IPL 2023 : இரண்டே வருடத்தில் ரெய்னா – ஹசியை மிஞ்சிய ருதுராஜ் – கான்வே, ஐபிஎல் வரலாற்றின் மாஸ் சிஎஸ்கே ஜோடியாக சாதனை

Devon Conway
- Advertisement -

உச்சக்கட்டத்தை எட்டியுள்ள ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் 5வது கோப்பையை வெல்லும் முனைப்புடன் களமிறங்கிய எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் தங்களுடைய லீக் சுற்றின் முடிவில் 14 போட்டிகளில் 8 வெற்றிகளை பதிவு செய்து பிளே ஆப் சுற்றுக்கு 2வது அணியாக அதிகாரப்பூர்வமாக தகுதி பெற்றுள்ளது. குறிப்பாக டெல்லிக்கு எதிராக நடைபெற்ற கடைசி லீக் போட்டியில் 77 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற அந்த அணி வரலாற்றில் களமிறங்கிய 14 சீசனங்களில் 12வது முறையாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று தங்களை வெற்றிகரமான அணி என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது.

DC vs CSK

- Advertisement -

அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை 20 ஓவர்களில் 223/3 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக தொடக்க வீரர்கள் ருதுராஜ் கைக்வாட் 79 (50) ரன்களும் டேவோன் கான்வே 87 (62) ரன்களும் எடுத்தனர். அதைத் துரத்திய டெல்லிக்கு கேப்டன் டேவிட் வார்னர் வழக்கம் போல தனி ஒருவனாக 86 (58) ரன்கள் எடுத்துப் போராடியும் இதர பேட்ஸ்மேன்கள் ஏமாற்றத்தை கொடுத்தனர். அதனால் 20 ஓவரில் டெல்லியை 146/9 ரன்களுக்கு கட்டுப்படுத்தி அபார வெற்றி பெற்ற சென்னை சார்பில் அதிகபட்சமாக தீபக் சஹார் 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.

சாதனை ஜோடி:
அப்படி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற இப்போட்டியில் நிச்சயம் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் முதலில் பேட்டிங் செய்த சென்னைக்கு பொறுப்புடன் டெல்லி பவுலர்களை முதல் ஓவரிலிருந்தே திறம்பட எதிர்கொண்ட ருதுராஜ் – கான்வே ஜோடி 15 ஓவர்கள் வரை நிலைத்து நின்று 141 ரன்கள் மெகா ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து ஆரம்பத்திலேயே வெற்றியை உறுதி செய்தனர் என்று சொல்லலாம். முன்னதாக கடந்த 2018இல் மீண்டும் திரும்பிய சென்னைக்கு ராயுடு – ஷேன் வாட்சன், டு பிளேசிஸ் – ஷேன் வாட்சன் ஆகியோர் மிகச்சிறந்த தொடக்க வீரர்களாக செயல்பட்டு வெற்றிகளில் பங்காற்றினர்.

ruturaj

 

- Advertisement -

அதை தொடர்ந்து 2020இல் முதல் முறையாக வந்த ருதுராஜ் – டு பிளேசிஸ் உடன் இணைந்து 2021 சீசனில் அபாரமாக செயல்பட்டு 635 ரன்கள் விளாசி ஆரஞ்சு தொப்பியை வென்று சென்னை 4வது கோப்பை வெல்ல முக்கிய பங்காற்றினார். ஆனால் அவருக்கு நிகராக அந்த சீசனில் 633 ரன்கள் குவித்து அசத்தியதை போலவே நீண்ட வருடங்களாக சென்னை அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக செயல்பட்டு வந்த டு பிளேசிஸை கடந்த வருடம் நடைபெற்ற மெகா ஏலத்தில் அந்த அணி நிர்வாகம் தக்க வைக்க தவறியது.

அதை பயன்படுத்தி வாங்கிய பெங்களூருவின் கேப்டனாக தற்போது டு பிளேசிஸ் அபாரமாக செயல்படுவதால் அவரை தவற விட்டு விட்டோமோ என்று சென்னை ரசிகர்கள் அவ்வப்போது ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றனர். இருப்பினும் அவருக்கு பின் ருதுராஜூடன் ஜோடி சேர்ந்த நியூசிலாந்து வீரர் டேவோன் கான்வே 9வது இடத்தை பிடித்த 2022 சீசனிலேயே ஒரு போட்டியில் 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து ஏற்கனவே ஐபிஎல் வரலாற்றில் சென்னை அணிக்காக ஒரு போட்டியில் அதிக ரன்கள் (182) பார்ட்னர்ஷிப் அமைத்த ஓப்பனிங் ஜோடியாக சாதனை படைத்தனர்.

- Advertisement -

Ruturaj-and-Conway

இந்நிலையில் இந்த போட்டியில் அமைத்த 141 ரன்களையும் சேர்த்து இதுவரை அவர்கள் 4 முறை 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்துள்ளனர். இதன் வாயிலாக ஐபிஎல் வரலாற்றில் சென்னை அணிக்காக அதிக முறை 100+ ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த ஜோடி என்ற ரெய்னா – ஹசி சாதனை உடைத்துள்ள அவர்கள் புதிய வரலாறு படைத்துள்ளனர். அந்த பட்டியல்:
1. ருதுராஜ் கைக்வாட் – டேவோன் கான்வே : 4*
2. மைக் ஹசி – சுரேஷ் ரெய்னா : 3
3. ருதுராஜ்/டு பிளேசிஸ், வாட்சன்/டு பிளேசிஸ், முரளி விஜய்/ஹசி, ட்வயன் ஸ்மித்/பிரண்டன் மெக்கலம் : தலா 2

இதையும் படிங்க:CSK vs DC : என்னோட 50 ஆவது மேட்ச்ல இது நடந்ததில் சந்தோசம். வெற்றிக்கு பிறகு – ஆட்டநாயகன் ருதுராஜ் கெய்க்வாட் மகிழ்ச்சி

அந்த வகையில் வரலாற்றில் முரளி விஜய், மைக் ஹசி, மெக்கலம், ஸ்மித், வாட்சன், டு பிளேசிஸ் என சென்னை அணிக்காக விளையாடிய மறக்க முடியாத ஓப்பனிங் ஜோடிகளை வெறும் 2 சீசன்களில் மிஞ்சியுள்ள ருதுராஜ் – கான்வே புதிய சாதனை ஜோடியாக உருவெடுத்துள்ளது. குறிப்பாக டு பிளேசிஸ் போனால் என்ன நான் இருக்கிறேன் என்ற வகையில் கான்வே செயல்படுவது சென்னை ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

Advertisement