போட்டியை சூப்பரா முடிச்சி கொடுப்பார்ன்னு நெனச்சேன். ஆனா ஜஸ்ட் மிஸ் ஆயிடுச்சி – ஷ்ரேயாஸ் ஐயர்

Shreyas-2
- Advertisement -

நடப்பு ஐபிஎல் தொடரின் 66-வது லீக் போட்டி நேற்று டி.ஒய் பாட்டில் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் கே.எல் ராகுல் தலைமையிலான லக்னோ அணியும், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா அணியும் மோதின. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற லக்னோ அணியின் கேப்டன் ராகுல் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி முதலில் விளையாடிய லக்னோ அணி விக்கெட் இழப்பின்றி 20 ஓவர்களில் 210 ரன்கள் குவித்து அசத்தியது. துவக்க வீரர்களான டிகாக் 140 ரன்களும், ராகுல் 68 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இறுதிவரை களத்தில் இருந்தனர்.

Quinton De Kock KL Rahul 2

- Advertisement -

பின்னர் 211 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய கொல்கத்தா அணியானது 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 208 ரன்கள் குவித்து 2 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்த போட்டியில் கொல்கத்தா அணியின் துவக்க வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தாலும் அடுத்து வந்த ராணா, ஸ்ரேயாஸ் அய்யர், சாம் பில்லிங்ஸ் போன்ற வீரர்கள் தங்களது சிறப்பான பங்களிப்பை வழங்கினர்.

இதனால் இறுதிகட்டத்தில் கொல்கத்தா அணிக்கு வெற்றிக்கான ஒரு வாய்ப்பும் இருந்தது. அதிலும் குறிப்பாக ரிங்கு சிங் மற்றும் சுனில் நரேன் ஆகியோர் இருக்கையில் கொல்கத்தா அணி கிட்டத்தட்ட வெற்றியை நோக்கி சென்று விட்டது என்றே கூறலாம். இறுதிநேரத்தில் 2 பந்துகளில் 3 ரன்கள் தேவை என்ற நிலையில் கடைசி ஓவரின் 5-வது பந்தில் ரிங்கு சிங்கும் கடைசி பந்தில் உமேஷ் யாதவும் ஆட்டமிழக்க லக்னோ அணி திரில் வெற்றியை பெற்றது.

rinku

இந்த போட்டியில் இறுதி நேரத்தில் அதிரடியாக விளையாடிய ரிங்கு சிங் 15 பந்துகளில் 4 சிக்ஸர் மற்றும் 2 பவுண்டரி என 40 ரன்கள் எடுத்தார். அவர் ஆட்டமிழக்கும் முன் வரை கொல்கத்தா அணி எளிதாக வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் அவரது விக்கெட் விழுந்தது கொல்கத்தா அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்தது.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தோல்வி குறித்து பேசிய ஸ்ரேயாஸ் அய்யர் கூறுகையில் : இந்த போட்டியில் தோல்வி அடைந்தது குறித்து நான் வருத்தப்படவில்லை. ஏனெனில் உண்மையாகவே சிறப்பான போட்டி ஒன்றில் நாங்கள் விளையாடி உள்ளோம். இந்த போட்டியின் இறுதி நேரத்தில் ரிங்கு சிங்கால் எங்களை வெற்றிக்கு அழைத்துச் செல்ல முடியாமல் போனது வருத்தம் தான். நிச்சயம் அவர் எங்கள் அணியை வெற்றிக்கு அழைத்து செல்வார் என்று நம்பினேன். இறுதியில் அவர் இன்று ஹீரோ ஆக முடியாமல் போனது துரதிர்ஷ்டம் தான்.

இதையும் படிங்க : ஐபிஎல் முடிந்தவுடன் 2 இந்திய அணி, புதிய கோச்சாகும் ஜாம்பவான் ! பிசிசிஐ சூப்பர் பிளான்

இருந்தாலும் இந்த போட்டியில் அவரது ஆட்டம் மிகச் சிறப்பாக இருந்தது. அவரின் இந்த ஆட்டத்தை நினைத்து நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் என்று கொல்கத்தா அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement