கொல்கத்தாவின் போராட்ட வெற்றியை நிறுத்திய சீசனின் பெஸ்ட் கேட்ச் ! ரசிகர்களின் மனதை வென்ற இளம் வீரர்

Evin Lewis Rinku SIngh Catch
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடர் உச்சகட்ட பரபரப்பான இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில் மே 18-ஆம் தேதி நடைபெற்ற 66-ஆவது லீக் போட்டி ரசிகர்களின் இதயங்களை படபடக்க வைத்தது. நவி மும்பையில் நடைபெற்ற அப்போட்டியில் டாஸ் வென்ற லக்னோ முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய அந்த அணியின் கேப்டன் கேஎல் ராகுல் மற்றும் குவின்டன் டி காக் ஆகியோர் முதல் ஓவரிலிருந்தே கொல்கத்தா பவுலர்களை சொல்லி சொல்லி அடித்தனர். பவர்பிளே ஓவர் முடிந்தும் 10 ஓவர்கள் கடந்தும் இருவரும் அரைசதம் தாண்டியும் திருப்தியடையாமல் கொல்கத்தா பவுலர்களை விரட்டி விரட்டி பவுண்டரிகளும் சிக்ஸர்களுமாக பறக்கவிட்ட அவர்கள் ஒவ்வொரு ஓவர்களுக்கும் 10 ரன்களுக்கு மேல் விளாசினார்.

Quinton De Kock KL Rahul 2

- Advertisement -

ஒருகட்டத்தில் கேஎல் ராகுல் 3 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 68* (51) ரன்களுடன் இறுதிவரை பொறுமையாக பேட்டிங் செய்ய மறுபுறம் கொல்கத்தாவை கதறவிட்ட குயின்டன் டி காக் சதமடித்தும் அவுட்டாகாமல் 70 பந்துகளில் 10 பவுண்டரி 5 சிக்சருடன் 140* ரன்கள் விளாசி பட்டையைக் கிளப்பினார். மொத்தத்தில் கடைசி வரை அவுட்டாகாத இந்த ஜோடி 20 ஓவர்களில் 210/0 ரன்கள் குவித்து வரலாற்றிலேயே முதல் முறையாக 20 ஓவர்கள் முழுமையாக பேட்டிங் செய்த ஓபனிங் ஜோடியாக சாதனை படைத்தது. அத்துடன் ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்ச ஓபனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த ஜானி பேர்ஸ்டோ – டேவிட் வார்னரின் (ஹைதெராபாத் அணிக்காக, 2019இல் பெங்களூருவுக்கு எதிராக) ஆல் டைம் சாதனையையும் உடைத்து புதிய வரலாற்றை படைத்தனர்.

போராடிய கொல்கத்தா:
பந்துவீச்சில் மொத்தமாக சொதப்பிய கொல்கத்தா எளிதாக தோற்று விடும் என அனைவரும் நினைத்தனர். அதற்கேற்றார் போல் அந்த அணியின் தொடக்க வீரர்கள் வெங்கடேஷ் ஐயர் 0 (4) அபிஜித் தோமர் 4 (8) என அடுத்தடுத்து அவுட்டாகி தோல்வியை உறுதி செய்தனர். ஆனாலும் அடுத்து களமிறங்கிய நிதி ராணா தனது பங்கிற்கு அதிரடியாக 42 (22) ரன்களும் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் 50 (29) ரன்களும் எடுத்து முடிந்த அளவுக்கு போராடி அவுட்டானார்கள்.

Andre Russell Mosin Khanjpeg

அந்த சமயத்தில் வந்த சாம் பில்லிங்ஸ் தனது பங்கிற்கு 36 (24) ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நம்பிக்கை நட்சத்திரம் ஆண்ட்ரே ரசல் 5 (11) ரன்களில் அவுட்டானதால் கொல்கதாவின் மேலும் தோல்வி உறுதியானது. இருப்பினும் சாகும்வரை போராட்டம் என்பது போல் கடைசி நேரத்தில் களமிறங்கிய சுனில் நரேன் – ரின்கு சிங் ஆகியோர் தோற்றாலும் பரவாயில்லை என்று சிக்சர்களை பறக்கவிட்டதால் போட்டியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

- Advertisement -

போரடிய ரிங்கு – பெஸ்ட் கேட்ச்:
இதில் வெறும் 7 பந்துகளில் சுனில் நரைன் 3 சிக்சர்களை பறக்கவிட்டு 21* ரன்கள் எடுத்ததால் கடைசி ஓவரில் வெற்றிக்கு 21 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது அதை ஆஸ்திரேலியாவின் மார்க்கஸ் ஸ்டாய்நிஸ் வீச அதை எதிர்கொண்ட இளம் இந்திய வீரர் ரிங்கு சிங் 4, 6, 6 என அடுத்தடுத்து 3 பவுண்டரிகளை தெறிக்கவிட்டதால் ரசிகர்களின் இதயத்துடிப்பு எகிறியது. அதனால் திடீரென்று கொல்கத்தாவுக்கு வெற்றி வாய்ப்பும் ஏற்பட்ட போது 4-வது பந்தில் 2 ரன்கள் எடுத்த அவர் 5-வது பந்தில் மீண்டும் மின்னல்வேக பவுண்டரியை பறக்க விட்டார்.

ஆனால் ஆஃப் சைட் ஸ்கொயர் திசையில் சூப்பர்மேனை போல ஓடி வந்த வெஸ்ட் இண்டீஸ் வீரர் எவின் லீவிஸ் அந்த பந்தை பாய்ந்து ஒற்றைக் கையில் பிடித்து சரிந்து கொண்டே சென்று வெற்றிகரமாக கேட்ச் பிடித்தார். அதனால் 2 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 40 (15) ரன்களுடன் உயிரைக் கொடுத்துப் போராடிய ரிங்கு சிங்கின் போராட்டம் வீணாக போனது. ஏனெனில் அடுத்த பந்தில் களமிறங்கிய உமேஷ் யாதவ்வை க்ளீன் போல்ட் செய்த ஸ்டோனிஸ் தனது அணிக்கு 2 ரன்கள் திரில் வெற்றியை பெற்றுக் கொடுத்தார்.

- Advertisement -

ரசிகர்கள் பாராட்டு:
அதனால் த்ரில்லான வெற்றியை சுவைத்த லக்னோ பங்கேற்ற 14 போட்டிகளில் 9-வது வெற்றியை பதிவு செய்து ப்ளே ஆப் சுற்றுக்கு 2-வது அணியாக தகுதி பெற்றது. மறுபுறம் பந்துவீச்சில் கோட்டை விட்டாலும் பேட்டிங்கில் உயிரைக் கொடுத்துப் போராடிய கொல்கத்தா 14 போட்டிகளில் 8-வது தோல்வியை பதிவு செய்ததால் ஐபிஎல் 2022 தொடரின் லீக் சுற்றோடு 3-வது அணியாக வெளியேறியது. இந்த வருடம் மட்டுமல்லாது ஒட்டுமொத்த வரலாற்றில் இது ஒரு மிகச்சிறந்த ஐபிஎல் போட்டி என்று இதை பார்த்த ரசிகர்கள் உறைந்துபோய் சமூக வலைதளங்களில் இப்போட்டியை கொண்டாடி வருகிறார்கள்.

அதிலும் 20 லட்சத்துக்கு வாங்கப்பட்டு மிக இளம் வயதிலேயே தோல்வி உறுதி எனத் தெரிந்தாலும் அதற்காக அஞ்சாமல் சீறிப்பாய்ந்த காளையாக போராடிய ரிங்கு சிங் போட்டியின் முடிவில் தோல்வி கிடைத்ததால் மனமுடைந்து போனார். இருப்பினும் வீரனுக்கு தோல்வியும் அழகே என்று கூறும் ரசிகர்கள் அவரை கவலைப்பட வேண்டாம் என்று சமூக வலைதளங்களில் பாராட்டி வருகின்றனர்.

இதையும் படிங்க : ரோஹித் சொன்னது ரொம்ப கரெக்ட். அந்த பையன் இந்திய அணிக்காக 3 பார்மெட்டிலும் விளையாடனும் – சுனில் கவாஸ்கர்

மேலும் “கேட்சஸ் வின் மேட்சஸ்” என்ற ஆங்கில பழமொழிக்கேற்ப 210 ரன்கள் அடித்தும் தோல்வியை சந்திக்க இருந்த லக்னோவை சூப்பர் மேனை போல முக்கிய நேரத்தில் அற்புதமான கேட்ஷ் பிடித்து காப்பாற்றிய எவின் லெவிசையும் பாராட்டும் ரசிகர்கள் இந்த சீசனில் இதுதான் மிகச் சிறந்த கேட்ச் என்று கைதட்டி பாராட்டுகின்றனர்.

Advertisement