IPL 2023 : மும்பை அணி கொடுத்த காசுக்கு வொர்த்தான பிளேயர் அவர்தான் – இர்பான் பதான் பாராட்டு

pathan 1
- Advertisement -

இந்தியாவில் கடந்த மார்ச் 31-ஆம் தேதி துவங்கிய 16-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது தற்போது லீக் சுற்று போட்டிகளை நிறைவு செய்து பிளே ஆப் சுற்றினை நோக்கி நகர்ந்துள்ளது. அந்த வகையில் இந்த சீசனுக்கான பிளே ஆப் சுற்றில் புள்ளி பட்டியலின் அடிப்படையில் குஜராத், சென்னை, லக்னோ மற்றும் மும்பை ஆகிய நான்கு அணிகள் அடுத்த கட்டத்திற்கு தேர்வாகியுள்ளன. இந்த தொடரின் ஆரம்பத்தில் பும்ரா மற்றும் ஆர்ச்சர் ஆகியோர் இன்றி பந்து வீச்சில் தடுமாறி தொடர் தோல்விகளை பெற்று வந்தது.

Mumbai Indians Rohit Sharma MI

- Advertisement -

அதன்பிறகு அவர்களது பேட்ஸ்மேன்களின் அட்டகாசமான ஆட்டம் காரணமாக தொடர்ச்சியாக வெற்றியை பெற்ற மும்பை அணி இறுதியாக நடைபெற்ற சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியிலும் 200 ரன்களை அபாரமாக சேசிங் செய்து புள்ளி பட்டியல் நான்காவது இடத்தை பிடித்து பிளே ஆப் வாய்ப்பை உறுதி செய்தது. இந்த சீசனில் மட்டும் நான்கு முறை மும்பை அணி 200-க்கும் மேற்பட்ட ரன்களை வெற்றிகரமாக கேசிங் செய்து அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.

தற்போது மும்பை அணியில் ரோகித் சர்மா, இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், கேமரூன் க்ரீன், திலக் வர்மா, டிம் டேவிட் என அனைத்து பேட்ஸ்மேன்களது ஆட்டமும் அற்புதமாக இருப்பதால் கோப்பையை கைப்பற்றும் வாய்ப்பும் அவர்களுக்கு காணப்படுகிறது. இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான இர்பான் பதான் சூரியகுமார் யாதவ் மும்பை அணியில் 4-வது இடத்தில் தான் விளையாட வேண்டும் என்றும் மூன்றாவது இடத்தில் விளையாட அற்புதமான வீரர் கிடைத்துவிட்டார் என்றும் ஆஸ்திரேலியா வீரர் கேமரூன் கிரீனை பாராட்டி உள்ளார்.

Cameron-Green

இது குறித்து அவர் கூறுகையில் : மும்பை அணி கேமரன் கிரீனை ஏலத்தில் அதிக தொகை கொடுத்து வாங்கியது தவறில்லை என்பதை அவர் நிரூபித்து விட்டார். நிச்சயம் அவர் ஒரு மேட்ச் வின்னர் என்றும் அவருக்கு கொடுத்த தொகைக்கு அவர் ஒரு வொர்த்தான பிளேயர் என்பதையும் அவர் சமீபத்திய போட்டிகளில் வெளிக்காட்டி வருகிறார். மூன்றாவது இடத்தில் களமிறங்கி மிகப்பெரிய ஷாட்டுகளை விளையாடுகிறார்.

- Advertisement -

கடைசியாக அவர் அடித்த சதமே அவரது பேட்டிங்கிற்கு சிறந்த சான்று. இனிவரும் போட்டிகள் சென்னை மற்றும் அகமதாபாத்தில் நடைபெற இருப்பதினால் அதுபோன்ற ஸ்லோ பிட்ச்களில் கேமரூன் கிரீனின் ஆட்டம் அற்புதமாக இருக்கும். எனவே சூரியகுமார் யாதவ் நான்காவது இடத்திலும், கேமரூன் கிரீன் மூன்றாவது இடத்தில் களமிறங்கினால் சரியாக இருக்கும் என்றும் இர்பான் பதான் கூறினார்.

இதையும் படிங்க : IPL 2023 : விராட் கோலியை விட சுப்மன் கில் அடிச்ச செஞ்சுரி தான் பெஸ்ட் – காரணத்தை விளக்கும் முன்னாள் ஆஸி வீரர்

மேலும் 17 கோடி கொடுத்து கேமரூன் கிரீனை மும்பை அணி வாங்கியது மிக வொர்த்தான ஒரு விடயம் என்றும் அந்த அளவிற்கு கேமரூன் கிரீன் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார் என்றும் இளம் வீரராக இருக்கும் அவரால் மும்பை அணிக்கு பல ஆண்டுகாலம் சிறப்பான ஆட்டத்தை வழங்க முடியும் என்றும் இர்பான் பதான் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

Advertisement