இதுவரை ஆண்டுதோறும் ஐபிஎல் வரலாற்றில் புள்ளிபட்டியலில் முதலிடம் பிடித்த அணிகளின் பட்டியல்

IPL 2022
- Advertisement -

ஐபிஎல் என்றாலே ஒவ்வொரு வருடமும் முதலில் நடக்கும் லீக் சுற்றில் சிறப்பாக செயல்பட்டு புள்ளிப் பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்க அனைத்து அணிகளும் கடும் போட்டியிடும். ஏனெனில் அப்போதுதான் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று கோப்பையை வெல்வதற்கான வாய்ப்பு உருவாகும். எனவே கோப்பையை வெல்ல புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிப்பதே வெற்றிக்கான முதல் படி என்ற நிலையில் களமிறங்கும் அனைத்து அணிகளுமே முதல் இடத்தைப் பிடிப்பதற்காகவே முழு மூச்சுடன் விளையாடுகின்றன.

IPL 2022 (2)

- Advertisement -

ஏனெனில் ஐசிசி நடத்தும் உலக கோப்பைகளில் கூட நாக்அவுட் சுற்று நேரடியாக 2 அரையிறுதிப் போட்டிகளுடன் நிறைவு பெற்றுவிடும். ஆனால் ஐபிஎல் தொடரில் வித்தியாசமாக முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் நாக்-அவுட் சுற்றில் குவாலிபயர் 1 போட்டியில் தோற்றாலும் மீண்டும் எலிமினேட்டர் போட்டியில் ஒரு வாய்ப்பு அளிக்கப்படும். அந்த அளவுக்கு முதலிடம் என்பது ஒரு மிகப்பெரிய பெருமை என்ற சூழ்நிலையில் முதல் 4 இடங்களை பிடிப்பதற்கே கடினமாக உழைக்க வேண்டியுள்ள நிலையில் முதலிடத்தை பிடிக்க ஆரம்பம் முதலே சுணக்கம் இல்லாமல் எதிரணிகளை பந்தாடி தொடர் வெற்றிகளை பெற்று வெற்றி நடை போட வேண்டும்.

இந்த வருடம் 8 அணிகளுக்கு பதிலாக 10 அணிகள் விளையாடுவதால் அதற்கான போட்டியும் முன்பை விட பல மடங்கு அதிகரித்துள்ளது. அதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மும்பையும் சென்னையும் தொடர் தோல்விகளால் வெளியேறி அதிர்ச்சியளித்த நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் அதுவும் கேப்டன்ஷிப் அனுபவமில்லாத பாண்டியா தலைமையில் அசத்திய குஜராத் முதல் சீசனிலேயே முதலிடத்தை பிடித்து பிளே ஆஃப் சுற்றுக்கு சென்று சாதனை படைத்துள்ளது. இந்த தருணத்தில் ஐபிஎல் வரலாற்றில் ஒவ்வொரு வருடமும் முதல் இடங்களை பிடித்த அணிகளை பற்றி பார்ப்போம்:

Shane Warne Rajasthan Royals RR IPL 2008

1. உலகின் நம்பர் ஒன் டி20 தொடராக உருவெடுத்துள்ள ஐபிஎல் தொடர் துவங்கப்பட்ட 2008இல் 8 அணிகள் விளையாடிய நிலையில் பஞ்சாப், சென்னை, டெல்லி ஆகிய அணிகள் முறையே 10, 8, 7 வெற்றிகளுடன் முறையே 2, 3, 4 ஆகிய இடங்களை பிடித்தது.

- Advertisement -

அதில் ஜாம்பவான் ஷேன் வார்னே தலைமையில் 14 போட்டிகளில் 11 வெற்றிகளுடன் முதலிடம் பிடித்த ராஜஸ்தான் ராயல்ஸ் அதன்பின் சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தது.

Rohit Sharma Deccan Chargers

2. ஐபிஎல் 2009இல் அசத்திய சேவாக் தலைமையிலான டெல்லி 14 போட்டிகளில் 10 வெற்றிகளுடன் 20 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தது. மேலும் சென்னை, பெங்களூரு, அப்போதைய டெக்கான் சார்ஜர்ஸ் ஆகிய அணிகள் முறையே 8, 8, 7 வெற்றிகளுடன் அடுத்த 3 இடங்களைப் பிடித்தன.ஆனால் இறுதிப் போட்டியில் பெங்களூருவை சாய்த்த 4-வது இடத்தை பிடித்த ஆடம் கில்கிறிஸ்ட் தலைமையிலான டெக்கான் சார்ஜர்ஸ் சாம்பியன் பட்டத்தை ருசித்தது.

- Advertisement -

3. ஐபிஎல் 2010இல் 14 போட்டிகளில் 10 வெற்றிகளுடன் 20 புள்ளிகளுடன் மும்பை முதலிடம் பிடித்தது. மேலும் டெக்கான், சென்னை, பெங்களூரு ஆகிய அணிகள் முறையே 8, 7, 7 வெற்றிகளுடன் எஞ்சிய 3 இடங்களை பிடித்தன. அதன்பின் நடந்த பைனலில் முதலிடம் பிடித்த சச்சின் தலைமையிலான மும்பையை தோற்கடித்த எம்எஸ் தோனியின் சென்னை முதல் சாம்பியன் பட்டத்தை வென்றது.

CSk

4. ஐபிஎல் 2011இல் முதல் முறையாக 10 அணிகள் விளையாடிய போது ரன்ரேட் அடிப்படையில் 14 போட்டிகளில் 9 வெற்றிகளுடன் பெங்களூரு முதலிடம் பிடித்தது. சென்னை, மும்பை, கொல்கத்தா ஆகிய அணிகள் முறையே 9, 9, 8 வெற்றிகளுடன் ரன்ரேட் அடிப்படையில் அடுத்த 3 இடங்களை பிடித்தன. இறுதியில் முதலிடத்தைப் பிடித்த பெங்களூருவை தோற்கடித்த சென்னை சாம்பியன் பட்டத்தை தக்க வைத்த முதல் அணியாக சாதனை படைத்தது.

- Advertisement -

5. ஐபிஎல் 2012 தொடரில் கொச்சி அணி நீக்கப்பட்டதால் 9 அணிகள் விளையாடி நிலையில் 16 போட்டிகளில் 11 வெற்றிகளைப் பெற்ற டெல்லி முதலிடம் பிடித்தது. கொல்கத்தா, மும்பை, சென்னை ஆகிய அணிகள் முறையே 10, 10, 8 அடுத்த 4 இடங்களை பிடித்தன.

Gambhir

இறுதியில் 4-வது இடம் பிடித்த சென்னை பைனலுக்கு சென்ற போதிலும் ஹாட்ரிக் கோப்பையை வெல்ல விடாமல் தோற்கடித்த கொல்கத்தா முதல் சாம்பியன் பட்டம் வென்றது.

6. ஐபிஎல் 2013இல் 9 அணிகள் பங்கேற்ற நிலையில் 16 போட்டிகளில் 11 வெற்றிகளைப் பெற்ற சென்னை ரன்ரேட் அடிப்படையில் முதலிடம் பிடித்தது. 11, 10, 10 ஆகிய வெற்றிகளுடன் ரன்ரேட் அடிப்படையில் முறையே மும்பை, ராஜஸ்தான், ஹைதராபாத் ஆகிய அணிகள் எஞ்சிய 3 இடங்களைப் பிடித்தன. இறுதியில் முதலிடத்தைப் பிடித்த சென்னையை தோற்கடித்த ரோகித் சர்மாவின் மும்பை முதல் கோப்பையை முத்தமிட்டது.

mumbai

7. ஐபிஎல் 2014இல் மீண்டும் 8 அணிகள் பங்கேற்ற நிலையில் 14 போட்டிகளில் அட்டகாசமாக 11 வெற்றிகளைப் பெற்ற பஞ்சாப் முதலிடம் பிடித்தது. கொல்கத்தா, சென்னை, மும்பை ஆகிய 3 அணிகள் முறையே 9, 9, 7 வெற்றிகளுடன் அடுத்த 3 இடங்களைப் பிடித்தன. இறுதியில் முதலிடம் பிடித்து ஆசை ஆசையாய் வந்த பஞ்சாப்பை முதல் கோப்பையை வெல்ல விடாமல் செய்த கொல்கத்தா 2-ஆவது கோப்பையை வென்றது.

8. ஐபிஎல் 2015 தொடரில் 14 போட்டிகளில் 9 வெற்றிகளைப் பெற்ற தோனியின் சென்னை முதலிடம் பிடித்து அசத்தியது. 8, 7, 7 ஆகிய வெற்றிகளுடன் முறையே மும்பை, பெங்களூரு, ராஜஸ்தான் ஆகிய அணிகள் எஞ்சிய 3 இடங்களைப் பிடித்து பிளே ஆப் சுற்றுக்கு சென்றன. இறுதியில் முதலிடத்தைப் பிடித்த சென்னையை தோற்கடித்த மும்பை 2-வது முறையாக கோப்பையை வென்றது.

9. 2016இல் சூதாட்ட புகாரால் சென்னை, ராஜஸ்தான் தடைபெற்றதால் புனே, குஜராத் ஆகிய புதிய 2 அணிகளுடன் 8 அணிகள் பங்கேற்றன. அதில் முதல் சீசனிலேயே அசத்திய ரெய்னா தலைமையிலான குஜராத் 14 போட்டிகளில் 9 வெற்றிகளுடன் முதலிடம் பிடிக்க எஞ்சிய 3 இடங்களை பெங்களூரு, ஹைதராபாத், கொல்கத்தா ஆகிய அணிகள் தலா 8 வெற்றிகளுடன் ரன்ரேட் அடிப்படையில் பிடித்தன. இறுதியில் விராட் கோலியின் பெங்களூருவை வெறும் 8 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த ஹைதராபாத் முதல் கோப்பையை வென்றது.

10. 2017இல் 14 போட்டிகளில் 10 வெற்றிகளை சுவைத்த மும்பை புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்து இறுதிப்போட்டியில் புனேவை வெறும் 1 ரன் வித்தியாசத்தில் தோற்கடித்து 3-வது கோப்பையை வென்றது. அந்த ஆண்டு 2, 3, 4 ஆகிய இடங்களை முறையே புனே, ஹைதராபாத், கொல்கத்தா ஆகிய அணிகள் முறையே 9, 8, 8 வெற்றிகளுடன் பெற்றன.

Ganguly-ipl
IPL MI

11. 2018இல் 14 போட்டிகளில் 9 வெற்றிகளைப் பெற்ற ஹைதராபாத் முதலிடம் பிடித்தது. எஞ்சிய 3 இடங்களை சென்னை, கொல்கத்தா, ராஜஸ்தான் ஆகிய அணிகள் முறையே 9, 8, 7 வெற்றிகளுடன் பிடித்தன. இறுதியில் ஷேன் வாட்சன் அதிரடியாக சதமடிக்க முதலிடம் பிடித்த ஹைதெராபாத்தை தோற்கடித்த சென்னை தடையிலிருந்து மீண்டு வந்த முதல் வருடத்திலேயே 3-வது முறையாக கோப்பையை வென்றது.

12. 2019இல் மும்பை, சென்னை, டெல்லி ஆகிய அணிகள் தலா 9 வெற்றிகளுடன் ரன்ரேட் அடிப்படையில் முதல் 3 இடங்களைப் பிடிக்க ஹைதராபாத் மட்டும் 6 வெற்றியுடன் ரன்ரேட் அடிப்படையில் 4-வது இடத்தை பிடித்த ஆச்சர்யப்படுத்தியது. ஆனாலும் இறுதிப் போட்டியில் சென்னையை வெறும் 1 ரன் வித்யாசத்தில் தோற்கடித்த மும்பை 4-வது கோப்பை வென்றது.

csk 1

13. துபாயில் நடைபெற்ற 2020 தொடரில் ரோகித் சர்மாவின் மும்பை 14 போட்டிகளில் 9 வெற்றிகளுடன் முதலிடம் பிடித்தது. 8, 7, 7 ஆகிய வெற்றிகளுடன் முறையே டெல்லி, ஹைதராபாத், பெங்களூரு ஆகிய அணிகள் எஞ்சிய 3 இடங்களைப் பிடித்தன. இறுதியில் 2-வது இடத்தைப் பிடித்த டெல்லியை முதல் கோப்பையை வெல்ல விடாமல் செய்த மும்பை 5-வது கோப்பையை வென்று வெற்றிகரமான அணியாக சாதனை படைத்தது.

14. கடந்த 2021 ஐபிஎல் தொடரில் 14 போட்டிகளில் 10 வெற்றிகளை சுவைத்த டெல்லி முதலிடம் பிடிக்க 9, 9, 7 வெற்றிகளைப் பெற்ற சென்னை, பெங்களூரு, கொல்கத்தா ஆகிய அணிகள் அடுத்த 3 இடங்களை பிடித்தன. இறுதியில் 4-வது இடம் பிடித்த கொல்கத்தாவை தோற்கடித்த சென்னை 4-வது கோப்பையை வென்றது.

Advertisement