2 வருஷமா இந்தியா இப்படித்தான் ஆடுறாங்க.. அவங்களுக்கு எதிரா இப்படி ஆடுனது ஹேப்பி தான் – மிட்சல் சான்ட்னர்

Mitchell Santner
- Advertisement -

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணியானது இந்திய அணிக்கு எதிராக நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் கைப்பற்றியது. அதனை தொடர்ந்து இந்திய அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் தற்போது நியூசிலாந்து அணியானது பங்கேற்று விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டி நேற்று நாக்பூர் மைதானத்தில் நடைபெற்றது.

இந்திய அணிக்கெதிரான தோல்வி குறித்து : மிட்சல் சான்ட்னர் பேட்டி

அப்படி நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 238 ரன்கள் குவித்தது. பின்னர் 239 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய நியூசிலாந்து அணி 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 190 ரன்களை மட்டுமே குவித்தது.

- Advertisement -

இதன் காரணமாக இந்திய அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதன்மூலம் இந்த 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் அடைந்த தோல்வி குறித்து பேசிய நியூசிலாந்து அணியின் கேப்டன் மிட்சல் சான்ட்னர் கூறுகையில் : இந்த போட்டியில் நாங்கள் மிகப்பெரிய இலக்கை எதிர்த்து விளையாடுகையில் அதை பாசிட்டிவாக எடுத்துக் கொண்டு வெற்றி பெற வேண்டும் என்று நினைத்து விளையாடினோம்.

ஆனால் இந்தியா போன்ற ஒரு பலமான அணிக்கு எதிராக விளையாடும் போது இலக்கை துரத்துவது என்பது எளிதல்ல. கடந்த இரண்டு ஆண்டுகளாகவே இந்திய அணி மிகச் சிறப்பான ஆட்டத்தை டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. அவர்கள் இந்த போட்டியிலும் மிகச் சிறப்பாக ஆடியிருந்தனர். அதேவேளையில் பலமான இந்திய அணிக்கு எதிராக நாங்களும் சிறப்பாக விளையாடியதாக உணர்கிறோம்.

- Advertisement -

இதையும் படிங்க : 8 சிக்ஸ்.. பொல்லார்ட் சாதனை சமன்.. ரசல் சாதனையை உடைத்த அபிஷேக் சர்மா.. புதிய உலக சாதனை

குறிப்பாக போட்டியின் ஆரம்பத்திலேயே இரண்டு விக்கெட்டுகளை இழந்திருந்தாலும் கிளென் பிலிப்ஸ் மற்றும் சேப்மன் ஆகியோர் விளையாடிய இன்னிங்ஸ் அற்புதமாக இருந்தது. இந்த போட்டியில் நாங்கள் தோல்வியை சந்தித்து இருந்தாலும் இதிலிருந்து கற்றுக் கொண்ட பாடங்களை வைத்து நிச்சயம் அடுத்த போட்டியில் பலமாக திரும்புவோம் என மிட்சல் சான்ட்னர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement