என்ன ஒரு அற்புதமான பிளேயர்.. 2024 டி20 உ.கோ மிடில் ஆர்டருக்கு அவர் தான் கரெக்ட்.. ஸ்ரீகாந்த் பாராட்டு

- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் 2024 டி20 உலகக் கோப்பை நடைபெற உள்ளது. அதற்கு தயாராவதற்காக நடைபெற்று முடிந்த ஆப்கானிஸ்தான் டி20 கிரிக்கெட் தொடரை 3 – 0 என்ற கணக்கில் இந்தியா வென்றது. குறிப்பாக பெங்களூருவில் நடந்த கடைசி போட்டியில் இரட்டை சூப்பர் ஓவரில் ஆப்கானிஸ்தானை போராடி இந்தியா தோற்கடித்தது ரசிகர்களுக்கு உச்சகட்ட திரில்லர் விருந்தாக அமைந்தது.

முன்னதாக அந்த தொடரில் ஜெய்ஸ்வால், சிவம் துபே, ரிங்கு சிங் போன்ற நிறைய வீரர்கள் சிறப்பாக விளையாடிய 2024 டி20 உலகக் கோப்பையில் விளையாட தயாராக இருக்கிறோம் என்பதை காண்பித்தனர். குறிப்பாக சவாலான மிடில் ஆர்டரில் சிவம் துபே மற்றும் ரிங்கு சிங் ஆகியோர் அதிரடியாக விளையாடி அசத்தினார்கள். அதிலும் குறிப்பாக மிகவும் அழுத்தமான லோயர் மிடில் ஆர்டரில் விளையாடும் ரிங்கு சிங் 3வது போட்டியில் 69* ரன்கள் குவித்தார்.

- Advertisement -

என்ன ஒரு பிளேயர்:
அத்துடன் 22/4 என தடுமாறிய போது கேப்டன் ரோஹித் சர்மாவுடன் ஜோடி சேர்ந்த அவர் 190 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து வெற்றிகரமாக ஃபினிஷிங் செய்த விதம் அனைவரது பாராட்டுகளைப் பெற்று வருகிறது. ஐபிஎல் தொடரில் குஜராத்துக்கு எதிராக கடைசி ஓவரில் 5 சிக்ஸர்கள் அடித்து கொல்கத்தாவுக்கு அசாத்தியமான வெற்றியை பெற்றுக் கொடுத்த காரணத்தால் இந்தியாவுக்காக விளையாடும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.

அதில் இதுவரை பெரும்பாலான போட்டிகளில் கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடி வெற்றிகரமாக ஃபினிஷிங் செய்யும் அவர் ரசிகர்களை ஏமாற்றாமல் இந்தியாவுக்கு தொடர்ச்சியாக வெற்றிகளை பெற்றுக் கொடுத்து வருகிறார் என்றே சொல்லலாம். இந்நிலையில் கடைசிக்கட்ட ஓவர்களில் எதிரணி பவுலர்களை பந்தாடும் ரிங்கு சிங் என்ன ஒரு அற்புதமான வீரர் என ஸ்ரீகாந்த் பாராட்டியுள்ளார்.

- Advertisement -

மேலும் 2024 டி20 உலகக் கோப்பையில் 6வது இடத்தில் விளையாட அவர் தான் சரியானவர் என்று தெரிவிக்கும் ஸ்ரீகாந்த் இது பற்றி பேசியது பின்வருமாறு. “ரிங்கு சிங் கண்டிப்பாக விளையாடும் 11 பேர் அணியில் இருக்க வேண்டும். கடைசிக்கட்ட ஓவர்களில் அவர் எதிரணி பவுலர்களை அடித்து நொறுக்குகிறார். அவரால் மட்டுமே இதை செய்ய முடியும்”

இதையும் படிங்க: ரிட்டையரான அப்றம் தான் அந்த வெற்றியின் மதிப்பு.. உனக்கு தெரியும்ன்னு ரோஹித் சொன்னாரு.. ரிஷப் பண்ட்

“சர்வதேச டி20 போட்டிகளில் அவர் கடைசி வரை அவுட்டாகாமல் விளையாடுவதை பாருங்கள். கண்டிப்பாக அவர் உலகக் கோப்பையில் விளையாடுவார். 6வது இடத்தில் ரிங்கு சிங் உறுதியாக இருப்பார். ரிங்கு சிங் என்ன ஒரு அற்புதமான வீரர். மிடில் ஆர்டரில் அவர் தமக்கு தாமே மகிழ்ச்சியுடன் விளையாடுகிறார். அசால்டாக சிக்சர்களை அடிக்கும் அவர் 3வது போட்டியில் சிறப்பான இன்னிங்ஸ் விளையாடினர்” என்று கூறினார்.

Advertisement