ஐபிஎல் முடிந்தவுடன் 2 இந்திய அணி, புதிய கோச்சாகும் ஜாம்பவான் ! பிசிசிஐ சூப்பர் பிளான்

Indian Team
Advertisement

ஐபிஎல் 2022 தொடர் உச்சகட்ட பரபரப்பை எட்டி இறுதி கட்டத்தை நெருங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் தற்போது நடைபெற்று வரும் 70 போட்டிகள் கொண்ட லீக் சுற்று போட்டிகள் வரும் மே 22-ஆம் தேதியுடன் நிறைவுக்கு வரும் நிலையில் மே 24-ஆம் தேதி முதல் துவங்கும் வெற்றியாளரை தீர்மானிக்கும் பிளே ஆப் சுற்றின் இறுதியில் சாம்பியன் பட்டத்தை நிர்ணயிக்கும் மாபெரும் இறுதி போட்டி வரும் மே 29-ஆம் தேதி அகமதாபாத் நகரில் நடைபெற்று வருகிறது.

IPL 2022 (2)

அத்துடன் ஐபிஎல் 2022 தொடரும் நிறைவுக்கு வரும் நிலையில் வரும் ஜூன் 9-ஆம் தேதி முதல் சொந்த மண்ணில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியா பங்கேற்கும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் துவங்குகிறது. அந்த தொடரில் ரோகித் சர்மா, விராட் கோலி போன்ற தொடர்ச்சியாக விளையாடி வரும் முக்கியமான மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

அயர்லாந்து தொடர்:
அந்த தொடரில் தற்போதைய ஐபிஎல் தொடரில் அசத்தி வரும் தினேஷ் கார்த்திக் போன்ற மூத்த வீரர்களுக்கும் குல்தீப் யாதவ், நடராஜன் போன்ற பார்ம் மற்றும் காயத்தால் இடங்களை இழந்த வீரர்களுக்கும் உம்ரான் மாலிக், அர்ஷிதீப் சிங் போன்ற இளம் வீரர்களுக்கும் வாய்ப்பளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரும் ஜூன் 19-ஆம் தேதி நிறைவுக்கு வரும் அந்த தொடருக்குப் பின் அடுத்த 5 நாட்களுக்குள் ஜூன் 26-ஆம் தேதி அயர்லாந்துக்கு பறக்கும் இந்தியா அங்கு மே 27, 28 ஆகிய தேதிகளில் 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்க உள்ளது.

IND vs IRE

அதற்கு அடுத்த 2 – 3 நாட்களில் பக்கத்தில் இருக்கும் இங்கிலாந்திற்கு எதிராக கடந்த வருடம் கிடப்பில் போட்டு வந்த 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் கடைசி டெஸ்ட் போட்டி ஜூலை 1-ஆம் தேதி துவங்க உள்ளது. அதாவது அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் அடுத்தடுத்து 2 – 3 நாட்களுக்குள் இந்தியா விளையாட வேண்டியுள்ளது. ஆனால் தென் ஆப்பிரிக்கா தொடரை முடித்துக்கொண்டு அயர்லாந்துக்கு சென்று உடனடியாக இங்கிலாந்திற்கும் சென்று அடுத்தடுத்த கிரிக்கெட் தொடரில் பங்கேற்பது ஒரு இந்திய அணிக்கு சாத்தியமற்ற ஒன்றாகும்.

- Advertisement -

2 இந்திய அணி:
ஏனெனில் பயண நேரம் மற்றும் பயிற்சி நேரம் போன்றவை கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது. அதற்கு தீர்வாக ஐபிஎல் தொடர் முடிந்ததும் 2 இந்திய அணி தேர்வு செய்யப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

INDvsENG

1. அதாவது தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெறும் டி20 தொடரில் ரோகித் சர்மா போன்ற மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளித்து விட்டு ஷிகர் தவான் அல்லது பாண்டியா போன்றவர்களின் தலைமையில் நிறைய இளம் வீரர்களுடன் கூடிய இளம் இந்திய அணி தேர்வு செய்யப்பட உள்ளது. அதே அணிதான் அயர்லாந்துக்கும் சென்று விளையாட உள்ளது.

- Advertisement -

2. அந்த அணிக்கு முன்னாள் இந்திய ஜாம்பவான் மற்றும் தற்போதைய தேசிய கிரிக்கெட் அகடமி இயக்குனர் விவிஎஸ் லக்ஷ்மன் பயிற்சியாளராக நியமிக்கப்பட உள்ளார்.

Laxman

3. மறுபுறம் தென் ஆப்பிரிக்க தொடரின் முடிவில் வழக்கம்போல ரோகித் சர்மா தலைமையில் விராட் கோலி போன்ற வீரர்கள் அடங்கிய முதன்மையான இந்திய அணி ஏற்கனவே தலைமை பயிற்சியாளராக இருக்கும் ராகுல் டிராவிட் தலைமையில் இங்கிலாந்துக்குச் சென்று அங்கு 1 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் பங்கேற்க உள்ளது.

- Advertisement -

கோச்சாக லக்ஷ்மன்:
ஏற்கனவே கடந்த 2021இல் இலங்கை மண்ணில் நடைபெற்ற கிரிக்கெட் தொடரில் இதேபோல் ஷிகர் தவான் தலைமையிலான நிறைய இளம் வீரர்கள் அடங்கிய இந்திய அணியை அப்போதைய தேசிய கிரிக்கெட் அகடமி இயக்குனராக இருந்த ராகுல் டிராவிட் தற்காலிக பயிற்சியாளராக பொறுப்பேற்று வழி நடத்தினார். அதே நேரத்தில் விராட் கோலி – ரவி சாஸ்திரி தலைமையிலான முதன்மையான இந்திய அணி இங்கிலாந்தில் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் மற்றும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது ரசிகர்களுக்கு நினைவிருக்கலாம். தற்போதும் அதே மாதிரியான திட்டத்தை தான் பிசிசிஐ மீண்டும் கையில் எடுத்துள்ளது.

dravid

முந்தைய காலங்களில் இந்திய அண்டர்-19, இந்தியா ஏ ஆகிய அணிகளின் பயிற்சியாளராகவும் தேசிய கிரிக்கெட் அகடமியில் இயக்குனராகவும் இருந்த ராகுல் டிராவிட் ஷிகர் தவான் தலைமையிலான இளம் இந்திய அணிக்கு தற்காலிக பயிற்சியாளராக இருந்து நாளடைவில் தற்போது முழுநேர பயிற்சியாளராக மாறியுள்ளார்.

இதையும் படிங்க : கெயிலுக்கே அந்த பிரச்சனை வந்திருக்கு. எனக்கு வராதா? – பேட்டிங் குறித்த கேள்விக்கு பதிலளித்த இஷான் கிஷன்

அதேபோல் கடந்த பிப்ரவரியில் வெஸ்ட் இண்டீசில் நடந்த அண்டர்-19 உலக கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பயிற்சியாளராக இருந்த ஜாம்பவான் லக்ஷ்மன் தற்போது தேசிய கிரிக்கெட் அணியின் இயக்குனராக இருந்தாலும் இளம் இந்திய அணிக்கு பயிற்சியாளராக செயல்பட உள்ளார். எனவே வரும் காலங்களில் டிராவிட்டுக்கு பின் இவர் தலைமை பயிற்சியாளராகவும் அதிக வாய்ப்புள்ளது. மொத்தத்தில் ஒரே நேரத்தில் மீண்டும் 2 இந்திய அணி விளையாட போவது இந்திய ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாகும்.

Advertisement