இந்திய ஜாம்பவானின் புக் படிச்சாங்க.. பாகிஸ்தான் மாதிரி ஆப்கானிஸ்தான் வந்துட்டாங்க.. அஜய் ஜடேஜா பாராட்டு

Ajay Jadeja 2
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் ஃபைனல் வரை சென்ற இந்தியாவுக்கு அடுத்தபடியாக ஆப்கானிஸ்தான் சிறந்த ஆசிய அணியாக செயல்பட்டு அனைவரது பாராட்டுகளை பெற்றது. குறிப்பாக ஆரம்பத்திலேயே நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை வரலாற்றில் முதல் முறையாக தோற்கடித்த அந்த அணி சென்னையில் பாகிஸ்தானை வரலாற்றில் முதல் முறையாக தோற்கடித்து புதிய வரலாறு படைத்தது.

அது போக 1996 சாம்பியன் இலங்கையையும் தோற்கடித்த அந்த அணி இந்தியா உள்ளிட்ட அனைத்து ரசிகர்களின் பாராட்டுகளை பெற்றது. அதன் காரணமாக புள்ளி பட்டியலில் டாப் 7 இடங்களுக்குள் உலகக் கோப்பையை முடித்த ஆப்கானிஸ்தான் வரலாற்றிலேயே முதல் முறையாக 2025 சாம்பியன்ஸ் டிராபிக்கு தகுதி பெற்று சர்வதேச கிரிக்கெட்டில் புதிய எழுச்சியை கண்டுள்ளது

- Advertisement -

அஜய் ஜடேஜா பாராட்டு:
முன்னதாக இத்தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சதமடித்த இப்ராஹிம் ஜாட்ரான் உலகக் கோப்பை வரலாற்றில் சதமடித்த முதல் ஆப்கானிஸ்தான் வீரர் என்ற மாபெரும் சாதனை படைத்தார். மும்பையில் நடைபெற்ற அப்போட்டிக்கு முன்பாக தங்களை சந்தித்த ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் கொடுத்த ஆலோசனைகள் சதம் அடிப்பதற்கு உதவியதாக இப்ராஹிம் ஜாட்ரான் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் புத்தகத்தை படித்த இப்ராஹிம் ஜாட்ரானை நேரடியாக சென்று பார்க்க வைத்ததாக தெரிவிக்கும் அதே ஜடேஜா ஒரு கட்டத்தில் மிரட்டலாக செயல்பட்ட பாகிஸ்தான் அணி போல ஆப்கானிஸ்தான் உருவெடுத்துள்ளதாக பாராட்டியுள்ளார். ஆப்கானிஸ்தான் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக உலகக் கோப்பையில் செயல்பட்டு வெற்றிகளில் முக்கிய பங்காற்றிய அவர் தலைமை பயிற்சியாளராக செயல்பட்ட இங்கிலாந்தின் ஜோனதன் டிராட் பங்கையும் பாராட்டி பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“மற்ற ஆப்கானிஸ்தான் வீரர்களை விட இப்ராஹிம் ஜாட்ரான் வித்தியாசமான வீரர். அவர் புத்தகங்களை அதிகமாக படிக்க விரும்புவார். ஒருமுறை அவர் சச்சின் டெண்டுல்கர் புத்தகத்தை படிப்பதை பார்த்தேன். அப்போது மும்பை சென்றடைந்ததும் உங்களை சச்சின் டெண்டுல்கரை பார்க்க வைக்கிறேன் என்று அவரிடம் சொன்னேன். தற்போதைய ஆப்கானிஸ்தான் அணி ஒரு கட்டத்தில் அசத்திய பாகிஸ்தான் அணி போல உருவெடுத்துள்ளது”

“அதே போல ஜோனதன் டிராட் அவர்களிடமிருந்து நிறைய கற்றுக் கொள்ளலாம். அவர் அடிப்படை, அர்ப்பணிப்பு, டைமிங் மற்றும் கட்டுக்கோப்பு போன்றவற்றை கற்றுக் கொள்வதில் மாஸ்டர். அவர் பணிச்சுமை காரணமாக மனதளவில் சந்தித்த தாக்கத்தால் முன்கூட்டியே கிரிக்கெட்டிலிருந்து விடை பெற்றார். ஆனால் தற்போது அவர் அதே கிரிக்கெட்டில் சிறந்த பயிற்சியாளராக கம்பேக் கொடுத்துள்ளார். அவரும் ஆப்கானிஸ்தான் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்” என்று கூறினார் இதை தொடர்ந்து வரும் ஜனவரி மாதம் இந்தியாவுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆப்கானிஸ்தான் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement