IPL 2023 : தோனி, யுவி ஆடிய இடத்தில் இந்தியாவுக்கு விளையாட அவர் ரெடியா இருக்காரு – இளம் வீரரை ஓப்பனாக பாராட்டிய சேவாக்

sehwag 1
- Advertisement -

இந்தியாவுக்காக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடும் வருங்கால நம்பிக்கை நட்சத்திரங்களை அடையாளப்படுத்தும் தொடராக பார்க்கப்படும் ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் நிறைய இளம் வீரர்கள் தங்களது அணிக்காக முழு திறமையை வெளிப்படுத்தி பாராட்டுகளைப் பெற்றனர். அதில் குறிப்பாக ராஜஸ்தான் அணிக்காக விளையாடிய இளம் தொடக்க வீரர் யசஸ்வி ஜெய்ஸ்வால் அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தி சில சாதனைகளை படைத்ததால் இந்தியாவுக்கு விளையாட வேண்டுமென நிறைய கோரிக்கைகள் குவிந்துள்ளன. அவரைப் போலவே லீக் சுற்றுடன் வெளியேறிய கொல்கத்தா அணியில் எதிரணிகளுக்கு அச்சுறுத்தலை கொடுக்கும் வகையில் செயல்பட்ட ரிங்கு சிங் லேட்டஸ்ட் ஃபினிஷராக உருவெடுத்து பாராட்டுகளை அள்ளி வருகிறார்.

Rinku SIngh

- Advertisement -

உத்திரபிரதேசத்தில் சிலிண்டர் விநியோகம் செய்யும் நபரின் மகனாக ஏழை குடும்பத்தில் பிறந்து உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடி 2018 முதல் கொல்கத்தா அணியில் பெஞ்சில் அமர்ந்து வந்த அவர் கடந்த வருடம் லக்னோவுக்கு எதிரான ஒரு போட்டியில் முதல் முறையாக அசத்தி வெற்றியின் விளிம்பு வரை அழைத்து வந்தார். அதன் காரணமாக இந்த சீசனில் முதல் முறையாக முழுமையாக வாய்ப்பு பெற்ற 14 போட்டிகளில் நடப்புச் சாம்பியன் குஜராத்துக்கு எதிராக மொத்தமாக கைநழுவிச் சென்ற அசாத்தியமான வெற்றியை கடைசி ஓவரில் 5 சிக்சர்கள் அடித்து அவர் பெற்றுக் கொடுத்ததை பார்த்து இந்த ஒட்டு மொத்த உலகமும் வியந்தது.

தோனி, யுவி இடத்தில்:
அதே போல பஞ்சாப்புக்கு எதிரான போட்டியிலும் கடைசிப்பந்தில் 2 ரன்கள் தேவைப்பட்ட போது பவுண்டரியுடன் பினிஷிங் கொடுத்த அவர் லக்னோவுக்கு எதிராக பிளே ஆப் சுற்றி வாய்ப்பு பறிபோன பின்பும் இதர வீரர்கள் தடுமாறிய போது தனி ஒருவனாக 6 பவுண்டரி 4 சிக்ஸருடன் 66* ரன்களை விளாசி வெறித்தனமாக போராடியும் 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி நழுவி போனது. ஆனாலும் கடைசி நேர அழுத்தமான சூழ்நிலைகளில் கொஞ்சமும் பதறாமல் எதிரணிகளை தெறிக்க விடும் அவருடைய பொறுமையும் தைரியமான பேட்டிங்கும் அனைவரது பாராட்டுகளை பெற்று வருகிறது.

Yuvraj 1

பொதுவாக பவர் பிளே ஓவர்களில் விளையாடும் ஜெய்ஸ்வால் போன்ற டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை விட அழுத்தமான மிடில் ஆர்டரில் வெற்றிகரமாக செயல்படுவது மிகவும் கடினமாகும். ஆனால் இந்த வருடம் 14 போட்டிகளில் 474 ரன்கள் குவித்த அவர் ஐபிஎல் வரலாற்றில் 5வது இடத்தில் களமிறங்கி அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற தினேஷ் கார்த்திக் சாதனையை தகர்த்து புதிய வரலாறு படைத்துள்ளார். அதனால் ரவி சாஸ்திரி உட்பட நிறைய முன்னாள் வீரர்கள் ரிங்கு சிங் இந்தியாவுக்காக விளையாட வேண்டும் என்ற கோரிக்கையை வலுவாக வைத்து வருகின்றனர்.

- Advertisement -

இந்நிலையில் அழுத்தமான மிடில் ஆர்டரில் மிகச் சிறப்பாக செயல்பட்டு நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்த தோனி, யுவராஜ் சிங் விளையாடிய 5, 6வது இடத்தில் விளையாடுவதற்கு தேவையான திறமையும் தகுதியும் ரிங்கு சிங் கொண்டிருப்பதாக சேவாக் பாராட்டியுள்ளார். சமீப காலங்களாகவே நல்ல மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் இல்லாமல் தடுமாறும் இந்திய அணியில் விளையாட அவர் தகுதியாக இருப்பதாக தெரிவிக்கும் சேவாக் இது பற்றி கிரிக்பஸ் இணையத்தில் பேசியது பின்வருமாறு.

Sehwag

“நீங்கள் தொடர்ச்சியாக ரன்களை அடிக்கும் போது உங்களுக்கான பெயரை உருவாக்கிறீர்கள். அந்த வகையில் 2023 ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களில் ஒருவரை டாப் இடத்தில் வைக்குமாறு நீங்கள் என்னிடம் கேட்டால் அங்கே நான் ரிங்கு சிங்கை தேர்ந்தெடுப்பேன். ஏனெனில் அவர் விளையாடும் இடம் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக பெரிய ரன்களை குவிப்பதற்கு மிகவும் சவாலான இடமாகும். சொல்லப்போனால் இந்திய வரலாற்றில் யுவராஜ் சிங், எம்எஸ் தோனி ஆகிய இருவர் மட்டுமே அந்த இடத்தில் வெற்றிகரமாக செயல்பட்டுள்ளனர்”

இதையும் படிங்க:IPL 2023 : மும்பை அணி கொடுத்த காசுக்கு வொர்த்தான பிளேயர் அவர்தான் – இர்பான் பதான் பாராட்டு

“அவர்களைத் தவிர்த்து வேறு யாரும் தொடர்ந்து பெரிய ரன்களை அடித்து இந்தியாவுக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்ததில்லை. எனவே ரிங்கு சிங் அந்த இடத்தில் விளையாடுவதற்கு தகுதியானவராக இருக்கிறார்” என்று கூறினார். அப்படி மிகப்பெரிய பாராட்டைப் பெற்றுள்ள ரிங்கு சிங் அடுத்ததாக நடைபெறும் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இந்தியாவுக்காக தேர்வாக வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement