ரிட்டையரான அப்றம் தான் அந்த வெற்றியின் மதிப்பு.. உனக்கு தெரியும்ன்னு ரோஹித் சொன்னாரு.. ரிஷப் பண்ட்

Rishabh pant
- Advertisement -

இந்திய கிரிக்கெட் வீரர் ரிசப் பண்ட் தற்போது காயத்திலிருந்து குணமடைந்து வருகிறார். கடந்த 2017இல் அறிமுகமான அவர் வெள்ளைப் பந்து கிரிக்கெட் தடுமாறினாலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் தோனியையே மிஞ்சும் அளவுக்கு இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாபிரிக்க ஆகிய சவாலான வெளிநாடுகளில் சதமடித்த முதல் ஆசிய விக்கெட் கீப்பராக சாதனை படைத்து இந்தியாவுக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்துள்ளார்.

அதில் அவர் கொடுத்த 2021 காபா டெஸ்ட் வெற்றியை காலத்திற்கும் மறக்க முடியாது. ஏனெனில் அத்தொடரின் முதல் போட்டியில் 36க்கு ஆல் அவுட்டாகி மோசமான சாதனை படைத்த இந்தியாவுக்கு விராட் கோலி வெளியேறியதை தொடர்ந்து கேப்டனாக பொறுப்பேற்ற ரகானே 2வது போட்டியில் சதமடித்து இந்தியாவை வெற்றி பெற வைத்தார். ஆனால் அதில் சில முக்கிய வீரர்கள் காயத்தை சந்தித்த நிலையில் சிட்னியில் நடைபெற்ற 3வது போட்டியில் அஸ்வின் – விஹாரி ஆகியோர் காயத்தை தாண்டி கடுமையாக போராடி இந்தியாவை தோல்வியிலிருந்து காப்பாற்றி டிரா செய்ய வைத்தனர்.

- Advertisement -

மறக்க முடியாத வெற்றி:
அப்போது 32 வருடங்களாக தோற்காமல் இருந்து வரும் காபா மைதானத்தில் நடைபெறும் 4வது போட்டிக்கு வாருங்கள் என்று அஸ்வினிடம் ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெயின் சவால் விட்டார். அந்த நிலையில் நடைபெற்ற 4வது போட்டியில் முக்கிய வீரர்கள் அனைவருமே காயத்தால் வெளியேறிய நிலையில் சர்துல் தாகூர், வாஷிங்டன் சுந்தர், நடராஜன் போன்ற அறிமுக வீரர்களை வைத்து விளையாடிய இந்தியா அபாரமாக செயல்பட்டு காபா கோட்டையில் ஆஸ்திரேலியாவை தோற்கடித்து மூவர்ண கொடியை பறக்க விட்டு 2 – 1 (4) என்ற கணக்கில் மீண்டும் கோப்பையை வென்றது.

அதில் கடினமான 2வது இன்னிங்ஸில் 89* ரன்கள் விளாசிய பண்ட் அற்புதமான ஃபினிஷிங் கொடுத்து இந்தியாவை வெற்றி பெற வைத்தார். இந்நிலையில் அந்த வெற்றியை பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “அப்போட்டியின் முடிவில் ரோகித் சர்மா சொன்னது எனக்கு நினைவிருக்கிறது. நிறைய பேர் என்னிடம் ஸ்பெஷலான அம்சங்களை சொன்னார்கள். ஆனால் ரோகித் சொன்னது இன்னும் நினைவிருக்கிறது”

- Advertisement -

“அந்த வெற்றிக்குப் பின் அவர் என்னுடைய ரியாக்சனை பார்த்தார். குறிப்பாக அனைவரும் மகிழ்ச்சியாக இருந்த நிலையில் நான் சாதாரணமாக இருந்ததை அவர் பார்த்தார். அப்போது என்னிடம் அவர் “நீ என்ன செய்திருக்கிறாய் என்பதை இன்னும் உணரவில்லை. நாம் போட்டியை வென்று 2வது முறையாக தொடரை வென்றுள்ளோம். கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பின்பு தான் இந்த இன்னிங்ஸின் முக்கியத்துவம் உனக்கு தெரியும். இப்போது நீ என்ன செய்துள்ளாய் என்பது புரியவில்லை” என்று கூறினார்”

இதையும் படிங்க: தோனி கொடுத்த சிறிய அட்வைஸ்.. முற்றிலுமாக பிரகாசமாகிய ஷிவம் தூபேவின் கரியர் – விவரம் இதோ

“அவர் சொன்ன பின்பு தான் நான் என்ன செய்தேன் என்பதை உணர்ந்தேன். அதற்கு எப்படி ரியாக்சன் கொடுப்பது என்று எனக்கு தெரியவில்லை. அந்த சமயத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் என்னுடைய இடம் நிலையற்றதாக இருந்தது. அப்போது இது எப்படி நடக்கும் என்று நான் நினைத்தேன. ஏனெனில் அத்தொடரின் முதல் போட்டியில் நான் விளையாடவில்லை. இருப்பினும் அந்தப் போட்டியில் வென்றது கனவு நிஜமான தருணமாக அமைந்தது” என்று கூறினார்.

Advertisement