அதுக்குள்ள ஆடி களைச்சுட்டாரா? இளம் வீரரை கழற்றி விட்ட அணி நிர்வாகத்தை விளாசிய அஜய் ஜடேஜா

Ajay Jadeja 3
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2023 உலகக் கோப்பை ஃபைனலில் சந்தித்த தோல்விக்கு அடுத்ததாக நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் 4 – 1 என்ற கணக்கில் வென்ற இந்தியா ஆறுதல் வெற்றியை பதிவு செய்தது. கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி போன்ற மூத்த வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்ட இத்தொடரில் சூரியகுமார் யாதவ் தலைமையில் இந்திய அணி சிறப்பாக விளையாடி வெற்றியும் கொண்டது.

முன்னதாக இத்தொடருக்காக அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இசான் கிசானுக்கு முதல் 3 போட்டியுடன் ஓய்வு கொடுக்கப்பட்டது. 2023 உலகக் கோப்பையில் முதல் 2 போட்டியில் மட்டுமே விளையாடிய அவர் சுப்மன் கில் வந்த பின் மேற்கொண்டு வாய்ப்பு பெறாமல் தொடர்ந்து பெஞ்சில் அமர்ந்து வந்தார்.

- Advertisement -

அதுக்குள்ள ஓய்வா:
இந்நிலையில் இத்தொடரின் முதல் 3 போட்டிகளுடன் வெளியேறும் அளவுக்கு இஷான் கிசான் 2023 உலகக் கோப்பையில் முழுமையாக விளையாடி பணிச்சுமையால் பாதிக்கப்பட்டாரா என்று இந்திய தேர்வுக் குழுவினர் மற்றும் அணி நிர்வாகத்தை முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா விமர்சித்துள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “உலகக் கோப்பை முடிந்ததும் இந்த தொடர் நடைபெறுகிறது”

“அதில் 3 போட்டிகள் முடிந்ததும் இசான் கிசான் வீட்டுக்கு சென்று விட்டார். உண்மையாகவே 3 போட்டிகளில் விளையாடி களைப்படைந்ததால் அவருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டதா? உலகக் கோப்பையில் கூட அவர் பெரும்பாலான போட்டிகளில் விளையாடவில்லை. உலகக் கோப்பையில் முதல் போட்டிகளில் விளையாடும் 11 பேர் இந்திய அணியில் அவர் இடம் பிடிக்க தகுதியானவராக இருந்தார். இருந்தும் அவருக்கு மேற்கொண்டு வாய்ப்பு கிடைக்கவில்லை”

- Advertisement -

“இங்கே எத்தனை இந்திய வீரர்கள் தங்களுடைய சிறந்த நாளில் ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதமடித்துள்ளார்கள்? அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 5 போட்டிகளில் முழுமையாக விளையாடவில்லை. இப்படி முழுமையாக வாய்ப்பு கொடுக்காமல் பாதியிலேயே கழற்றி விட்டால் எப்படி அவரால் விளையாடுவதற்கு தயாராக இருக்க முடியும்” என்று கூறினார்.

இதையும் படிங்க: அதுக்குள்ள ஆடி களைச்சுட்டாரா? இளம் வீரரை கழற்றி விட்ட அணி நிர்வாகத்தை விளாசிய அஜய் ஜடேஜா

அவர் கூறுவது போல சமீப காலங்களாகவே இஷான் கிசான் மட்டுமல்லாமல் நிறைய வீரர்களுக்கு சிறப்பாகவே விளையாடினாலும் தொடர்ச்சியான வாய்ப்புகள் கிடைப்பதில்லை. அதற்கு பணிச்சுமை, சுழற்சி முறையில் வாய்ப்பு வழங்குகிறோம் என்பதை இந்திய அணி நிர்வாகம் காரணமாக சொல்லி வருகிறது. இந்த நிலைமையில் அடுத்து நடைபெறும் தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்திலும் 3 வகையான தொடருக்கு 3 வெவ்வேறு இந்திய அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement