் பவுண்டரிகளாக விளாச சென்றேன். இந்த திட்டம் மிகச் சரியாக இருந்தது என்றும் ரிங்கு சிங் கூறியது குறிப்பிடத்தக்கது.