கெயிலுக்கே அந்த பிரச்சனை வந்திருக்கு. எனக்கு வராதா? – பேட்டிங் குறித்த கேள்விக்கு பதிலளித்த இஷான் கிஷன்

Ishan-1
- Advertisement -

மும்பை நகரில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் 2022 தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான 5 கோப்பைகளை வென்ற வெற்றிகரமான ஐபிஎல் அணியாக சாதனை படைத்துள்ள மும்பை இந்தியன்ஸ் 6-வது முறையாக கோப்பையை வெல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மோசமான பேட்டிங் சுமாரான பவுலிங் என முதல் 8 போட்டிகளில் வரிசையாக தோற்ற அந்த அணி வரலாற்றிலேயே முதல் 8 போட்டிகளில் தோல்வியடைந்த முதல் அணி என்ற சாதனையுடன் பிளே ஆப் சுற்றுக்கு கூட தகுதி பெற முடியாமல் முதல் அணியாக வெளியேறியது.

MI Jaspirt Bumrah

இதுவரை பங்கேற்ற 13 போட்டிகளில் 10 தோல்விகளை பதிவு செய்துள்ள மும்பை வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு சீசனில் 10 தோல்விகளை பெற்று மோசமான சாதனை படைத்துள்ளது. அதைவிட வரலாற்றில் ஒரு முறை கூட புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பிடிக்காத அந்த அணி இம்முறை 10-வது இடத்தில் திண்டாடுவதால் அந்த அவமானத்தையும் சந்திக்க தயாராகி வருகிறது.

- Advertisement -

சொதப்பிய இஷான்:
இந்த தோல்விகளுக்கு கடந்த பிப்ரவரியில் நடந்த ஏலத்தின் போது மும்பை அணி நிர்வாகம் செய்த தவறுகளும் முக்கிய காரணமாக அமைந்தது. ஏனெனில் விளையாட மாட்டார் எனத் தெரிந்தும் ஜோப்ரா ஆர்ச்சரை 8 கோடியை இலவச சம்பளமாக கொடுத்து வாங்கிய அந்த அணி இளம் வீரர் இஷான் கிஷனை மீண்டும் வாங்குவதற்காக 15.25 கோடி என்ற பிரம்மாண்ட தொகையை செலவழித்தது. அதன் காரணமாக மேலும் சில தரமான வீரர்களை வாங்கும் வாய்ப்பைப் அந்த அணி கோட்டை விட்டது.

MI vs RR Ishan Kishan

கடந்த சீசன்களில் மிகச் சிறப்பாக விளையாடியதன் வாயிலாக இந்தியாவிற்கு விளையாடும் அளவுக்கு உயர்ந்த இஷன் கிஷன் 15.25 கோடிக்கு வாங்க பட்டதால் மொத்த கவனமும் அவர் பக்கம் திரும்பியது. அதனால் கண்டிப்பாக சிறப்பாக செயல்பட்டே தீரவேண்டும் என்ற தேவையில்லாத அழுத்தம் அவரின் தலை மேல் உட்கார்ந்து மொத்தமாக சொதப்ப வைத்தது. ஏனெனில் முதல் போட்டியில் அதிரடியாக 81* ரன்கள் எடுத்த அவர் அதன்பின் சுமாராக செயல்பட்டு ஒரு கட்டத்தில் டெஸ்ட் இன்னிங்ஸ் போல அதிக பந்துகளில் குறைந்த ரன்களை எடுத்தது மும்பையின் இந்த தோல்விகளுக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

- Advertisement -

கெயிலுடன் ஒப்பீடு:
இதுவரை 13 போட்டிகளில் 3 அரை சதங்கள் உட்பட 370 ரன்களை 30.83 என்ற சராசரியில் 118.21 என்ற சுமாரான ஸ்டிரைக் ரேட்டில் எடுத்துள்ள அவர் நேற்றைய ஹைதராபாத்துக்கு எதிராக மும்பை வெறும் 3 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த போட்டியில் கூட மெதுவாக பேட்டிங் செய்து 34 பந்துகளில் 43 ரன்கள் எடுத்தார். மொத்தத்தில் 15.25 கோடி என்ற தொகைக்கு வாங்கப்பட்ட அவர் அதற்கு ஈடாக செயல்படவில்லை என்பதில் சந்தேகமில்லை.

Ishan-4

இது பற்றி நேற்றைய போட்டிக்குப் பின் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் பேசியது பின்வருமாறு. “நிறைய ஜாம்பவான்கள் கூட நிறைய தருணங்களில் தடுமாறியுள்ளனர். கிறிஸ் கெயில் போன்றவர்கள் கூட அதிரடி காட்டுவதற்கு தேவையான நேரத்தை எடுத்துக் கொள்வதை பார்த்துள்ளேன். ஒவ்வொரு நாளும் புதிது. ஒவ்வொரு போட்டியும் புதிது. சில நாட்களில் உங்களுக்கு நல்ல தொடக்கம் கிடைக்கும். சில நாட்களில் எதிரணி பவுலர்கள் உங்களுக்கு எதிராக திட்டம் தீட்டி சிறப்பாக பந்து வீசுவார்கள். அதே போல் வெளியில் இருப்பவர்கள் விரும்புவதை காட்டிலும் அணி நிர்வாகம் ஒரு திட்டத்தை வைத்திருக்கும்”

- Advertisement -

“கிரிக்கெட்டில் எப்போதும் அனைத்து போட்டிகளிலும் களமிறங்கிய உடனே ஒவ்வொரு பந்தையும் அதிரடியாக அடிக்க முடியாது. உங்களது அணியை நினைத்து பொறுப்புடன் உங்களுக்கு கொடுத்த வேலையை செய்ய வேண்டியுள்ளது. எப்போதும் ஒரே மாதிரியான சூழ்நிலையில் இருக்க முடியாது. ஒருநாள் ஆல் அவுட் ஆவோம், ஒருநாள் மிகப்பெரிய இலக்கையும் சேசிங் செய்வோம். சில நாட்களில் எதிரணியின் பலத்தை ஆராயவேண்டியுள்ளது. குறிப்பாக கடைசி கட்ட ஓவர்களில் சிறப்பாக பந்துவீச அவர்களிடம் சிறப்பான பவுலர்கள் இருக்கிறார்களா இல்லையா, விக்கெட் விழாமல் மெதுவாக ஆட வேண்டுமா அதிரடி காட்ட வேண்டுமா என்பதைப் பற்றி சிந்திக்க வேண்டியுள்ளது” என்று கூறினார்.

ishan kishan

அதாவது எல்லா நாட்களும் எல்லா நேரமும் அதிரடியாக விளையாட முடியாது என்ற தெரிவிக்கும் இஷான் கிசான் கிறிஸ் கெயில் போன்ற ஜாம்பவான்கள் கூட பல முறை தடுமாறியதை பார்த்துள்ளதாக தெரிவிக்கிறார். எனவே முடிந்த அளவுக்கு தம்மால் சிறப்பாக பேட்டிங் செய்ய முயற்சித்து வருவதாகவும் வரும் காலங்களில் சிறப்பாக செயல்படுவேன் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : இதுவரை ஆண்டுதோறும் ஐபிஎல் வரலாற்றில் புள்ளிபட்டியலில் முதலிடம் பிடித்த அணிகளின் பட்டியல்

இருப்பினும் வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பையில் ரோஹித் – ராகுல் ஆகிய தொடக்க வீரர்களுக்கு பேக் அப் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக கருதப்பட்ட அவர் இந்த ஐபிஎல் தொடரில் சுமாராக செயல்பட்டதால் தற்போது இந்திய அணியில் அவருக்கான இடம் சந்தேகமாகியுள்ளது.

Advertisement