IPL 2023 : தோனி, டிகே, மில்லர் உள்ளிட்ட அனைவரையும் மிஞ்சிய ரிங்கு சிங் – லேட்டஸ்ட் ஃபினிஷராக படைத்த 3 சாதனை இதோ

Rinku SIngh
- Advertisement -

இறுதி கட்டத்தை எட்டியுள்ள ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் மே 20ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற 68வது லீக் போட்டியில் கொல்கத்தாவை வெறும் 1 ரன் வித்தியாசத்தில் தோற்கடித்த லக்னோ 3வது அணியாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது. நிச்சயம் வென்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் களமிறங்கிய அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ நிக்கோலஸ் பூரான் 58 (30) ரன்கள் எடுத்த அதிரடியில் 20 ஓவர்களில் 176/8 ரன்கள் குவித்தது. அதைத் துரத்திய கொல்கத்தாவுக்கு ஜேசன் ராய் 45 (28), வெங்கடேஷ் ஐயர் 24 (15) என தொடக்க வீரர்கள் நல்ல ரன்களை எடுத்து அவுட்டானார்கள்.

ஆனால் அடுத்து வந்த கேப்டன் நிதிஷ் ராணா 8, ரஹ்மதுல்லா குர்பாஸ் 10 என முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றிய நிலையில் நம்பிக்கை நட்சத்திரம் ரிங்கு சிங் நங்கூரமாக நின்று வெற்றிக்கு போராடினார். இருப்பினும் எதிர்ப்புறம் ஆன்றே ரசல் 8, ஷார்துல் தாகூர் 3 என முக்கிய பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டானதால் கொல்கத்தாவின் தோல்வி உறுதியானாலும் மறுபுறம் நேரம் செல்ல செல்ல அதிரடியாக விளையாடி நவீன்-உல்-ஹக் வீசிய 19வது ஓவரில் 4, 4, 4, 2, 6 என 20 ரன்களை விளாசிய ரிங்கு சிங் அரை சதமடித்து வெற்றிக்கு போராடினார்.

- Advertisement -

லேட்டஸ்ட் ஃபினிஷர்:
அதனால் வெற்றியை நெருங்கிய கொல்கத்தாவுக்கு யாஷ் தாகூர் வீசிய கடைசி ஓவரில் 21 ரன்கள் தேவைப்பட்ட போது முதல் 3 பந்துகளில் பெரிய ரன்களை எடுக்க தவறிய அவர் கடைசி 3 பந்துகளில் 6, 4, 6 என அடுத்தடுத்த பவுண்டரிகளை பறக்க விட்டு 67* (33) ரன்கள் குவித்தும் இதர வீரர்கள் கை கொடுக்க தவறியதால் நூலிழைலையில் வெற்றி பறிபோனது. ஆனாலும் இந்த சீசனில் ஏற்கனவே குஜராத்துக்கு எதிராக கடைசி 5 பந்துகளில் 29 ரன்கள் தேவைப்பட்ட போது அடுத்தடுத்த 5 சிக்சர்களை தெறிக்க விட்டு வரலாறு காணாத சரித்திர வெற்றியை பெற்றுக் கொடுத்த அவர் பஞ்சாப்புக்கு எதிரான போட்டியிலும் கடைசி பந்தில் 2 ரன்கள் தேவைப்பட்ட போது பவுண்டரியை விளாசி வெற்றி பெற வைத்தார்.

அதனால் ஐபிஎல் வரலாற்றில் ஒரே சீசனில் 2 போட்டிகளில் கடைசி பந்தில் வெற்றி பெறும் ரன்களை அடித்த முதல் வீரர் என்ற தோனி, மில்லர் போன்ற யாருமே படைக்காத சாதனையை படைத்த அவர் வருங்கால ஃபினிஷராக ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார். அதை மேலும் உறுதிப்படுத்தும் வகையில் இந்த வருடம் 20வது ஓவரில் மட்டும் ரிங்கு சிங் 9 சிக்ஸர்கள் அடித்துள்ளார். இதன் வாயிலாக ஐபிஎல் வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட சீசனில் 20வது ஓவரில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற தோனி, ரோஹித் சர்மா, ஹர்டிக் பாண்டியா ஆகியோரது ஆல் டைம் சாதனையை தகர்த்த அவர் புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. ரிங்கு சிங் : 9* (2023)
2. ட்வயன் ப்ராவோ : 8 (2012)
3. ரோகித் சர்மா : 8 (2013)
4. எம்எஸ் தோனி : 8 (2014)
5. எம்எஸ் தோனி : 8 (2019)
6. ஹர்டிக் பாண்டியா : 8 (2019)

- Advertisement -

அத்துடன் குஜராத்துக்கு எதிரான போட்டியிலும் இந்த போட்டியிலும் கடைசி 2 ஓவர்களில் அவர் 30 ரன்களுக்கு மேல் அடித்துள்ளார். இதன் வாயிலாக ஐபிஎல் வரலாற்றில் சேசிங் செய்த போட்டிகளில் கடைசி 2 ஓவர்களில் 2 முறை 30+ ரன்கள் அடித்த பேட்ஸ்மேன் என்ற தோனியின் சாதனையை ரிங்கு சிங் சமன் செய்துள்ளார். அவர்களுக்கு அடுத்தபடியாக டிம் டேவிட், ஜேம்ஸ் பால்க்னர், டேவிட் மில்லர், நிக்கோலஸ் பூரான் ஆகியோர் தலா 1 முறை 30+ ரன்கள் எடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:IPL 2023 : இரண்டே வருடத்தில் ரெய்னா – ஹசியை மிஞ்சிய ருதுராஜ் – கான்வே, ஐபிஎல் வரலாற்றின் மாஸ் சிஎஸ்கே ஜோடியாக சாதனை

அதை விட இந்த சீசனில் அனைத்து போட்டிகளிலும் 5வது இடத்தில் களமிறங்கி மொத்தமாக 474 ரன்கள் எடுத்துள்ள அவர் ஐபிஎல் வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட தொடரில் 5 அல்லது அதற்கு கீழ் வரிசையில் களமிறங்கி அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற தினேஷ் கார்த்திக் சாதனையை தூளாக்கி புதிய சாதனை படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. ரிங்கு சிங் : 474* (2023)
2. தினேஷ் கார்த்திக் : 472 (2018)
3. டேவிட் மில்லர் : 437 (2022)
4. கைரன் பொல்லார்ட் : 418 (2013)
5. ஆண்ட்ரே ரசல் : 406 (2019)

Advertisement