இது நம்ம இந்திய அணி கலாச்சாரத்துக்கு நல்லதுல்ல.. பிசிசிஐ வருங்கால முடிவின் மீது இர்பான் பதான் அதிருப்தி

Irfan Pathan
- Advertisement -

பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் நிறைவு பெற்ற ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஃபைனலில் இந்தியா தோல்வியை சந்தித்தது. அதைத் தொடர்ந்து நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இளம் வீரர்களுடன் களமிறங்கிய இந்தியா சிறப்பாக விளையாடி ஆஸ்திரேலியாவை 4 – 1 என்ற கணக்கில் தோற்கடித்து ஆறுதல் வெற்றி பெற்றது.

இதைத் தொடர்ந்து தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்தியா அங்கு 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட அடுத்தடுத்த தொடர்களில் விளையாட உள்ளது. ஆனால் அதற்காக 3 வெவ்வேறு கேப்டன்கள் தலைமையில் 3 வெவ்வேறு விதமான அணிகளை சமீபத்தில் பிசிசிஐ அறிவித்தது. அதில் வெள்ளைப்பந்து தொடரில் ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் ஓய்வெடுப்பதால் டி20 தொடரில் சூரியகுமார் யாதவ் கேப்டனாகவும் ஒருநாள் தொடரில் கேஎல் ராகுல் கேப்டனாகவும் செயல்படுவார்கள் என்று பிசிசிஐ அறிவித்தது.

- Advertisement -

இர்பான் பதான் அதிருப்தி:
மேலும் கடைசியாக நடைபெறும் டெஸ்ட் தொடரில் மட்டுமே ரோகித் சர்மா தலைமையிலான முதன்மை அணி விளையாடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக தோனி மற்றும் விராட் கோலி கேப்டனாக விடைபெற்ற பின் ரோகித் சர்மா பொறுப்பேற்றது முதல் சமீப காலங்களாகவே ராகுல் முதல் பும்ரா வரை ஒவ்வொரு தொடரிலும் புதிய வீரர்கள் இந்திய அணியை வழி நடத்துவது வாடிக்கையாக்கி வருகிறது. சொல்லப்போனால் 2022 காலண்டர் வருடத்தில் 7 வெவ்வேறு வீரர்கள் இந்தியாவை கேப்டனாக வழி நடத்தியது ரசிகர்களையே கடுப்பாக வைத்தது.

இந்நிலையில் வெவ்வேறு வீரர்கள் வெவ்வேறு தொடர்களில் கேப்டனாக செயல்படுவது இந்திய அணியின் கலாச்சாரத்திற்கு நல்லதல்ல என்று பிசிசிஐயின் வருங்கால முடிவு மீது இர்ஃபான் பதான் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “இது வருங்காலத்திற்கான அறிகுறியாக தெரிகிறது. கண்டிப்பாக நான் இந்த முடிவின் ரசிகன் அல்ல”

- Advertisement -

“இந்திய அணியை வெவ்வேறு கிரிக்கெட்டில் வெவ்வேறு கேப்டன்கள் வழி நடத்துவது பற்றி நீண்ட காலமாக பேச்சுக்கள் இருந்து வருகிறது. பணிச்சுமையை நிர்வகிப்பதற்காக நீங்கள் இப்படி வித்தியாசமான கேப்டன்கள் தலைமையில் வெவ்வேறு அணியை அறிவித்துள்ளீர்கள் என்பது உண்மை. குறிப்பாக வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் ரோஹித் சர்மா ஓய்வெடுப்பதால் அவர் அத்தொடர்களில் இல்லை”

இதையும் படிங்க: அதுக்குள்ள ஆடி களைச்சுட்டாரா? இளம் வீரரை கழற்றி விட்ட அணி நிர்வாகத்தை விளாசிய அஜய் ஜடேஜா

“மாறாக டெஸ்ட் தொடரில் மட்டுமே அவர் கேப்டனாக செயல்பட உள்ளார். இது போன்ற வித்தியாசமான அணிகளை வருங்காலங்களில் நாம் அதிகமாக பார்ப்போம். சொல்லப்போனால் வருங்காலங்களில் வெவ்வேறு இந்திய அணிக்கு வெவ்வேறு பயிற்சியாளர்கள் இருப்பதை கூட நம்மால் பார்க்க முடியும். ஆனால் இது நம்முடைய கலாச்சாரத்திற்கு சிறப்பானதல்ல என்று நான் நம்புகிறேன்” என கூறினார்.

Advertisement