ரோஹித் சொன்னது ரொம்ப கரெக்ட். அந்த பையன் இந்திய அணிக்காக 3 பார்மெட்டிலும் விளையாடனும் – சுனில் கவாஸ்கர்

Gavaskar
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் 15-வது ஐபிஎல் தொடரில் பல இளம் வீரர்கள் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது மட்டுமின்றி இந்திய அணியின் தேர்வாளர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளனர். அந்த வகையில் பல இளம் வீரர்கள் தங்களது அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியில் இடம் பிடிக்கும் வாய்ப்பை எதிர்நோக்கி உள்ளனர். இந்த ஆண்டு மொத்தம் 10 அணிகள் பங்கேற்று விளையாடி வருவதால் கூடுதலாக பல இளம் வீரர்களுக்கு சர்வதேச வீரர்களுடன் விளையாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

MI Mumbai Indians

- Advertisement -

அந்த வகையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனான ரோகித் சர்மா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் அந்த அணியை சேர்ந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் 19 வயதே ஆன இளம் வீரர் திலக் வர்மாவை மிகவும் புகழ்ந்து பேசி இருந்தார். அவரிடம் உள்ள திறமைக்கு நிச்சயம் அவர் இந்திய அணியில் மூன்று விதமான கிரிக்கெட்டிலும் பங்கேற்பார் என்று தனது கருத்தினை அளித்திருந்தார்.

இந்த சீசனில் மும்பை அணிக்காக 12 போட்டிகளில் விளையாடியுள்ள திலக் வர்மா 368 ரன்களை குவித்துள்ளார். மிடில் ஆர்டரில் தனது முதிர்ச்சியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இவரது செயல்பாடு பல்வேறு தரப்பிலிருந்து பாராட்டுக்களை பெற்றுவரும் வேளையில் தற்போது இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் அவரது ஆட்டத்தை வெகுவாகப் பாராட்டிப் பேசியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

Tilak Varma

திலக் வர்மா விளையாடும் விதம் உண்மையிலேயே அற்புதமாக இருக்கிறது. அதிலும் குறிப்பாக சென்னை அணிக்கு எதிராக அவர் தனது மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். அவரிடம் நிறைய ஷாட்டுகள் இருக்கிறது. அதுமட்டுமின்றி தொடர்ந்து ஸ்ட்ரைக் ரொட்டேட் செய்கிறார். டாட் பால்கள் குறைந்த அளவே விளையாடுகிறார். கிரிக்கெட்டுக்கு இது ரொம்பவும் முக்கியமான ஒன்று.

- Advertisement -

மேலும் அவருக்கு நல்ல கிரிக்கெட் அறிவும் உள்ளது. நிச்சயம் அவர் நீண்ட தூரம் பயணிக்க கூடிய ஒரு அருமையான வீரர். அவரால் சூழ்நிலையை புரிந்து கொண்டு ரன்களையும் சேர்க்க முடிகிறது என்று கவாஸ்கர் கூறியுள்ளார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் : ரோகித்சர்மா சொன்னது முற்றிலும் உண்மை தான். திலக் வர்மா இந்திய அணிக்காக மூன்று விதமான கிரிக்கெட்டிலும் விளையாட தகுதியான ஒரு வீரர் தான்.

இதையும் படிங்க : போட்டியை சூப்பரா முடிச்சி கொடுப்பார்ன்னு நெனச்சேன். ஆனா ஜஸ்ட் மிஸ் ஆயிடுச்சி – ஷ்ரேயாஸ் ஐயர்

இன்னும் அவர் தனது பிட்னசில் கொஞ்சம் கவனம் செலுத்தி நல்ல பயிற்சியை மேற்கொண்டால் இந்திய அணிக்காக மூன்று விதமான கிரிக்கெட்டிலும் தவிர்க்க முடியாத வீரராக விளையாடுவார் என்று கவாஸ்கர் திலக் வர்மாவை புகழ்ந்து பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது

Advertisement