ஆஸி டி20 தொடரில் அவர் தான் ஸ்டேண்ட் அவுட் பிளேயரா அசத்துனாரு.. இளம் வீரருக்கு நெஹ்ரா பாராட்டு

Ashish Nehra 4.jpeg
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் தோல்வியை கொடுத்த ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற டி20 தொடரை 4 – 1 என்ற கணக்கில் வென்ற இந்திய அணி ஆறுதல் வெற்றியை பதிவு செய்தது. கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி போன்ற சீனியர்கள் ஓய்வெடுத்த அத்தொடரில் 2024 டி20 உலகக் கோப்பைக்கு தேவையான வீரர்களை கண்டறிவதற்காக சூரியகுமார் யாதவ் தலைமையில் இளம் வீரர்களுக்கு அதிக வாய்ப்பு கொடுக்கப்பட்டது.

அதை பயன்படுத்திய ஜெய்ஸ்வால், ருதுராஜ், ரவி பிஷ்னோய் போன்ற இளம் வீரர்கள் சிறப்பாக விளையாட இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்காற்றி தங்களை வருங்கால நம்பிக்கை நட்சத்திரங்களாக அடையாளப்படுத்தினர். அவர்களை விட ரிங்கு சிங் இத்தொடரில் 4 இன்னிங்ஸ் 105 ரன்களை 52.50 என்ற நல்ல சராசரியில் குவித்து வருங்கால ஃபினிஷராக தன்னை அடையாளப்படுத்தினார்.

- Advertisement -

ஸ்டேண்ட் அவுட் பிளேயர்:
ஏனெனில் முதல் போட்டியிலேயே கடைசி பந்தில் சிக்சர் அடித்து வெற்றி பெற வைத்த அவர் முக்கியமான 4வது டி20 போட்டியில் இந்தியா தடுமாறிய போது அதிரடியாக 46 (29) ரன்கள் எடுத்து வெற்றியில் பங்காற்றினார். குஜராத்துக்கு எதிராக 2023 ஐபிஎல் தொடரில் கடைசி ஓவரில் 5 அடுத்தடுத்து சிக்சர்கள் அடித்து அசாத்தியமான வெற்றியை பெற்றுக் கொடுத்ததால் இந்தியாவுக்காக அறிமுகமான அவர் இதுவரை தமக்கு கிடைத்த பெரும்பாலான வாய்ப்புகளில் தில்லாக நின்று வெற்றிகளை பெற்றுக் கொடுத்துள்ளார்.

இந்நிலையில் இந்த டி20 தொடரில் நிறைய இளம் வீரர்கள் சிறப்பாக செயல்பட்ட போதிலும் ரிங்கு சிங் அவர்களுக்கு மத்தியில் ஸ்டேண்ட் அவுட் வீரராக அசத்தியதாக ஆஷிஷ் நெஹ்ரா பாராட்டியுள்ளார். இது பற்றி ஜியோ சினிமா சேனலில் அவர் பேசியது பின்வருமாறு. “அனைத்து வீரர்களும் சிறப்பாக செயல்பட்டதால் குறிப்பிட்ட ஒருவரை தேர்வு செய்வது கடினமாக உள்ளது. ஆனால் ரிங்கு சிங் விளையாடிய சில இன்னிங்ஸ் அபாரமாக இருந்தது”

- Advertisement -

“குறிப்பாக 4வது போட்டியில் அவர் முக்கிய பங்காற்றினார். பொதுவாக 15 – 16வது ஓவரில் 50 – 60 ரன்கள் தேவைப்படும் போது ரிங்கு சிங் அசத்துவார் என்பதை நாம் அறிவோம். ஆனால் அந்த போட்டியில் ஒருபுறம் விக்கெட்டுகள் தொடர்ந்து விழுந்த போதிலும் எதிர்ப்புறம் நங்கூரமாக நின்ற அவர் தேவைப்படும் போது அதிரடியாகவும் விளையாடினார். அதன் காரணத்தாலே அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடுவதற்கு தேர்வாகியிருக்கலாம்” என்று கூறினார்.

இதையும் படிங்க: இது நம்ம இந்திய அணி கலாச்சாரத்துக்கு நல்லதுல்ல.. பிசிசிஐ வருங்கால முடிவின் மீது இர்பான் பதான் அதிருப்தி

அந்த வகையில் மிடில் ஆர்டரில் இடது கை பேட்ஸ்மேன் பிரச்சனையை தீர்த்து 2024 டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியின் ஃபினிஷராக ரிங் சிங் செயல்படுவார் என்று ரசிகர்களும் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர். இதை தொடர்ந்து நடைபெறும் தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்தில் ஒருநாள் மற்றும் டி20 தொடரில் ரிங்கு சிங் விளையாடுவதற்கு தேர்வாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement